விந்து (Semen அல்லது Seminal fluid)
ஆண்குறி. இந்த உறுப்பில் நரம்புகள் உண்டு, எலும்பு இல்லாத மிக உறுதியான உறுப்பு. இது ஆணுக்கு மட்டும் ஸ்பெஷல்.
மனித ஆண்குறியானது மற்றைய பாலூட்டும் விலங்குகளின் ஆண்குறியிலிருந்து பல விசயங்களில் வேறுபாடானதாக இருக்கிறது.
மற்றைய விலங்குகளில் சிலவற்றில் காணப்படுவதைப்போல இவ்வுறுப்பில் நிமிர்வென்புகள் (ஆண்குறி எழுச்சிக்கு உதவும் என்புகள்) காணப்படுவதில்லை. மாறாக இரத்த அழுத்தம் காரணமாகவே மனித ஆண்குறியில் எழுச்சி நிகழ்கிறது.
உடற்திணிவோடு ஒப்பிடுகையில் சராசரி விலங்குகளைப் பார்க்க மனித ஆண்குறியே பெரியதாக அமைகிறது.
உடலுறவின்போது ஆண்குறியிலிருந்து பெண்குறிக்குச் செல்லும் விந்தானது அண்டத்தினைத் துளைத்து கருவினை உண்டாக்குகிறது. இந்த நிகழ்வின்போது 30 லட்சத்திற்கும் மேற்பட்ட விந்தணுக்கள் வருகின்றன. ஆனால் ஒன்றுதான் அண்டத்தினைத் துளைக்கிறது.
விந்துச் சுரப்பி ஆணுக்குரிய இனப்பெருக்கத் தொகுதியின் முக்கிய பகுதி ஆகும். மனிதனுக்கு இரண்டு விந்துச் சுரப்பிகள் உண்டு. இவற்றை முதல்நிலை இனப்பெருக்க உறுப்புகள் என்று கூறலாம். இவை விதைப் பையினுள் ஓர் சிறப்புத் திசுவால் நிறுத்தப்பட்டுள்ளன.
விந்துச் செல்கள் வெப்பம் உணர்தன்மையுடையவை. இவற்றின் வளர்ச்சி உடல் வெப்பத்தில் பாதிப்படையலாம். எனவே இவையும் விந்து நாளத்திரளும் உடலுக்கு வெளியே விதைப்பையில் உள்ளன . இங்கு வெப்பம் குறைவு. இடது விந்துச் சுரப்பி 1 செ. மீட்டர் இறங்கியிருக்கும். இச்சுரப்பி 4-5 செ.மீட்டர் நீளமும் , 2-5 செ.மீட்டர் அகலமும் உடையது. இதன் எடை 10.5 - கிராம் ஆகும்.
விந்துச் சுரப்பியின் வெளிப்புறத்தில் டியூநிக்க அல்புஜினியா எனும் வெண்மை நிறமான உரையுள்ளது. உட்புறமாகச் சுரப்பியினுள் பல முழுமையற்ற இடைச்சுவர்கள் உள்ளன. இச்சுவர்கள் விந்துச் சுரப்பியின் - சிறு கதுப்புகளாகப் பிரிக்கின்றன. இவற்றினுள் விந்தாக்க நுண்குழல்களும் இடைஈட்டுச் செல்கள் அல்லது லீடிக் செல்களும் உள்ளன. விந்துச் செல்கள் நுண்குழல்கலினுள் தோன்றும்.
சிறுநீர்க்குழாய் என்பது உடற்கூற்றியலில் உடலின் நீர்மக் கழிவுகளை வெளியேற்றுவதற்காக சிறுநீர்ப் பையை பிறப்புறுப்புடன் இணைக்கும் குழாயைக் குறிப்பதாகும். ஆண்களுக்கு சிறுநீர்க்குழாய் ஆண்குறி வழியே செல்கிறது, சிறுநீருடன் விந்துப் பாய்மத்தையும் கொண்டு செல்கிறது.
பெண்களுக்குக் குறைந்த நீளமே உள்ள சிறுநீர்க் குழாய் யோனிக்கு மேலே வெளிப்படுகிறது.
பெண்கள் சிறுநீர்க் குழாயைச் சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆண்கள் இதனைச் சிறுநீர் கழிக்கவும் விந்து தள்ளல், விந்து வெளியேற்றத்திற்கும் பயன்படுத்துகின்றனர். வரிவரியான வெளிச்சிறுநீர்க் குழாய், சுருக்குத்தசை சிறுநீர் கழிப்பதை இச்சைக்கேற்ப கட்டுப்படுத்த உதவுகிறது.
விந்து வெளியேற்றக் குழாய் (Vas Deferens) அல்லது விந்து நாளம் (ductus deferens) மனித உடலில் ஆண் இனப்பெருக்கத் தொகுதியின் ஓர் உறுப்பு. இவை விந்துச் சுரப்பிக்கு ஒன்றாக, இரண்டு உள்ளன. இவை விந்து நாளத்திரளின் முடிவுப் பகுதியில் தோன்றும். விந்துச் சுரப்பியின் பின்புறத்தில் மேல்நோக்கி அமைந்திருக்கும். தசைக் குழாய்களான இவற்றைச் சுற்றி மென்மை தசைகள் உள்ளன. இடது மற்றும் வலது நாளத்திரள்களை விந்து பீச்சுக்குழல்களுடன் இணைத்து விந்தணுக்களைக் கடத்த உதவும் இவை சுமார் 30 செ.மீ நீளமுள்ளவை.
இப்பகுதி இரத்தக் குழாய்கள், நரம்புகளை நெருங்கியுள்ளது. இவைகள் அனைத்தும், தசைகளுடன் ஒருங்கிணைந்து இடுப்பு பகுதியினை அடைகின்றன. இத்தொகுப்பிற்கு விந்தகக் கற்றை என்று பெயர். விந்து நாளத்தின் முடிவுப் பகுதி ஆம்புல்லா எனும் அகன்ற பகுதியாகயுள்ளது. இங்குள்ள மென்மைத் தசைகள் சுருங்கி-விரியும் தொடரியக்கம் கொண்டவை. இவ்வியக்கம் விந்து செல்களைக் கடத்த உதவும்.
விந்து தள்ளலின்போது விந்து வெளியேற்றக் குழாய்களின் மென் தசைகள் சுருங்குகின்றன. இதனால் விந்தணு ஆண்குறியை நோக்கித் தள்ளப்படுகிறது. விந்தணு வெளியேற்றக் குழாயிலிருந்து சிறுநீர்க் குழாயை அடைகிறது.
பிற ஆண் இனப்பெருக்கத் தொகுதி சுரப்பிகளும் இதே நேரத்தில் தள்ளப்படுகின்றன.
கருத்தடையின் ஒரு முறையாக, இந்த இரு விந்து நாளங்களும் அறுவை சிகிச்சை மூலம் வெட்டப்பட்டு மூடப்படுகின்றன. இது விந்துக்குழாய் வெட்டு என அறியப்படுகிறது. இதனால் விந்தணு வெளியேற இயலாது.
இது பொதுவாக நிலைத்த மாற்றம் எனினும் சில நேரங்களில் இதனை மீளமைக்க முடியும். சில சமயங்களில் அறுவை மருத்துவர் குழாய்களை வெட்டாது விந்தணு வெளியேற்றத்தைத் தடுக்குமாறு தடையொன்றை ஏற்படுத்துவதும் உண்டு.
விந்து தள்ளல் (Ejaculation) எனப்படுவது ஆண்குறியிலிருந்து விந்துப் பாய்மம் வெளித் தள்ளப்படுதலாகும். பொதுவாகப் புணர்ச்சிப் பரவசநிலையில் இது நிகழ்கிறது.
1. ஒரு விந்து தள்ளலில் வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தின் சராசரி அளவு2 முதல் 6 மில்லி லிட்டர்.
2. வாழ்நாளில் ஒரு மனிதன் விந்து பாய்ச்சும் தடவைகளின் சராசரி எண்ணிக்கை 5,000.
3. வாழ்நாளின் மொத்த விந்துப் பாய்மப் பாய்ச்சல் 17 லிட்டர்.
4. ஒரு தேக்கரண்டி விந்துப் பாய்மத்தின் கலோரிப் பெறுமானம்
5. புணர்ச்சிப் பரவசநிலையின் சராசரி நேரம் 4 நொடிகள்தான்.
6. ஓர் ஆரோக்கியமான ஆணின் விந்துத்தள்ளலில் வெளியேற்றப்படும் விந்துக் கலங்களின் சராசரி எண்ணிக்கை 40 முதல் 600 மில்லியன்.
7. ஒரு விந்து முட்டையுடன் கருக்கட்டப் பயணிக்கும் தூரம் 7.5-10 செ.மீ.
8. விந்து ஆயுட்காலம் உருவாக்கத்திலிருந்து பாய்ச்சப்படும்வரை 2.5 மாதங்கள்.
9. பாய்ச்சப்பட்ட விந்தின் ஆயுட்காலம் 30 நொடிகளிலிருந்து ஆறு நாட்கள் வரை. (கிடைக்கும் சூழலைப் பொறுத்தது)
விந்து நாளத்திரள் அல்லது விந்தகச் சுருட்டுக் குழாய் (எபிடைமிஸ்) என்பவை ஆண் இனப்பெருக்கத் தொகுதி உறுப்புகளாகும். இவை ஈரடுக்குக் கொண்ட சூடோஸ்ட்ராடிபைடு எபிதீலியம் செல்களால் ஆனவை.
இவ்வுறுப்பு விந்துச் சுரப்பியிலிருந்து வெளிவரும் பல வளைவுகளைக் கொண்ட நுண்குழல்களால் ஆனது. இது விந்துச் சுரப்பியின் பின் பகுதியில் இருக்கும். இவ்வுறுப்பினுள் விந்தணுக்கள் வளர்ந்து முதிர்ச்சியடைகின்றன. விந்து வெளியேற்றுக் குழாய் மூலமாக ஆண்குறியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இவற்றை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம். 1. தலைப்பகுதி (Caput) 2. மெய்யம் (Corpus) 3. வால் பகுதி (Cauda)
விந்துச் சுரப்பியில் உருவான விந்தணு நாளத்திரளின் தலைப்பகுதிக்குச் செல்கின்றன; பின்னர் மெய்யம் வழியே வால்பகுதிக்குச் சென்று அங்கு தேக்கப்படுகின்றன.
விந்துச் சுரப்பியில் உருவான விந்தணு விந்து தள்ளலுக்கு தகுதியானவை அல்ல. அவற்றால் நீந்தவோ சூல்முட்டையைக் கருக்கட்டவோ இயலாது. வால்பகுதிக்குச் செல்லும்போது விந்தணுவால் கருக்கட்ட இயலும். இங்கு விந்தணுக்கள் விந்து வெளியேற்றுக் குழாய்கள் வழியாக விந்துப் பாய்மக் குமிழ்களுக்கு மாற்றப்படுகின்றன. இன்னும் நீந்த முடியாத விந்தணுக்கள் தசை குறுக்கங்களால் இக்குமிழ்களுக்கு மாற்றப்படுகின்றன. விந்துப் பாய்மக் குமிழ்களில் இறுதிநிலைக்குத் தயாராகின்றன.
மொட்டுமுனைத் தோல் (foreskin) ஆண்குறி மொட்டினை மூடியுள்ள தோல் மடிப்புகள் ஆகும். இது ஆண்குறி விறைப்பாக இல்லாதபோது ஆண்குறி மொட்டை பாதுகாக்கிறது. பெரும்பாலான பாலூட்டிகளுக்கு மொட்டுமுனைத் தோல் உள்ளது.
மொட்டுமுனைத் தோலின் வெளிப்பகுதி வழவழப்பான தோல் போன்றதே; ஆனால் முனைத்தோலின் உட்புறம் கண் இமை அல்லது வாய்த் தோலின் உட்பகுதிகளைப் போல மென்தோல் ஆக உள்ளது. மொட்டுமுனைத் தோல் ஆண்குறியுடன் கடிவாளத் திசுக்களால் பிணைக்கப்பட்டுள்ளதால் நகர முடியும். தசைகளுக்கு மீள்திறன் உள்ளது. ஆண்குறியின் மிகவும் உணர்திறனுடைய ஐந்து இடங்கள் முன்தோலில் உள்ளன.
மொட்டுமுனைத் தோல் மொட்டை ஈரமாக வைத்திருக்கவும் பாதுகாக்கவும் பாலுறவின்போது பல நரம்புத்தொகுதிகள் உள்ளதால் இன்பத்தைக் கூட்டவும் பயனாவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
புணர்ச்சிப் பரவசநிலை (Orgasm) அல்லது பாலின்ப உச்சி (sexual climax) என்பது நெடிய பாலுணர்வுத் தூண்டலின்பின் ஏற்படும் உடல், உளவியல் (psychology), மற்றும் மெய்ப்பாடு (emotion) நிலையிலான நிறைவளிக்கும் தூண்டற்பேற்றைக் குறிக்கும். இது நிகழும்போது விந்து தள்ளல், மேனி சிவத்தல், மற்றும் தானாயியங்கும் தசைச்சுருக்கங்கள் (spasms) ஆகிய உடலியல் விளைவுகள் ஏற்படுகின்றன.
ஆண்களும் பெண்களும் இவ்வுணர்வைப் பெறுகின்றனர். இருப்பினும் பெருமகிழுணர்வு (euphoria), கீழ் இடுப்புத் தசைகளுக்குக் கூடுதல் குருதியோட்டம், ஒழுங்குடனான (rhythmic) இடுப்புத் தசைச் சுருக்கங்கள், புரோலாக்டின் சுரப்பதால் ஏற்படும் அயர்வு உணர்வு போன்ற சில பொதுவான விளைவுகளைத் தவிர பல வகைகளில் இருபாலரிலும் மாறுபட்ட நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
மனிதரில் ஆண்பாலரில் புணர்ச்சிப் பரவசநிலையின்போது சுக்கிலம் (prostate), சிறுநீர்வழி (urethra), மற்றும் ஆண்குறியின் அடிப்பகுதி தசைகள் ஆகியவற்றின் விரைவான, ஓரிசைவுடனான, சுருக்கங்கள் ஏற்படும். பெரும்பாலும் இதே வேளையில் விந்துப் பாய்மம் (semen) ஆண்குறி வழியாக சுற்றிழுப்பசைவு (peristalsis) முறையில் மிகுந்த அழுத்தத்துடன் வெளியேற்றப்படுகிறது. ஒரு பரவசநிலை, நிகழ்விற்குப்பின் ஒரு விலக்கு வரம்பு (refractory period) உண்டு. இக்கால வரம்பிற்குள் மற்றொரு பரவசநிலை ஏற்படாது. இருப்பினும், இக்கால வரம்பு ஒருவரின் வயது, மற்றும் தன்னியல்பைப் பொருத்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான அளவிலிருந்து அரை நாள் வரை மாறுபடலாம்.
பெண்களில் பரவசநிலைக்கு முன்பு புணர்புழையின் (யோனி, vagina) சுற்றுச்சுவர் சில சுரப்பிகளின் செயலால் நனையும். கூடவே, கூடுதல் குருதியோட்டம் காரணமாக பெண்குறியின் (clitoris) மென்திசுக்களில் குருதி தங்குவதன்மூலம் அது விரிவடைகிறது. சில பெண்களில் உடல் நெடுகிலும் மேல்தோலிற்குக் கூடுதல் குருதி பாய்வதால் நாணம் அடைவது போன்று மேனி சிவக்கிறது.
பரவசநிலை அண்மிக்கும்போது பெண்குறி அதன் முகப்பு மூடியின்கீழ் (clitoral hood) சென்று உள்வாங்கிவிடுகிறது. மேலும், சிற்றுதடுகள் (labia minora) இருண்டுவிடுகின்றன. பரவசநிலை மேலும் நெருங்குகையில், புணர்புழை 30 விழுக்காடு வரை சுருங்குவதாலும், பெண்குறியின் திசுக்கள் உள்வருதலாலும் பெரிதும் அடைபட்டுப்போய் ஆண்குறியைக் கவ்விக் கொள்கிறது. அதன் பின் கருப்பை (uterus) தசைகள் சுருக்கம் காண்கின்றன. முழுமையான பரவசநிலையின்போது கருப்பை, புணர்புழை, மற்றும் கீழிடுப்புத்தசைகள் (pelvic muscles) ஆகியவை ஓரிசைவுடன் சுருங்கி விரிகின்றன.
ஆண்களைப்போலன்றி பெண்களால் ஒரு புணர்ச்சிப் பரவசநிலையை அடுத்து தொடர்ந்து சிறிய இடைவெளிகளில் பல பரவசநிலைகளைப் பெற முடியும்.
விந்து பாய்மம் அல்லது விந்துப் பாய்மத் திரவம் என்பது கருக்கட்டலுக்குத் தேவையான விந்துக்களைக் கொண்டிருக்கும் ஒரு வெண்ணிறத் திரவமாகும்.
இதனை ஆங்கிலத்தில் Semen அல்லது Seminal fluid என்று அழைப்பர். இது விந்துப்பை, புராஸ்டேட் சுரப்பி, கொவ்ப்பர் சுரப்பி, பல்போ-உறேதல் சுரப்பிகளால் சுரக்கப்படும். இப்பொருள் விந்து உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்தை வழங்குவதுடன், அவை நீந்திச் செல்லும் ஊடகமாகவும் விளங்கும். ஒருமுறை வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தில் 50 மில்லியன் விந்து உயிரணுக்கள் இருக்கலாம்.
புணர்ச்சியின்போது ஆண் புணர்உறுப்பு விறைத்துப் பெரிதாகும். அவ்வுறுப்பின் அடிப்பகுதியிலிருந்து தோன்றும் தசை இயக்கங்களால் விந்துப் பாய்மம் விசையுடன் பெண்ணின் கலவிக் கால்வாயினுள் பீச்சப்படும்.
இயற்கையின் படைப்பில் எத்தனை அதிசயங்கள்? அதில் மனித உடல் மகா அதிசயம். அதன் செயல்பாடுகள் மகா மகா அதிசயம்.
ஊனுடம்பு ஆலயம் என்றார் திருமூலர். ஆகவே நம்மை நாமே பராமரித்து, ஒழுங்காக வைத்துக்கொண்டால் தான் அங்கே ஆண்டவன் குடி இருக்க முடியும்