குறட்டைப்பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கும்

குறட்டைப்பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கும்

குறட்டை என்பது ஒருவகையான சுவாசக் கோளாறு. தூங்கும் போது மூக்கு மற்றும் தொண்டையின் வழியாக காற்றானது எளிதில் செல்ல முடியாமல் தடை ஏற்படும் போது எழும் சப்தம் தான் குறட்டை. பொதுவாக ஆண்கள் தான் அதிகமாக குறட்டை விடுவார்கள். குறட்டை யை சாதாரணமாக விடக்கூடாது. அதை சரிசெய்ய முயலாவிட்டால், அதனால் பெரும் ஆபத்தை சந்திக்க வேண்டி வரும். எனவே குறட்டை பிரச்சனை உள்ளவர்கள், அதனை சரிசெய்யும் முயற்சியில் உடனடியாக இறங்க வேண்டும்.

இங்கு குறட்டை பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் 3 உணவுகள் குறித்து தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள். ஆலிவ் ஆயில்

 இந்த அற்புத எண்ணெயில் ஏராளமான நன்மைகள உள்ளது. அதில் ஒன்று குறட்டை பிரச்சனையைப் போக்கும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, அத்துடன் வேண்டுமானால் சிறிது இஞ்சி சாற்றினை சேர்த்து, இரவு தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் பருக வேண்டும்.

புதினா புதினா நல்ல நறுமணமிக்கது மட்டுமின்றி, அதில் மயக்க மருந்து தன்மை மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மைகள் உள்ளது. குறட்டை பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லாவிட்டால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், சிறிது புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, இரவு தூங்குவதற்கு முன் வாயைக் கொப்பளித்து வந்தாலும், குறட்டை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ஏலக்காய் இந்த அரேபியன் மசாலாப் பொருளானது, சமையலில் உணவிற்கு நல்ல மணத்தையும் சுவையையும் வழங்குவதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. முக்கியமாக ஏலக்காய் சளியை இளகச் செய்து, சுவாச பிரச்சனைகளைச் சரிசெய்யும்.  அதற்கு தூங்குவதற்கு முன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு சிறிது நேரம் மெல்லவோ அல்லது ஒரு டம்ளர் நீரில் ஏலக்காயை தட்டிப் போட்டு, சிறிது பட்டை மற்றும் தேன் சேர்த்து கலந்து, குடித்து வரவோ செய்யலாம்.

ஊஞ்சல் - Swing- ஆடுவது எதற்காக - தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்

ஊஞ்சல் - Swing- ஆடுவது எதற்காக  - தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்*முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.*

1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.

(This is the reason, when we travel in train, whatever food we have during the journey, is completely digested without any health troubles. Hope many could have experienced this in their life journey)

9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

*பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.*

*சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.*

அறுவகைச் சுவை என்ன என்ன?

அறுவகைச் சுவை என்ன என்ன?நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன என்ன?

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது

திருமணத்தின் போது மோதிரம் போடுவது ஏன்?

திருமணத்தின் போது மோதிரம் போடுவது ஏன்???


வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி? - Share Market Training

Whatapp Number : 91-9094047040 / 91-9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


1,தாலி: தாயாகி தாலாட்டுப்பாட, கணவன் தரும் பரிசு சின்னம்.

2,தோடு: எதையும் வெளியில் சொல்லாமல், காதோடு போட்டு வைத்துக்கொள்.

3,மூக்குத்தி: முதலில் சமையலை, அதன் வாசனையை அறியும் உத்தி, மூக்குக்கு உண்டு என்பதால்.

4,வளையல்: கணவன் உன்னை வளைய வளைய வர வேண்டும் என்பதற்காக.

5,ஒட்டியாணம்: கணவன், மனைவி இருவரும், ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக.

6,மோதிரம்: எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க. இந்த ஆறு நகைகளையும் அணிந்தால் தான், ஒரு பெண்ணின், பெண் தெய்வங்களின் அலங்காரம் முழுமை அடைந்ததாக பொருள். இந்த பலன்களை, பெண்களாகிய நாம் நமக்கேற்றார் போல் மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

எந்த விரலில் அணியலாம் மோதிரம் அணிந்திருக்கும் பெண்களின்
கை தான் வீட்டில், குடும்பத்தில் ஓங்கியிருக்க வேண்டும்; செல்வாக்குடன் விளங்க வேண்டும். மோதிரம் எந்த கையில், எந்த விரலில் அணிந்தால் நல்லது என்பதற்கு, நம் முன்னோர், சில, பல காரணங்களையும், ஆய்வாளர்கள் பல, சில காரணங்களையும் கண்டுபிடித்து, கடைபிடிக்க சொல்லியுள்ளனர்.

நம்முடைய நான்காவது விரலில் தான், மோதிரம் அணிய வேண்டும். அதற்கு பெயரே, மோதிர விரல் தான். நம் ஐந்து விரல்களுமே, நம் ஐந்து சொந்த பந்தங்களை குறிக்கின்றன.
சுண்டு விரல்: நம் பிள்ளைகளை
மோதிர விரல்: வாழ்க்கை துணையை
நடு விரல்: நம்மையே குறிக்கும்.
ஆள்காட்டி விரல்: நம் சகோதரர்களை
பெரு விரல்: பெற்றோரை
சுண்டு விரலில்: மோதிரம் அணிவது வழக்கத்தில் இல்லை, அணிந்தாலும் இதய சக்தி ஓட்டம் தடைப்படும்.
மோதிர விரலில்: ஒவ்வொருவரும், கண்டிப்பாக ஒரு வளையமாவது
அணிந்திருக்க வேண்டும். இதய நோய், வயிற்றுக் கோளாறுகளை தடை செய்யும். இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கும்.
நடு விரலில்: பெரும்பாலானவர்கள் மோதிரம் அணிவதில்லை. இஸ்லாமியத்தில் நடுவிரலில் மோதிரம் அணிவதை, தடை செய்துள்ளதாக ஹதீஸ் தெரிவித்துள்ளது.

முன்பெல்லாம் நபர்களின் முகத்தை வைத்து, குணாதிசயங்களையும்; நடை, உடை பாவனைகளை வைத்து குணத்தையும்; உடம்பில் உள்ள மச்சத்தை வைத்து, சாமுத்திரிகா லட்சணத்தையும் குறிப்பிட்டுச் சொல்வது வழக்கம். தற்போது கை விரல்களையும், அதில் அணியும் மோதிரங்களையும் வைத்தும், ஆராய்ச்சி செய்து நபர்களின் குணாதிசயங்களை கூற முடியும் எனக் கூறப்படுகிறது.
நம் நாட்டு கலாசாரப்படி, மோதிரம் மாற்றிக் கொள்வது நிச்சயம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத்தானே தவிர, அதுவே திருமணம் முடிந்ததற்கு அத்தாட்சி கிடையாது.
ஆள்காட்டி விரலே சிறந்தது
மாணிக்கம், முத்து, கோமேதகம், மரகதம், வைரம், வைடூரியம், பவளம் என, இத்தனை அதிர்ஷ்ட கற்களையும் தங்கம் மற்றும் வெள்ளி உலோகத்தில் பதித்து, மோதிரமாக, பெண்கள், இடது கை மோதிர விரலிலும், ஆண்கள் வலது கை மோதிர விரலிலும் அணிவது, உடம்புக்கு நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி, நல்லது நடக்கும்படியாக நம்
செயல்பாட்டினை வைத்திருக்கும் என்பது காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது.
புஷ்பராகம், கனக புஷ்பராகம் கற்கள் பதித்த வெள்ளி மோதிரம், ஆள்காட்டி விரலிலும், நீலம் கற்களை பதித்த வெள்ளி, பிளாட்டினம் மோதிரத்தை நடு விரலிலும், வைடூரியம் பதித்த வெள்ளி மோதிரத்தை, சுண்டு விரலிலும் அணிகிற வழக்கமும், இப்போது பரவியுள்ளது.
உடம்பில் எந்த நகையாக இருந்தாலும், இந்துக்கள் தங்கத்தில் அணியவே விரும்புகின்றனர். இந்தியா, இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில், வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, தங்கம் ஏற்றது என்பது ஒரு காரணம் என வைத்துக் கொண்டாலும், தங்கம் எப்போதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப்பதால், நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் நம் பெண்களிடம் உள்ளது.
நீள விரலின் மகிமை
ஆள் காட்டி விரலை விட, மோதிர விரல் நீளமாக இருந்தால், ‘ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ்’ என்ற மூட்டு பாதிப்புகள் வரும் சாத்தியக்கூறு அதிகம்.
மோதிர விரலின் நீளம், அளவை வைத்து, இதயநோய், புற்று நோய், சளித்தொல்லை போன்ற நோய்கள் உள்ளனவா என்று தெரிந்து, முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும்.
ஆள்காட்டி விரல், மோதிர விரல், இரண்டுக்கும் உள்ள உயரம், இடை
வெளியின் விகிதம் வைத்து, பாலின ஹார்மோன்களை கூட, கணக்கிட்டு கூறமுடியும் என்கிறது ஜெனிவா பல்கலைக் கழகம்.
ஆண்மையின் அடையாளத்தை நிர்ணயிக்கும், ‘டெஸ்டோஸ்டிரோன்’ என்ற ஹார்மோன் அளவு மிகுந்தால், மோதிர விரல் நீளமாகவும், பெண்மையை நிர்ணயிக்கும், ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகம் இருந்தால், ஆள்காட்டி விரல் நீளமாகவும் இருக்குமாம்.
பொதுவாக ஆள்காட்டி விரலை விட, மோதிர விரல், நீளமாக உள்ள ஆண்களைத் தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.மோதிரம் விரலில், மோதிரம் அழுத்தும் இடத்திலிருந்து, நரம்பு நேரிடையாக இதயத்தை போய் சேர்கிறது.
ஐரோப்பிய நாடுகளில், திருமணத்திற்கு முன், இடது கை விரலில் போட்டிருக்கும் மோதிரம், திருமணத்திற்கு பின், வலது கை விரலுக்கு மாற்றப்படுமாம்.
மோதிர விரல் என, பெயர் சூட்டப்பட்டுள்ள நம் கையின் நான்காவது விரலில், திருமணத்தின் போது கண்டிப்பாக மோதிரம் போட வேண்டும். இது, வரதட்சணையாக மாமியார் போட்டாலும் சரி; நமக்கு நாமே போட்டுக் கொண்டாலும் சரி. நம் இல்லற வாழ்க்கையின் அஸ்திவாரமே, நான்காவது விரலில் தான் உள்ளது.
ஆண், பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. நான்காவது விரலில் தான், திருமண மோதிரம் போட வேண்டும் என்பதற்கு, ஒரு நம்பிக்கை கதை உண்டு.
விரல்களை பிரித்தால்…
இரு உள்ளங்கைகளையும், நேருக்கு நேராக இருக்கச் செய்யுங்கள். நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள். ஏனைய விரல்களை நிமிர்த்து ஒட்ட வையுங்கள். இப்போது பெருவிரலை பிரித்துப் பாருங்கள் சுலபமாக பிரிக்க முடியும். அதாவது உங்கள் பெற்றோர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின், உங்களுடன் இருக்க மாட்டார்கள் என்று அர்த்தம். பெரு விரலை திரும்ப ஒட்ட வைத்துவிட்டு, ஆள்காட்டி விரலை பிரியுங்கள்.
உங்களின் சகோதரர்கள், உங்களுடனேயே இருப்பர் என சொல்ல முடியாது என்று பொருள். சுண்டு விரலும், இதே மாதிரி எளிதாக பிரியும். உங்கள் பிள்ளைகளும் உங்களுடனேயே இருப்பர் என நம்ப முடியாது என்பதாக அர்த்தம்.
கடைசியாக, மோதிர விரலை இதே மாதிரி பிரிக்க முயலுங்கள்… கொஞ்சம் கடினம்; உடனே பிரிக்க இயலாது. இதே போல், கணவன், மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, திருமண சடங்குகளில் மோதிரம் அணிவிக்கப்படுகிறது. இது வேடிக்கையான, ஆனால், கொஞ்சம் யோசிக்க வைக்கிற, ஓர் உதாரணம்.
பார்க்க நவ நாகரிகமாக இருந்தாலும், அப்படி இரண்டு விரல்களை சேர்த்து இறுக்கி, மோதிரம் அணிவது, நரம்புகளை பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு பெண், தன் வாழ்நாள் முழுவதும், நகை களை சேர்த்து, பாதுகாத்து வைக்க வேண்டிய சூழ்நிலை, இப்போது உள்ளது. கல்வி, உழைப்பு, திறமை, அறிவு ஆகியவை கைகூடும்போது, இந்த தங்க நகைகளை பற்றிய சிந்தனையும், இவ்வளவு வரவேற்பும், பெண்களிடத்தில் கிடைக்குமா என்பது சந்தேகமே!

மண் குளியல் - இயற்கை வாழ்வியல்

 மண் குளியல் -  இயற்கை வாழ்வியல்*மண் குளியல்*

*(1) செம்மண், களிமண், புற்று மண் (அ) ஒட்டக் கூடிய தன்மை உள்ள எந்த மண்ணையும் பயன் படுத்தலாம்.*

 *மண் குளியல் எடுக்க வேண்டிய  நாளைக்கு முதல் நாள் இரவே மண்ணை நீரில் குழைத்து வைத்து கொள்ள வேண்டும்.*

*இது மண்ணை குளிர்ச்சி அடைய வைத்து தோலுக்கு  தேவையான நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சி அடைய வைக்கிறது.*

*(2) பகல் 12 மணிக்கு முன்னர் எடுக்க வேண்டும்.*

*(3) மிகக் குறைந்த அளவு ஆடைகளே அணிய வேண்டும்.*

*(4) தலை உட்பட எல்லாப் பகுதிகளிலும் மணலை பூசிக் கொள்ள வேண்டும்.  புண்களிலும் பூசலாம்.*

*(5) சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.*

*(6) 1/2 மணி நேரத்திற்கு பிறகு (அ) மணல் முழுமையாக காய்ந்த பிறகு நிழலில் 1/2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.*

*(7) பிறகு பச்சை தண்ணீரில் குளிக்கவும்.  சோப்பு, ஷாம்பூ, சிகைக்காய் எதுவும் தேவையில்லை.  மணலையே நன்றாக தண்ணீர் சேர்த்து தேய்த்து  மெதுவாக மசாஜ் செய்து குளிக்கவும்.*

*(8) கழிவுகள் இம்முறையில் வெமருத்தம்.  வியர்வைத் துளைகள் சுத்தமாகும்.  பிரஷ்ஷாக இருக்கும்.*

*(9) தோல் வியாதிகளான சொரியாஸிஸ், வெண் குஷ்டம் மற்றும் நரம்பு பிரச்சனைகள், வாதம், தொழு நோய் போன்றவற்றிற்கு இது நல்ல பலன்  தரும்.*

*(10)  அபார்ட்மென்ட் மற்றும் நகரங்களில் வாழும் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து இல்லாத நல்ல மணல் கிடைக்கப் பெறாதவர்கள் ’முல்த் தானி மிட்டி‘ என கூறப் படும் மண்ணை பேன்சி ஸ்டோர்களில் வாங்கி பயன் படுத்தலாம்.*

        *நீராவிக் குளியல்*

 *மழைக் காலங்களிலும், குளிர் நாடுகளிலும் நீராவிக் குளியல் பயன் தரும். இந்த இடங்களில் வியர்வை மூலமாக கழிவுகள்  வெளியேறுவது மிகவும் குறைவு.*

 *இந்த குறையை நீராவிக் குளியல் போக்குகிறது. இதை வீடுகளிலேயே எடுக்கலாம். துளசியிலை, வேப்பிலை,  நொச்சி இலை போன்றவற்றை பயன்படுத்தலாம்.*

*பிரஷர் குக்கர் மற்றும் கேஸ் டியூப் போதுமானது.  குக்கரில் தண்ணீர் வைத்து குக்கரை சூடு ப டுத்தவும். கேஸ் டியூப்பை குக்கரில் ஆவி வரும் இடத்தில் பொருத்தவும்.*

 *நீராவிக் குளியல் எடுப்பவரை ஒரு ஸ்டூல் (அ) சேரில் உட்கார வைத்து 3  (அ) 4 போர்வைகள் எடுத்து மூடவும். குக்கரில் இருந்து வரும் நீராவியை போர்வையின் வழியாக உள்ளே செலுத்தவும்.(சிகிச்சை பெறுபவர்  உடலின் மேல் ஆவி படக் கூடாது). பிரஷர் குக்கர் கீழே விழாதவாறு ஒருவர் கவனித்துக் கொள்ள வேண்டும்.*

 *நன்றாக வியர்க்க வேண்டும்.   சிகிச்சை பெறுபவர் இயன்ற வரை உள்ளே இருக்க வேண்டும். சளி, ஆஸ்த்துமா, உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.*

        *முதுகு தண்டு குளியல்*

*இதை எடுக்க தேவையான சாதனம் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும். 1/2 மணி நேரம் முதுகு தண்டு படுமாறு இதில் ப டுக்க வேண்டும்.*

 *பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும்.  முதுகு வலி, முதுகு தண்டு பிரச்னை, உயர் இரத்த நோயாளிகளுக்கு இது பயன்  தரும்.*

*இடுப்புக் குளியல்*

*இதற்கு தேவையான சாதனமும் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும்.  அல்லது ஒருவர் கால்களை வெளியில் விட்டு உட் காரக் கூடிய வகையில் உள்ள பாத்திரத்தையும் பயன்படுத்தலாம்.  பாத்திரம் குட்டையாகவும் அகலமாகவும் இருந்தால் நல்லது.*

 *பாதி பாத்திரத்தில்  நீரை நிரப்பி அதில் அமரவும்.  கால்கள் வெளியில் தரையில் படாதவாறு இருக்க வேண்டும்.*

 *கால்களை மரக்கட்டைகளில் வைத்துக் கொள்ளலாம்.  இதனால் உடலின் காந்த சக்தி தரையில் பாயாதவாறு இருக்கும்.*

 *ஒரு சிறிய துணியை வைத்து வயிற்றை மசாஜ் செய்து கொண்டே இருக்கவும்.   40 நிமிடங்கள் வரை அமரலாம்.  15 நிமிடங்களுக்கு பிறகு குளிக்கலாம்.*

 *ஒரு முறை உபயோகித்த நீரை மீண்டும் உபயோகிக்கக் கூடாது.  இது  வயிறு சம்மந்தமான பிரச்னைகளுக்கு உகந்தது. வயிற்றை குளிர்ச்சி அடைய செய்து எல்லா நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலை கு றைக்கிறது.  தலைவலி மற்றும் காய்ச்சலின் போது இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.*

*கண் குவளை*

*இது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஒரு சிறிய சாதனமாகும். இது இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும்.  அல்லது ஒரு  நீர் நிரம்பிய சிறிய கிண்ணத்தையும் பயன்படுத்தலாம்.*

*இது இரவு நேரம் விழித்து பணி புரிபவர்கள், கணினியில் பணி புரிபவர்கள், டி.வி.  பார்ப்பவர்கள், தூசியில் பணிபுரிபவர்கள், வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கும் பயன்படும்.  இது கண்களை குளிர்ச்சி அடைய வைக்கும்.*

*இந்த குவளையில் கண்ணை  வைத்து இடது மற்றும் வலது புறமாக சுழற்ற வேண்டும். (5 நிமிடங்கள்). முதலில் சிறிது சிரமமாக  இருக்கும்.*

  *இது கண்களை பாதுகாக்க ஒரு எளிய வழியாகும்.*

பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்...

இரத்த அழுத்தம் என்றால் என்ன?

இரத்த அழுத்தம் என்றால் என்ன?


✨ ஏன் ஏற்படுகிறது?

✨  எப்படி குணமாக்குவது?_


      வாழ்நாள் நோய்க்கு பாலிசி எடுத்துக்கொண்ட பி.பி நோயாளிகளே, முதலில் பி.பி என்றால் என்ன? ஏன் வந்தது? என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

       இதற்கு மருத்துவம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உடலை நன்கு அறிந்தவர் நீங்கள்தான்.

    நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?

“நமக்குள் இருக்கும் இயற்கையான ஆற்றல்கள்தான் நோயை உண்மையிலேயே குணமாக்குகின்றன”
என்றார்.

      உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஒரு பிரச்சினை உங்களுக்கு வரும்போது (அப்படி ஒரு விஷயம் வெளியே தெரியும் முன்னரே) உடலானது தன்னைத் தானே சரிசெய்யும் முயற்சியை மேற்கொள்ளும்.

      பாதிக்கப்பட்ட உறுப்புக்கோ அல்லது அந்தப் பகுதிக்கோ அதிகப்படியான சக்தி தேவைப்படுகிறது, அதனால் தேவைப்படும் அந்தச் சக்தியை அதி வேகத்துடன் இரத்தத்தின் மூலமே எடுத்துச் செல்ல வேண்டும்.

      அப்போது இரத்தத்தில் எண்ணற்ற வேதியியல் மாற்றங்கள் நடக்கும். இரத்தத்தின் அடர்த்தியும் மாற்றம் அடையும்.

      பின்னர் அந்தச் சக்திகளைச் சுமந்துகொண்டு இரத்தம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மெதுவாகவா செல்லும்?

      108 ஆம்புலென்ஸ் போல விரைவாகத்தானே செல்லும். அதற்கு இதயம் வேகமாக துடித்துத்தானே ஆகவேண்டும்.

    அதுதானே இரத்தத்தை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் தேவையை ஒட்டி அனுப்புகிறது.

        இவ்வாறு உடல் தன்னைத்தானே குணமாக்கும் நிகழ்ச்சியையே நாம் இரத்த அழுத்தம் என்று நினைத்துக்கொள்கிறோம்.

     ஏன் என்றால் படபடப்பு, தலைசுற்றல், மயக்கம் போன்றவை வருவதால்.

      உடலில் நோய் ஏற்பட்டுள்ளது அதைச் சரி செய்யவே பி.பி என்ற ஒரு விஷயம் உடலில் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

     பி.பி என்பது பின்னே நடப்பதை முன்னே சொல்லும் அறிவிப்பு மணியாகும்.

    பி.பி இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் உடலில் ஏதோ பிரச்சினை அல்லது நோய் என்பதை அறிந்து, அதைக் குணமாக்கும் வழியை தேடுங்கள்.

       அந்த நோய் குணமானால் பி.பி தானாகவே காணாமல் போய்விடும்.
அதை விடுத்து பி.பி.யை மட்டும் குறைப்பது என்பது அறிவிப்பு மணியை மட்டும் கழற்றி வைப்பது போலாகும்.

      அறிவிப்பு மணியைக் கழற்றி வைத்து விட்டால் பின்னால் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் போய்விடும்.

     உடலில் உருவான
நோயைக் குணமாக்காமல் அதை உணர்த்தும் பி.பி.யை மட்டும் மருந்துகள் மூலம் குறைப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

      🌱வலுக் கட்டாயமாக இதயத்தின் துடிப்பு குறைக்கப்படுகிறது.

🌱 இரத்த நாளங்கள் விரிவாக்கப்பட்டு, அவை இயற்கையாகச் சுருங்கி விரியும் தன்மையை இழக்கின்றன.

🌱அதனால் நாளாவட்டத்தில் அவை தண்ணீர்க் குழாய் போல் ஆக்கப்பட்டு, உடலின் தன்மைக்கு அல்லது நோயின் தன்மைக்குத் தகுந்தாற்போல் சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது.

🌱 இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக உடலில் இருந்து உப்புகளும் கனிமங்களும் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுவதால் இரத்தம் நீர்த்துப்போய் விடுகிறது.

🌱இதற்குப்பின் எந்த நோய் வந்தாலும் நம்மால் உணர முடியாமல் போய்விடுகிறது.

🌱பி.பி. மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக நோய்கள் தொடர்ச்சியாக வருவது இதனால்தான்.

🌱அதனால் தயவுசெய்து பி.பி எதனால் வந்தது என்பதை அறிந்து முதலில் அந்த நோயைக் குணமாக்குங்கள்.

🌱 நோய் குணமாக வேண்டுமானால் முதலில் உங்கள் ஜீரணத்தைச் சரி செய்யுங்கள்.

🌱 ஏன் எனில் உங்களின் இரத்த அழுத்தத்திற்கும், இரைப்பைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைத்தல்

உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைத்தல்

உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைத்தல்
ஓர் இடத்தைச் சுத்தம் செய்ய உப்பு நீர் பயன்படுத்தப்படுகிறது. அல்லது படிகங்கள் (Quartz crystals - கல் உப்பு ) பயன் படுத்தப்படுகின்றன. இது ஓர் இடத்தில் இருக்கக் கூடிய எதிர்மறை சக்தியை அகற்ற உதவுகிறது. தினமும் உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைப்பது மங்களகரமாகக் கருதப் படுகிறது. ஐந்து ஸ்பூன் சுத்தி கரிக்கப் படாத கடல் உப்பைத் தண்ணீரில் கரைத்து வீட்டைத் துடைக்கலாம். இது ஓர் இடத்தின் எதிர்மறைச் சக்தியையும், எதிர்மறை விளைவுகளையும் குறைக்கும்.

குளியலறை / கழிவறைகளில் உப்புக் கிண்ணம் -


நாம் நமது உடலின் கழிவுகளை வெளியேற்றும் இடம் குளியலறை / கழிவறையாகும்.� இக்கழிவுகளில் நச்சுக்கிருமிகள், நுண் கிருமிகள் (பாக்டீரியாக்கள்) உள்ளன.� எனவே குளியலறை / கழிவறை வீட்டின் எந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தாலும் அவை எப்போதும் தீய சக்தியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.� கிண்ணம் நிறைய சுத்திகரிக்கப்படாத கடல் உப்பை வீட்டின் ஒவ்வொரு குளியலறை / கழிவறை ஜன்னல் தளத்தில் வைக்கவும்.� இந்த உப்பு எதிர்மறைச் சக்தியை உறிஞ்சிவிடுகிறது.� உப்பு ஈரமாகி சதுப்பாகி விட்டால் அவ்வப்போது கிண்ணத்தில் உள்ள உப்பை மாற்றி புதிதாக வைக்கவும்.

நம் பாரம்பரிய அரிசியின் பெருமைகள்

நம் பாரம்பரிய அரிசியின் பெருமைகள்:-
1. கருப்பு கவுணி அரிசி
      மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
      நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. பூங்கார் அரிசி :
      சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. காட்டுயானம் அரிசி :
       நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. கருத்தக்கார் அரிசி :
     மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. காலாநமக் அரிசி :
     புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. மூங்கில் அரிசி:
      மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. அறுபதாம் குறுவை அரிசி :
எலும்பு சரியாகும்.

9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :
      பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. தங்கச்சம்பா அரிசி :
      பல், இதயம் வலுவாகும்.

11. கருங்குறுவை அரிசி :
       இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. கருடன் சம்பா அரிசி :
      இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. கார் அரிசி :
       தோல் நோய் சரியாகும்.

14. குடை வாழை அரிசி :
       குடல் சுத்தமாகும்.

15. கிச்சிலி சம்பா அரிசி :
       இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. நீலம் சம்பா அரிசி :
      இரத்த சோகை நீங்கும்.

17.சீரகச் சம்பா அரிசி :
     அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும்.

18. தூய மல்லி அரிசி :
    உள் உறுப்புகள் வலுவாகும்.

19. குழியடிச்சான் அரிசி :
     தாய்ப்பால் ஊறும்.

20.சேலம் சன்னா அரிசி :
     தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும்.

21. பிசினி அரிசி :
     மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும்.

22. சூரக்குறுவை அரிசி :
     பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. வாலான் சம்பா அரிசி :
     சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. வாடன் சம்பா அரிசி :
     அமைதியான தூக்கம் வரும்.

மோர் இன்றி அமையாது உலகு...!!!

மோர் இன்றி அமையாது உலகு...!!!
கிராமத்து மண்வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது. இயற்கையின் கொடையான மோருக்கு ஈடுகொடுக்க வணிகப் பானங்களால் முடியாது. பசுவின் உயிர்ச் சத்துகளுள் ஒன்றான மோர், வேனிற் காலத்தில் உண்டாகும் வெப்பத்தைக் குறைப்பதோடு பல ஆரோக்கியப் பலன்களையும் தருகிறது.

குறுந்தொகையில்...

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்….தீம்புளிப்பாகர்…” என்ற குறுந்தொகை பாடல் புளித்த தயிரைக் கொண்டு, புளி சேர்க்காத இனிமையான தீம்புளிப்பாகர் (மோர்க் குழம்பு) செய்து தலைவனுக்குத் தலைவி கொடுத்து மகிழ்வித்ததாகக் குறிப்பிடுகிறது. மோரானது பானமாக மட்டுமன்றி, பண்டைய காலம் முதல் சமையலிலும் முக்கிய இடம்பெற்று உடலைச் சீராக்கியுள்ளது. நமது வாழ்வோடு பயணித்த மோரின் சிறப்புகளைப் பார்ப்போம்:

செரிமானப் பாதை சீராக

உணவருந்தும்போது இறுதியில் மோர் சாதம் சாப்பிட வேண்டும் என்று முன்னோர் வலியுறுத்தியதற்குக் காரணங்கள் பல. செரிமானப் பாதையில் உள்ள சிறு சிராய்ப்புகளையும் புண்களையும் ஆற்றும் தன்மை மோருக்கு உண்டு. உடலுக்கு நலம் தரக்கூடிய `புரோ-பயாடிக்’ நுண்ணுயிரிகளைத் தன்னகத்தே கொண்டு, வேனிற் காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு - குடல் சார்ந்த உபாதைகளை மோர் சீராக்குகிறது. செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்ந்த தாளித்த மோர், பல குடும்பங்களில் இன்றும் இடம்பெறும் அற்புதச் செரிமானப் பானம்.

மருந்தாகும் மோர்

கலோரிகள் நிறைந்த செயற்கை பானங்களுக்கு நடுவில், கலோரிகள் குறைந்த மோரானது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. கரிசாலை, கீழாநெல்லியை மோரில் கலந்து அருந்துவது காமாலை நோய்க்கான இயற்கை மருந்து. மாதவிடாய்க் காலங்களில் பனை வெல்லம் கலந்த மோரைப் பெண்கள் அருந்திவருவதால், மாதவிடாய்த் தொந்தரவுகள் குறையும். கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபுளோவின் போன்ற சத்துகள் மோரில் அதிக அளவில் இருப்பதால் எலும்பு, தசைகளின் வலிமைக்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்கு மோர் சிறந்தது. தோல் நோய் உள்ளவர்கள் அதிக அளவில் நீர்மோர் அருந்துவதால், நோய் விரைவில் குணமடையும். வாய்ப் புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள், மணத்தக்காளி பழம் கலந்த மோரைக் குடித்துவரப் புண்கள் விரைவில் ஆறும்.

திரிதோஷ சமனி

“மோருண வளிமுதன் மூன்றையுமடக்கி” எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், மோரானது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்தும் என்று குறிப்பிடுகிறது. உடலில் உண்டாகும் வீக்கம், ரத்தக் குறைவு, பேதி, பசியின்மை, தாகம், உடல் வெப்பம் போன்றவற்றுக்குப் பசுவின் மோர் சிறந்தது. கறிவேப்பிலைப் பொடியை மோரில் கலந்து பருக, பசி அதிகரிப்பதோடு ரத்தச் சிவப்பணுக் களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

நீர் சுருக்கி, மோர் பெருக்கி

கிருமிகளை அழிக்க, நீரை நன்றாகக் காய்ச்சிச் சுண்ட வைத்தும், மோரின் குணங்களை முழுமையாகப் பெற, மோருடன் அதிக நீர் சேர்த்து, நீர் மோராகவும் அருந்த வேண்டும் எனும் அறிவியலை `நீர்சுருக்கி மோர்பெருக்கி’ என்று அன்றே ஓலையில் செதுக்கினார் தேரையர். மோரின் புளிப்புத் தன்மை நீங்கும் அளவுக்கு நீர் சேர்த்துப் பருகுவதால், புளிப்பு சுவை அதிகரிப்பதால் உண்டாகும் பாதிப்புகள் ஏற்படாது என்பதே சித்தர்களின் சிந்தனை.

அனுபானம்

மோரின் சிறப்பை அறிந்தே, பல சித்த மருந்துகளைத் தயாரிக்க மோர் பயன்படுத்தப்படுகிறது. சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சில மருந்துகளின் அனுபானமாகவும் (Vehicle) மோர் பயன்படுகிறது. உடலுக்கு எவ்விதமான தீங்கையும் உண்டாக்காத காரணத்தால் மோரானது பத்தியத்தின்போதுகூடப் பயன்படுத்தக் கூடிய உணவு வகைகளுள் ஒன்று. மூலம் மற்றும் கருப்பை நோய்களுக்கு, கற்றாழைக் கூழை மோரோடு கலந்து குடிப்பது மிகச் சிறந்தது.

வெயில் காலங்களில்

வேனிற் காலம் எனும் ரதத்தை அழகாக இழுத்துச் செல்லும் சாரதி மோர். வெயில் காலத்தில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், நீர் சுருக்கு போன்ற உபாதைகள் வராமல் தடுக்க மோர் குடிப்பது அவசியம். மோர் அருந்துவதால் குடற்புண், கண்ணெரிச்சல், கைகால் எரிச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளை மோரில் கலந்து குடிப்பதைத் தவிர்த்து, மண் பானைகளில் குளிரூட்டப்பட்ட மோரைப் பயன்படுத்தலாம். மோரின் குளுமையோடு பானையின் குளுமையும் சேர்வதால் வெப்பத்தைக் குறைக்கும் அற்புதமான பானமாகும். அலுவலகத்துக்குச் செல்வோர், பள்ளிக் குழந்தைகள், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வோர், புட்டிகளில் நீருக்குப் பதிலாக நீர்மோரையே தாகம் தணிக்க எடுத்துச் செல்லலாம். மாலை வேளைகளில் டீ, காபிக்குப் பதிலாகச் சீரக மோரைப் பருகலாம். வெயில் காலங்களில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்வதில் மோருக்கு முக்கியப் பங்குண்டு. தாகத்தை நிவர்த்தி செய்து, சிறுநீர் பெருக்கியாக மோர் செயல்படுகிறது.

நஞ்சகற்றி

மது, புகையிலையால் உடலில் சேர்ந்திருக்கும் நஞ்சை வெளியேற்ற, தினமும் புதினா கலந்த மோர் குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உடலில் சேர்ந்த கழிவைச் சிறுநீரின் மூலம் வெளியேற்றும் குணம் மோருக்கு உண்டு. சில வகை உணவுப் பொருட் களுக்கு, மோரானது நஞ்சு முறிவுப் பொருளாகவும் பயன்படுகிறது.

மோருடன் வரவேற்போம்

ஆங்காங்கே `மோர்ப் பந்தல்கள்’ அமைத்து மக்களின் நலம் காத்த வரலாற்று குறிப்புகள் நம்மிடம் ஏராளம் உண்டு. பல ஆயிரம் வருடங்களாக வெயில் காலத்தை எதிர்கொள்ள ஏற்படுத்தப்பட்ட விருந்தோம்பல் முறை மோர்ப் பந்தல்கள். ஆனால் இன்றைக்கு மோர்ப் பந்தல்கள் குறைந்து, செயற்கை குளிர்பானங்களின் விற்பனை அதிகமாகிவிட்டது. இனிமேலும் விழித்துக்கொள்ளாவிட்டால், நம் ஆரோக்கியமும் பாரம்பரியமும் முற்றிலும் தொலைந்து போகலாம்.

இந்த 15 விஷயம் ஒரு பொண்ணுக்கிட்ட இருந்தா? உசுரே போனாலும் மிஸ் பண்ணிடாதீங்க

இந்த 15 விஷயம் ஒரு பொண்ணுக்கிட்ட இருந்தா? உசுரே போனாலும் மிஸ் பண்ணிடாதீங்க! சிறந்த காதலிக்கு இருக்க வேண்டிய முக்கியமான 15 குணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
இந்த 15 குணங்களுடன் ஒரு பெண் கிடைத்தால் அந்த பெண்ணை தவற விட்டுவிடாதீர்கள்...

ஒரு பெண்ணை காதலிக்கலாம வேண்டாமா என்ற யோசனையா? இதோ இந்த 15 குணங்களுடன் ஒரு பெண் கிடைத்தால், தயவு செய்து அந்த பெண்ணை தவற விட்டுவிடாதீர்கள்...

1. உங்கள் விருப்பமே அவர் விருப்பம்

உங்கள் விருப்பமே அவர் விருப்பம் உங்களுக்கு பிடித்த சினிமா, நீச்சல் என இருவருக்கும் ஒரே மாதிரியான விஷயங்கள் பிடித்திருக்கும். உங்கள் இருவரது கண்ணோட்டமும் ஒரே மாதிரியாக இருக்கும். இருவரது கருத்துக்களும் 90% ஆவது ஒத்துப்போகும்.

2. உங்கள் வேலையில் மூக்கை நுழைக்கமாட்டார்

 உங்கள் வேலையில் மூக்கை நுழைக்கமாட்டார் உங்களது பொழுதுபோக்கு மற்றும் உங்களுக்கு பிடித்த நல்ல காரியங்களை செய்யும் போது உங்கள் பாதையில் குறுக்கிடாமல் இருப்பார்.

3. கஷ்டத்தை கூறுவார்

 கஷ்டத்தை கூறுவார் யாரும் எல்லா நேரமும் சந்தோஷமாக இருப்பது இல்லை. அந்த பெண் ஏதேனும் ஒரு காரணத்தால், சோகமாக இருந்தால் அதற்கான காரணத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

4. உங்களை நேசிக்கும் பெண்

 உங்களை நேசிக்கும் பெண் உங்களை மட்டும் காதலிப்பார். நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை பார்த்து காதலிக்கமாட்டார். பல பிரபலங்கள் இது போன்ற குணம் கொண்ட பெண்களை தான் விரும்புகிறார்களாம்.

5. உங்களை மாற்ற நினைக்கமாட்டார்

 உங்களை மாற்ற நினைக்கமாட்டார் நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்களோ அப்படியே ஏற்றுக்கொள்வார். உங்களை மிஸ்டர்.பெர்பெக்ட்டாக மாற்ற எண்ணி உங்களுக்கு மிகவும் பிடித்த காரியங்களுக்கு தடை போடமாட்டார். பிடிக்காத விஷயங்களை செய்ய வலியுறுத்தமாட்டார்.

6. தனது அழகில் தன்னம்பிக்கை உள்ள பெண்

தனது அழகில் தன்னம்பிக்கை உள்ள பெண் அடிக்கடி தனது ஸ்டைலை மாற்றி அமைக்கமாட்டார். குண்டாக இருக்கிறோமோ என்று ஜிம்மிற்கு செல்வது, டயட்டில் இருப்பது போன்ற காரியங்களில் அதீத கவனம் செலுத்தமாட்டர். நாம் எப்படி இருக்கிறோமோ அதுதான் அழகு என தன்னம்பிக்கையுடன் இருப்பார்.

7. உங்கள் ஓய்வு நேரத்தை எடுத்துக்கொள்ளமாட்டார்

 உங்கள் ஓய்வு நேரத்தை எடுத்துக்கொள்ளமாட்டார் உங்களது ஓய்வு நேரத்தில் நீங்கள் தனக்காக இதை இதை செய்ய வேண்டும் என அறுபது டஜன் லிஸ்ட்டுகளை போட்டு கையில் தரமாட்டார். உங்களது ஓய்வு நேரத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய அனுமதிப்பார்.

 8. உங்கள் மதிப்பை பகிர்ந்து கொள்வார்

 உங்கள் மதிப்பை பகிர்ந்து கொள்வார் இருவருக்கும் ஒருவரிடம் ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற புரிதல் இருக்கும். உங்களது உறவில் போதுமான அளவு நேர்மை இருக்கும். மேலும், பணத்தை இருவரும் எவ்வாறு செலவு செய்கிறீர்கள் என்பது அவசியம். நீங்கள் கஞ்சமாகவோ அல்லது அதிகம் செலவு செய்பவராகவோ இருக்கலாம், உங்களை போலவே அவரும் இருக்கிறாரா என்பது அவசியம்.

9. வெளிப்படையாக இருக்கும் பெண்

 வெளிப்படையாக இருக்கும் பெண் அவருக்கு சின்ன வயதில் ஏற்பட்ட பிரச்சனைகள், கஷ்டங்கள், நிறைவேறாத ஆசைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். எந்த ஒரு கவலை, சோகத்தையும் உங்களிடம் கூறுவார். அவரது புத்திசாலித்தனங்கள் மட்டுமல்லாது, குறைகளையும் உங்களிடம் கூறுவார்.

10. காது கொடுத்து கேட்கும் பெண்

 காது கொடுத்து கேட்கும் பெண் உங்கள் அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனையா? புராஜெக்ட் வேலைகளை முடிப்பதில் சிரமமா என்பது போன்ற சில கேள்விகளின் மூலம் உங்களின் பிரச்சனைகள் அனைத்தையும் அறிந்து, உங்கள் குழப்பத்திற்கும், மன சங்கடத்திற்கும் தீர்வு கொடுப்பார்.

11. உங்களை மகிழ்விப்பார்

 உங்களை மகிழ்விப்பார் நீங்கள் இருவரும் ஒரே விசயத்திற்காக சிரிப்பிர்கள். இருவரும் ஒன்றாக இருக்கும் போது நேரம் போவது கூட தெரியாத அளவிற்கு மகிழ்ச்சியாக பேசிக்கொள்விற்கள். கேலிகள், கிண்டல்கள் என உற்சாகமாக இருக்கும். இருவரும் சேர்ந்து பல குறும்புத்தனங்களை செய்வீர்கள்.

12. உங்கள் குடும்பதிற்கு ஏற்ற பெண்

 உங்கள் குடும்பதிற்கு ஏற்ற பெண் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உங்களுக்கு பிடித்த பெண் இணைந்துவிட்டால் பல பிரச்சனைகள் தீரும். உங்களின் குடும்பத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து நடந்துகொள்ள முடியும். பொறாமை எண்ணம் வராது.

13. ஆடைகளை பற்றி அபிப்ராயம் கேட்கமாட்டார்

ஆடைகளை பற்றி அபிப்ராயம் கேட்கமாட்டார் எனக்கு இந்த ஆடை நல்லா இருக்குமா, இந்த கலர் நல்லா இருக்குமா என உங்களை வறுத்தெடுக்கமாட்டார். ஏனென்றால் தனக்கு என்ன பொருந்தும் என்பதில் தெளிவாக இருப்பார்.

 14. உங்களை ஆச்சரியப்படுத்துவார்
 உங்களை ஆச்சரியப்படுத்துவார் உங்களை ஆச்சரியப்படுத்தும் வித்தை கற்றவராக இருப்பார். உங்களை திடிரென வெளியில் அழைத்து சென்று ஆச்சரியப்படுத்துவார். அவர் செய்யும் மிகச்சிறிய விஷயம் கூட உங்களை பிரமிக்கவைக்கும்.

15. மனம் புண்படும்படி நடக்கமாட்டார்

 மனம் புண்படும்படி நடக்கமாட்டார் உங்களுக்கு தெரியாத ஏதேனும் ஒரு விஷயத்தை நீங்கள் தவறாக செய்தால், உங்கள் மனம் புண்படும்படி சிரிக்கமாட்டார். உங்களுக்கு தெரியாதவற்றை பொருமையுடன் சொல்லிக்கொடுப்பார்.


ஓட்டிப்போன கன்னமா இருக்கா குண்டு கன்னங்கள் வேண்டுமா..?

ஓட்டிப்போன கன்னமா இருக்கா குண்டு கன்னங்கள் வேண்டுமா..?  கன்னங்களை புஸ் புஸ் ஆக்குகிறது தக்காளி கூழ். தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள்.

ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை எடுங்கள். முதலில், முகத்தில் ஆலிவ் எண்ணெயைத் தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழை பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படிச் செய்து வர, குஷ்பு கன்னங்கள் கிடைக்கும்.

நாற்பது வயதை நெங்கும்போதே முகத்தில் சில வரிகளும் நம் முகவரி தேடி வந்து விடும். அந்த முதுமை வரிகளை ஓட ஓட விரட்டும் சக்தி தக்காளியில் உண்டு.

தக்காளி விழுது, பாதாம் விழுது… தலா அரை டீஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து கொள்ளுங்கள் இதை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்து வர, சுருக்கம் இருந்த சுவடுகூடத் தெரியாது
 கரை செல்வன்  

வாத நாசக முத்திரை !!!

வாத நாசக முத்திரை !!!
வாத நாடி  கூடினால் சந்திவாதம், கீல் வாதம், முடக்கு வாதம் என 21 வகையான வாத நோய்கள் உண்டாகும். மேலும், காதுவலி, தலைவலி, தலைசுற்றல், சக்தியின்மை, பொறுமையின்மை, சுறுசுறுப்பின்மை, குறைவான நினைவாற்றல், தூக்கமின்மை,ரத்த ஓட்ட குறைவால்  உடலில் மதமதப்பு ஏற்படுதல், மூட்டுவலிகள்(ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்),தலைமுடி, நகம், கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுதல், பிறப்புகளிலிருந்து வாயு பிரிதல், ஏப்பம் போன்ற நிறைய நோய்குறிகள் தோன்றும் அவற்றிர்க்கு நிவாரணம் தருவது இந்த முத்திரை.

ஆள்காட்டிவிரல், நடுவிரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து அதன் மீது கட்டைவிரலால் அழுத்தி பிடிக்கவும். மற்றவிரல்கள் நீட்டிய படி இருக்கட்டும். இதுவே வாத நாசக முத்திரை.காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் மிகுந்த பலனளிக்கும். 30 வினாடியிலிருந்த 15 நிமிடம் வரை செய்வது உத்தம பலன் கொடுக்கும்.

பூரான் கடித்தால் என்ன செய்வது?.. அலட்சியம் வேண்டாம்

பூரான் கடித்தால் என்ன செய்வது?.. அலட்சியம் வேண்டாம்…!!!

விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் – நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.

வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.

உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம்.

பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். பனைவெல்லாம் சாப்பிடவேண்டும்.

பூரான் கடியை தீர்க்க மருந்து

குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.

வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.

மற்றொரு மருந்தாக ஆகாச கருடன் கிழங்கை சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும். வெயில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும்.

ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் – கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

பெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள்

பெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் !
1.மோதிரம் ..

மோதிர விரலில் பாயும் நரம்பு நம் மூளையிலிருந்து இதயத்திற்கு இணைக்கப்படுகிறது. நம்மைச் சந்தோஷப்படுத்தும் ஹார்மோன்களைத் தூண்டுவதற்கு கட்டை விரல் மோதிரங்கள் உதவுகின்றன. பெரும்பாலானவர்கள் நடு விரல்களில் மோதிரம் அணிவதில்லை. அவ்வாறு அணிந்தால், முடிவுகள் எடுக்கும் திறன் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான ஆண்கள் கூட தங்கள் விரல்களில் மோதிரம் அணிந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

2.தோடு ..

சிறு வயதில் காது குத்தி, தோடு போடும் வழக்கம் நம் கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்துள்ளது. பெண்களுக்கு காது நரம்புகளுடன் கண்கள் மற்றும் உயிர் உற்பத்தி செய்யும் உறுப்புக்கள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. கண்களுடன் காது நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளதால், நல்ல கண் பார்வைக்கு தோடுகள் உதவுகின்றன.

3.மூக்குத்தி ..

மூக்குத்தி பெண் குழந்தைகளுக்குக் காது குத்தும் சடங்கு நடக்கும் போது, மூக்குக் குத்தும் படலமும் அரங்கேறுவது வழக்கம். வயதுக்கு வந்ததும், மாதவிடாயினால் தோன்றும் வலிகளைக் குறைப்பதற்காகவே அவர்களுக்கு மூக்குத்தி அணியப்படுகிறது. இடது மூக்கில் மூக்குத்தி அணிந்து கொள்வதால், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள நரம்பு உயிர் உற்பத்தில் செய்யும் உறுப்புக்களைத் தூண்டுகிறது. இதனால் குழந்தை பிறப்பும் எளிதாவதாகக் கூறப்படுகிறது.

4.தாலி (அ) நெக்லஸ் ..

தாலி (அ) நெக்லஸ் பெண்கள் தங்கள் கழுத்தில் நகைகளை அணிந்து கொள்வதால், அவர்களுக்கு அதிக பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது. குறிப்பாக, தாலிகளில் அணிந்து கொள்ளும் ஒவ்வொரு சிறு அணிகலனும் பெண்களின் உடம்பையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் கழுத்தணிகள் உதவுகின்றன.

5.வளையல் ..

வளையல் சீரான இரத்த ஓட்டத்திற்கு, தங்கள் கைகளில் அணிந்து கொள்ளும் வளையல்களும் பெண்களுக்குக் கை கொடுக்கின்றன. அவை வட்ட வடிவில் இருப்பதால், வளையல்கள் மூலம் தூண்டப்படும் மின் காந்த ஆற்றல் யாவும் வீணாகாமல் உடலுக்குள்ளேயே செலுத்தப்படுகிறது. இதனால் அவர்களுடைய எனர்ஜி அதிகரித்து, உள்ளங்கைகளும் வலுவாகின்றன.

6.நெற்றிச் சுட்டி ..

 நெற்றிச் சுட்டி தலையிலிருந்து தவழ்ந்து வந்து நெற்றியில் அழகாகக் குவிந்து விழும் இந்த ஆபரணம், உடம்பில் உள்ள வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறது.

7.இடுப்பணி ..

இடுப்பணி பெண்கள் தங்கள் இடுப்பைச் சுற்றி ஒட்டியாணம் அல்லது அரைஞான் கயிறை அணிந்து கொள்வது வழக்கம். இந்த அணிகலன், அவர்களுடைய மாதவிடாய் பிரச்சனைகளைத் தீர்க்குமாம்! வெள்ளியினாலான இடுப்பணிகலன், வயிற்றுக் கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது.

8.கொலுசு ..

கொலுசு பூமியுடன் பெரும்பாலும் தொடர்பிலிருக்கும் கால்களில் பெண்கள் அணியும் கொலுசு, அது தரும் ஒலியின் மூலம் அவர்களிடம் பாஸிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்குமாம்! மேலும், எலும்பு இணைப்புகளில் தோன்றும் வலிகளை நீக்குவதிலும் கொலுசு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.

9.மெட்டி ..

மெட்டி இரு கால்களிலும் உள்ள கட்டை விரலுக்கு அருகிலிருக்கும் விரலில் மெட்டி அணியப்படுவது வழக்கம். பெண்களின் கருப்பையையும் இதயத்தையும் இணைக்கும் நரம்பு, இந்த விரல் வழியாகப் பாய்வதால், அவர்களுடைய மாதவிடாய் கால இரத்த இழப்பை சீராக்குவதோடு, பிரசவ காலத்திலும் உதவுகிறது. பொதுவாகவே, இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்துவதில் மெட்டி ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?
 நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள்.

சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது. அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள்தான் இருக்கும்.

காரணம் என்ன?

நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை. ஒன்று, ‘ஆஞ்சைனா’ (Angina pectoris) எனும் இதய வலி. மற்றொன்று, மாரடைப்பு. இவற்றை எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படி அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

ஆஞ்சைனா / மாரடைப்பால் ஏற்படுகிற நெஞ்சு வலியானது இதயத் தசையில் உருவாகி நெஞ்சில் உணரப்படுகிறது. இதயத் திசுக்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களில் கொழுப்புப் படிந்து, அதன் விட்டத்தைக் குறுகச் செய்வதுதான் இந்த வலிக்கு அடிப்படைக் காரணம். முதுமை காரணமாக தமனிக் குழாய் தடித்துப் போனாலும், இந்த நிலைமை ஏற்படுவதுண்டு.

இதயத் தமனிக் குழாய் உள்அளவில் சுருங்கும்போது, இதயத் திசுக்களுக்குச் செல்லக்கூடிய ரத்தத்தின் அளவு குறைகிறது. நாம் ஓய்வாக இருக்கும்போது இதயத் திசுக்களுக்குத் தேவையான ரத்தம் கிடைத்துவிடும். ஆனால், உழைப்பு அதிகப்படும்போது இதயத் தசைகளின் தேவையும் அதிகரிக்கிறது. குறுகிவிட்ட இதயத் தமனியால் இந்தத் தேவையை ஈடுசெய்ய இயலாது. இதனால் இதயத் திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு கிடைக்காமல் அழியத் தொடங்கும். அந்த நேரத்தில் இதயத் தசைகள் எழுப்புகிற கூக்குரலே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது.

இதய வலி - அறிகுறிகள்

மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால் அல்லது கிளிசரில் டிரைநைட்ரேட் (Glyceryl trinitrate) மாத்திரையை நாக்கின் அடியில் வைத்தால் நெஞ்சு வலி குறைந்துவிடும்.

மாரடைப்பு - அறிகுறிகள்

சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத் திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு (Myocardial infarction).

தூண்டும் சூழல்கள்

இந்த வலியை முதன்முறையாகத் தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் காரணமாகின்றன. அவை: பரம்பரை, அதிக உடலுழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை, அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு, குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்பநிலையால் திடீரெனத் தாக்கப்படுவது, உயரமான இடங்களுக்குச் செல்வது ((எ-டு ) மாடிப்படி ஏறுதல், மலை ஏறுவது; மன அழுத்தம்), அதிகமாக உணர்ச்சி வசப்படுவது (( எ-டு ) கோபம், கவலை, பயம், பீதி, விரக்தி, சண்டை).

யாருக்கு அதிக வாய்ப்பு?

புகைபிடிப்போர், மது அருந்துவோர், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடலுழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு.

நுரையீரல் நோய்கள்

‘நிமோனியா’ எனும் நுரையீரல் அழற்சி நோய், நுரையீரல் உறைக் காற்று நோய் (Pneumo thorax), நுரையீரல் உறை அழற்சி நோய் (Pleurisy), கடுமையான காச நோய் ஆகியவற்றிலும் நெஞ்சு வலி வரும். அப்போது துணை அறிகுறிகளாக இருமல் இருக்கும். இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கும். இழுத்து மூச்சு விட்டால்கூட வலி அதிகமாகும். காய்ச்சல், சளி ஏற்படும்; பசி குறையும். இந்த வலி பொதுவாக இளம் வயதினருக்கும் நடுவயதினருக்கும் வருகிறது.

நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சில் வலி வரலாம். அப்போது சளியில் ரத்தம் கலந்து வரும். இது பெரும்பாலும் 50 வயதுக்குப் பிறகு வரும். மேற்சொன்ன அறிகுறிகள் மூலம் மாரடைப்பிலிருந்து மற்ற பிரச்சினைகளைப் பிரித்துணரலாம்.

நுரையீரல் ரத்த உறைவுக் கட்டி (Pulmonary embolism) காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம். இது பெரும்பாலும் ரத்தக் குழாய் நோயுள்ளவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், நீண்டகாலமாகப் படுத்த படுக்கையாக இருப்பவர்கள், நெடுங்காலம் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும் பெண்கள், சமீபத்தில் பிரசவித்த பெண்கள் ஆகியோருக்கு ஏற்படுவதுண்டு.

தசை / எலும்பு வலிகள்

மார்புப் பகுதியில் உள்ள தசை, நரம்பு, எலும்பு மற்றும் எலும்பிடைத் தசைகளில் உண்டாகும் நோய்கள் காரணமாகவும் நெஞ்சில் வலி ஏற்படலாம். நெஞ்சில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இந்த வலி வரலாம். வலியுள்ள பகுதியைத் தொட்டு அழுத்தினால் வலி அதிகரிக்கும். உடல் அசைவின்போதும் மூச்சுவிடும்போதும் வலி அதிகரிக்கும். மார்பில் அடிபடுவது, தசைப் பிசகு, மார்பு / விலா எலும்பு முறிவு போன்றவை இவ்வகை நெஞ்சு வலியை உண்டாக்கும்.

உணவுப்பாதை புண்கள்

தொண்டையில் தொடங்கி இரைப்பைவரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய் இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் புண்கள் ஏற்படும்போது நெஞ்சில் வலிக்கும். பொதுவாக, இந்த நோயாளியிடம் உணவுக்கும் நெஞ்சு வலிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அறிய முடியும். இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான்.

காரணம் என்ன?

நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் இருக்கும் அமிலம் தன் எல்லைக் கோட்டைக் கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும்.

மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ்முனைக் கதவு பழைய சல்லடை வலை போல ‘தொள தொள' வென்று தொங்கிவிடும். விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும். இந்த நிலைமையில் உள்ள நெஞ்செரிச்சலுக்குத் தகுந்த சிகிச்சை பெறத் தவறினால், இரைப்பையில் புண் உண்டாகும்.

அப்போது அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். குறைந்த அளவு உணவு சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு, வயிற்றில் வலி தோன்றும். குறிப்பாக, இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரத்திலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும். புண் உள்ள இடத்தில் அமிலம் படுவதால், இந்த வலி ஏற்படுகிறது. அதுபோல் உணவு சாப்பிட்ட பின்பும் இதே வலி உண்டாகும். புண்ணின் மீது உணவு படுவதால் இப்படி வலிக்கிறது. பொதுவாக, சாப்பிட்டதும் வயிற்று வலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர். சாப்பிட்டதும் வலி குறைந்தால், அது டியோடினல் அல்சர். இவற்றைத் தவிர, குமட்டலும் வாந்தியும் வரும்.

உளவியல் காரணங்கள்

குடும்பத்தில் சண்டை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, வேலையின்மை, தனிமை, வாழ்க்கையில் தோல்வி, தேர்வு பயம், கோபம் போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் நெஞ்சு வலி ஏற்படுகிறது.

பிற நோய்கள்

மகாதமனிக் குழாய் வீக்கம், இதய வெளியுறை அழற்சி நோய், அக்கி அம்மை, அஜீரணம், கணைய நோய், பித்தப்பை நோய், கடுமையான ரத்தசோகை, தைராய்டு பிரச்சினைகள் காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம்.

பரிசோதனைகள் என்ன?

வழக்கமான ரத்தப் பரிசோதனை களுடன் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவை பரிசோதிக்கப்படும். இவை தவிர, மார்பு எக்ஸ்-ரே, இ.சி.ஜி., எக்கோ, சி.டி. ஸ்கேன், டிரெட்மில், எண்டாஸ்கோபி போன்ற பரிசோதனைகளும் தேவைப்படும். இவற்றின் மூல காரணம் அறிந்து, சிகிச்சை பெற்றுவிட்டால் நெஞ்சு வலி விடைபெற்றுக்கொள்ளும்.

இதய வலிக்கு முதலுதவி

இதய வலி அல்லது மாரடைப்புக் கான அறிகுறிகள் தெரியவரும்போது உடனடியாக ஆஸ்பிரின் 325 மி.கி., அட்டார்வாஸ்டாடின் 80 மி.கி., குளோபிடோகிரில் 150 மி.கி. ஆகியவற்றைச் சாப்பிட்டால், தமனி ரத்தக் குழாயில் ரத்தம் உறைவது தடுக்கப்படும். இதன் பலனாக மாரடைப்பின் தீவிரம் குறைந்து நெஞ்சில் வலி குறையும். இந்த முதலுதவியைத் தொடர்ந்து எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறோமோ அந்த அளவுக்கு உயிருக்கு ஆபத்து வருவதைத் தடுக்க முடியும்.

தடுப்புமுறைகள்

l புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. பான்மசாலாவைப் பயன்படுத்தக் கூடாது.

l சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்.

l தினமும் முறையாக உடற்பயிற்சி / யோகாசனம் / தியானம் செய்ய வேண்டும்.

l உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்புக் கோளாறு போன்றவற்றுக்குச் சரியான சிகிச்சை எடுத்து, அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

l கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

l மாசடைந்த சுற்றுச்சூழலைத் தவிருங்கள். அசுத்தமான காற்றுதான் பல நுரையீரல் நோய்களுக்குக் காரணம்.

l அசுத்தமான உணவைச் சாப்பிடாதீர்கள்.

l இரைப்பைப் புண் உள்ளவர்கள், சமச்சீரான உணவை அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது. மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவை எவ்வளவு குறைக்க முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும். பட்டினி கிடக்கக் கூடாது; விரதம் வேண்டாம்; நேரத்தோடு சாப்பிடும் பழக்கம் முக்கியம்.

l வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவை அதிகமாக உட்கொள்ளுங்கள். துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக இனிப்புப் பண்டங்கள், புளித்த உணவு ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள்.

l நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் சாப்பிட்டதும் படுக்கக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கப் போவது நல்லது. படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடிவரை உயர்த்திக்கொள்வது நல்லது,

l மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள், ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோய்களுக்குத் தரப்படுகிற ஸ்டீராய்டு மாத்திரைகள், மூட்டுவலி மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது.

l மன அழுத்தம் தவிருங்கள்.

l தேவையான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம்.

l நெஞ்சில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

குடும்பத்தில் சண்டை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, வேலையின்மை, தனிமை, வாழ்க்கையில் தோல்வி, தேர்வு பயம், கோபம் போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் நெஞ்சு வலி ஏற்படுகிறது.

அரிப்பு ஏற்படுவது ஏன்?

அரிப்பு ஏற்படுவது ஏன்?
 அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நம்மை ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது.

இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும். உடலியல்ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’.

எதிர்ப்புப் புரதம்

அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை ‘இம்யூனோகுளோபுலின் – ஈ’ (IgE) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.

மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.

பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். சொறியச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும்விடுகிறது. எப்படி? ‘லேன்ட்-லைன்’ போன் வேலை செய்யும் மெக்கானிஸம் போன்றது இது. லேன்ட் லைன் போனில், எதிரெதிர் முனைகளில் உள்ளவர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பிதான். எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண்ணில் இரண்டு பேர்தான் பேச முடியும்.

இதுபோல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே ‘நரம்பு கேபிள்’தான். நாம் சொறிய ஆரம்பித்ததும், சொறிகிற உணர்வையும் இந்த நரம்புதான் மூளைக்கு எடுத்துச் செல்கிறது. ஒரு நேரத்தில் ஒரு தகவலை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்லும் என்பதால், அரிப்பு உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, சொறியும் உணர்வை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்கிறது. இதனால் அரிப்பு குறைகிறது.

என்ன காரணம்?

அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.

வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.

குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, ‘நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.

அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் ‘கரப்பான் நோய்’ (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழு வதும் அரிப்பை ஏற்படுத்தும்.

குளிரும் ஆகாது!

சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.

தொடை இடுக்கு அரிப்பு

காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும். அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படை போலத் தோன்றும். கால் விரல் இடுக்குகளில் வருகிற சேற்றுப் புண்ணும் அரிப்பை ஏற்படுத்துகிற ஒரு காரணிதான். தண்ணீரில் அதிகம் புழங்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும்.

அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி... இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான். இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

வயதானால் வரும் அரிப்பு

முதுமையில் வருகிற அரிப்புக்கு வேறு காரணம் இருக்கிறது. வயதானவர்களுக்குத் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பு ஏற்படும்.

எச்சரிக்கும் நோய்கள்

உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு ‘நூல் புழு’ காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

உணவும் மருந்தும்

நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்ல லாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.

மனப் பிரச்சினைகள்

அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் உள்ளவர்கள் உடலில் பூச்சி ஊறுவதைப்போல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால் எந்நேரமும் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களது மனநோய் குணமானால்தான் அரிப்பும் சரியாகும்.

‘உடம்பு அரித்தால் ஒரு ‘அவில்’ போட்டுக்கோ’ என்று சாதாரணமாக வீடுகளில் சொல்வார்கள். அதேவேளையில் எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றால்தான், அரிப்பு முற்றிலுமாகக் கட்டுப்படும். நாமாக மருந்து சாப்பிடுவது, ஆபத்துக்கு அழைப்பு விடுப்பதைப் போல.