பித்தப்பை கற்கள்

பித்தப்பை கற்கள்

               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

இது குறித்து நேற்று ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

விடை அளித்திருந்தாலும் இதற்கு சற்று விளக்கமான பதில் எழுத எண்ணியதால் இப்பதிவு.,

பித்தபையில் கற்கள் உருவாகி அவை பித்தபை சுவர்களை இடிக்கையில் தாங்க இயலாத வலி ஏற்படும். மருத்துவரிடம் ஓடுவோம். இதற்கான ஸ்டாண்டர்ட் ஆபரேடிங் புரசீஜர் என்னவெனில் பெயின் கில்லர் கொடுப்பதே. பெயின் கில்லரை கொடுப்பதுடன் நிற்காமல் குறைந்த கொழுப்பு உணவுகளை பரிந்துரைப்பார்கள். காரணம் யூகிப்பது எளிது..பித்தபைகற்கள் முழுக்க கொழுப்புகட்டிகளே. குறிப்பாக கொலஸ்டிரால் கட்டிகள்..ஏற்கனவே கொலஸ்டிரால் கட்டி, கட்டியாக உடலில் தேங்கி நிற்கையில் மேலும் கொலஸ்டிரால் சாப்பிட்டால் என்னாகும் என்ற எளிய லாஜிக்கின் அடிப்படையில் ஸ்கிம் மில்க், சிகப்பிரைச்சி சாப்பிடவேண்டாம், முட்டையின் மஞ்சள் கருவை சபபிடாதே என அட்வைஸ் கொடுப்பார்கள். இந்த டயட்டை பின்பற்ற துவங்கியதும் வலி மேலும் அதிகமாகும். பெயின்கில்லரை எத்தனை நாள் சாப்பிடுவது? ஒரு சுபயோக, சுபதினத்தின் மருத்துவர் பித்தபையை சர்ஜரி செய்து அகற்றுவார்..ஓம் சாந்தி ஒம்....பிரச்சனை தீர்ந்ததா?.

மேலே சொன்னது முழுக்க, முழுக்க டிராஜிகாமடி நிகழ்வே. பித்தபை கற்கள் கொலஸ்டிராலால் ஆனவை என்றாலும் அவை உருவாக காரணம் உணவில் உள்ள கொலஸ்டிரால் அல்ல. கொலஸ்டிரால் உணவில் இல்லாததே இக்கற்கள் உருவாக காரணம்..குழப்பமா இருக்கா? மேலே படியுங்கள்.

நம் உணவில் உள்ள கொழுப்பை ஜீரணம் செய்ய நம் ஈரல் பைல் எனப்படும் ஒரு திரவத்தை சுரக்கும். ஆதிமனிதன் உண்ட உணவு முழுக்க கொழுப்புணவே என்பதால் நம் உணவில் உள்ள கொழுப்பை ஜீரணம் செய்ய ஸ்பெஷலாக நம் ஈரல் பைல் எனப்படும் திரவத்தை சுரக்கிறது. நம் உடலுக்கு தானாக கொலஸ்டிராலை உற்பத்தி செய்யும் சக்தி உண்டு என்பதை நினைவில் கொள்வோம். உங்கள் உணவில் துளி கொலஸ்டிரால் இல்லையெனினும் கொலஸ்டிராலே உடலின் ஹார்மோன்கள் அனைத்த்குக்கும் அவசியமான மூலப்பொருள் என்பதால் நம் ஈரல் தினமும் 1500 மிகி கொலஸ்டிராலை உற்பத்தி செய்தே தீரும். நீங்கள் உணவில் கொலஸ்டிராலை உண்டால் அதற்கு ஏற்ப உடலுக்கு கொலஸ்டிரால் உற்பத்தி குறைந்து வேலை மிச்சமாகும். அவ்வளவே.

இந்த பைல் திரவம் நம் ஈரலில் சுரந்து பித்தபையை அடைகிறது. இந்த பைல் முழுக்க இருப்பது கொலஸ்டிராலும், சில ஆசிடுகளுமே. நாம் முட்டையை உண்கிறோம். அந்த முட்டையில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் டியை ஜீரணம் செய்து பிரித்தெடுத்து கண்களுக்கும், எலும்புகளுக்கும் அனுப்பி வைப்பதே பைல் திரவத்தின் உதவியால் தான் நடைபெறுகிறது. ஆக பைல் திரவம் இல்லையெனில் வைட்டமின் பற்றாகுறை ஏற்படும்.

இதனால் தான் வைட்டமின் ஏ, வைட்டமின் டி ஆகியவை "கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்" என அழைககப்டுகின்றன. இயற்கையும் வைட்டமின் ஏ, வைட்டமின் டி ஆகியவற்றை கொழுப்பு மிகுந்த முட்டை, மீன் ஆகியவற்றில் படைத்துள்ளது. நாம் முட்டை, மீன், ஈரல் வேண்டாம் என சொல்லி மாத்திரை வடிவில் வைட்டமின் ஏவை எடுத்தால் அது உடலில் சேராமல் அப்படியே கழிவில் வெளியே வந்துவிடும்.

நாம் உணவில் கொழுப்பு நிரம்பிய மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றை உண்போம் என எதிர்பார்த்து ஈரல் பைல் ஆசிடை சுரக்க, அப்படி சுரந்த பைல் ஆசிட் பித்தபையில் ஸ்டோர் செய்யபடும்..ஆனால் நம் உணவில் கொழுப்பே இல்லாமல் இட்டிலி, தக்காளி சட்னி, பிரெட் என இருந்தால் என்ன ஆகும்? உற்பத்தி ஆன பைல் முழுக்க வீண்தான்.

இப்படியே ஈரல் பைலை தொடர்ந்து உற்பத்தி செய்ய, செய்ய நாம் அதை பயன்படுத்தாமல் இருந்தால் பித்தபையில் ஏராளமாக பைல் ஆசிட் நிரம்பி, அதில் உள்ள கொலஸ்டிரால் கட்டிகளாக மாறி இறுகி பித்தபைகற்களாக மாறிவிடும்.

நம் உணவில் கொழுப்பும், கொலஸ்டிராலும் அதிகமாக இருந்தால் பைல் அதை ஜீரணம் செய்ய பயனாகி பித்தபை முழுக்க காலியாகிவிடும். அதன்பின் அந்த கற்களும் உடைக்கபட்டு ஜீரணமாகி பித்தபை கற்களும் அகன்றுவிடும்.

இதுகுறித்து கென்டக்கி பல்கலைகழகத்தில் நிகழ்த்தபட்ட ஆய்வு கூறுவது என்னவெனில்

கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகம் உள்ள, அதீத கார்ப் உள்ள உணவுகள் பித்தபை கற்களை உருவாக்கும். குறைந்த கொழுப்பு உணவுகள் பித்தபை கற்களை குணமாக்க பயனாகாது என கவலை தெரிவிக்கிறது

ஆக உயர்கொழுப்பு நிரம்பிய பேலியோ உணவே பித்தபை கற்களை குணமாக்க பயனாககூடியது. கொழுப்புகட்டியை குணமாக்க கொழுப்பே மருந்து.
*பித்தப்பை கற்கள்*

இது குறித்து நேற்று ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். விடை அளித்திருந்தாலும் இதற்கு சற்று விளக்கமான பதில் எழுத எண்ணியதால் இப்பதிவு.,