தடுப்பூசி என்றால் என்ன - நல்லதா ! கெட்டதா

தடுப்பூசி என்றால் என்ன - நல்லதா ! கெட்டதா !


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



தடுப்பூசியைப்பற்றிக் கேள்விப் படாத நபர்களே இருக்க முடியாது. பிறந்த குழந்தைக்குப் பிறந்த அன்றே தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. தடுப்பூசியில் என்ன இருக்கும்? தடுப்பூசியில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு தடுப்பூசி என்பது அந்த நோய்க்கிருமியை அழிக்கும் ஒரு மருந்து இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படிக் கிடையாது. தடுப்பூசியில் நோய்க்கிருமிதான் இருக்குமே தவிர நோய்க்கிருமியை அழிக்கும் எந்த ஒரு மருந்தும், மாத்திரையும் இருக்காது. இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?. உதாரணமாக போலியோ சொட்டு மருந்து என்றால் போலியோ வைரஸை உயிருடன் குழந்தைக்கு அனுப்பும் ஒரு முறைதான் போலியோ தடுப்பு சொட்டு மருந்து. அம்மை தடுப்பூசி என்றால் அம்மை நோய்க்கிருமியை சில பிராச° செய்து குழந்தையின் உடலில் அனுப்புவதற்கு அம்மைத் தடுப்பூசி என்று பெயர்.

எனவே தடுப்பூசியில் நிறைய ரகங்கள் உள்ளது. ஒரு சில தடுப்பூசிகள் உயிருடன் கிருமிகளை அனுப்புவார்கள். ஒரு சில இறந்த கிருமிகளையும், ஒரு சில தடுப்பூசியில் பாதி இறந்த மயக்க நிலையில் உள்ள கிருமிகளையும் அனுப்புவார்கள். ஆக தடுப்பூசி என்றால் மருந்து மாத்திரை இருக்காது. நோய்கிருமிதான் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆச்சரியமாக இருக்கும். நோய்க்கிருமிகளை உடலில் அனுப்பினால் இதற்குத் தடுப்பூசி என்று எப்படி பெயர் வைக்க முடியும்.

பிறந்த குழந்தைக்கு அ, ஆ, இ, ஈ அல்லது எபிசிடி-யோ தெரியாது. தான் ஒரு மனிதன் என்றே ஒரு குழந்தைக்குத் தெரியாது. ஆணா? பெண்ணா? என்றும் அந்த குழந்தைக்குத் தெரியாது. அப்படிப்பட்ட ஒரு குழந்தைக்குப் பிறந்த அன்றே தடுப்பூசி என்ற பெயரில் நோய்க்கிருமியை உடலில் அனுப்புவது என்ன தைரியத்தில் என்று கேட்டால் மனித உடலில் அனைவருக்கும் ஒரு அறிவு உள்ளது. எந்த நோய்க்கிருமி உடலுக்குள் புகுந்தாலும் அது நல்ல கிருமியா அல்லது உடலுக்கு நோய் உண்டு செய்யும் கெட்ட கிருமியா என்று ஆராய்ச்சி செய்யும். நல்ல கிருமிகள் பல ஆயிரக்கணக் கானவை உள்ளன. அவற்றை நம் உடல் ஒன்றும் செய்யாது. உடலுக்கு நோயை ஏற்படுத்தும். கெடுக்கும் நோய்கிருமிகளைக் கண்டுபிடித்து விட்டால் உடலில் உள்ள தைம°ஸ் சுரப்பி, கல்ஙூரல், மண்ணீரல், எலும்பு மஜ்ஜைகள், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகளும் பல சுரப்பிகளும் ஒன்று சேர்ந்து ஆராய்ச்சி செய்து இந்த நோய்க்கிருமிகளை அழிப்பதற்கு எந்த மாதிரி மருந்து வேண்டும் என்று யோசித்து அந்த மருந்தைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்களையும், எந்தவிதத்தில் கலக்க வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும். அதாவது ஒரு பார்முலா தயார் செய்யும்.

பார்முலா என்றால் என்னவென்றால் நமது வீட்டில் ஒரு ரசம் செய்வதற்கு எந்த எந்த பொருட்களை எவ்வளவு கலந்து எப்படி சுடவைத்துத் தயாரிக்க வேண்டும் என்பதற்கு ஒரு அறிவு தேவைப்படுகிறது அல்லவா? அந்த பார்முலா தெரியாத நபரால் ரசத்தை தயாரிக்க முடியாது. அதுபோல உடலில் உறுப்புகளாகிய ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் சொந்தமாக ஆராய்ச்சி செய்து ஒரு பார்முலாவை எழுதி அந்த பார்முலாவுக்கு தேவைப்படுகிற மூலப்பொருள்களை இரத்தம் என்ற இடத்திற்குச் சென்று எடுத்து வந்து அதை சரியாக கலவை செய்து மருந்தை தயார் செய்து, அந்த மருந்தை நோய்க்கிருமிகள் மேல் செலுத்தி அந்த நோய்க்கிருமியை அழிக்கிறார்கள்.

இப்படி உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இயற்கையாகவே பிறந்த நாள்முதல் நோய்க்கிருமியை அழிக்கும் ஆற்றல் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் மட்டுமே உலகத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்படுகிறது.

தடுப்பு ஊசி என்ற பெயரில் உடலுக்குள் நோய்க்கிருமிகளை உடலுக்குள் அனுப்புகிறார்கள். உடல் அந்த நோய்கிருமி என்றுஅறிமுகப்படுத்தி அதை அழிக்கும் சக்தியை நம் உடல் பழகுவதற்குத்தான் தடுப்பூசி அனுப்பப்படுகிறது.

தடுப்பூசியில் நோய்கிருமிகள்தான் இருக்கும் என்ற விஷயமும், அதுதான் நோய்க்கிருமியை அழிக்கிறது என்று உலகத்திலுள்ள எந்த மருத்துவரிடம் கேட்டாலும் சொல்வார்கள். இது பொதுமக்களாகிய நமக்கு எத்தனை பேருக்கு தெரியும் ? இதைக்கூட தெரியாத நமக்கு உடலைப் பற்றியும், மருத்துவத்துறையைப்பற்றியும் வேறு என்ன தெரிந்திருக்க முடியும்.

தடுப்பூசிகள் குறிப்பாக குழந்தைப் பருவத்தில் மட்டுமே செலுத்துவார்கள். 20 வயது 50 வயது நோய்களுக்கு தடுப்பு ஊசி கொடுக்கப்படுவது கிடையாது. இதற்கு காரணம் என்னவென்றால், பிறந்த குழந்தைக்கு உடலில் 5 விஷயங்கள் ஒழுங்ககாக இருக்கும். வயதாக வயதாக நம்மில் நம்மிடம் உள்ள கெட்ட பழக்க வழக்கத்தினால் அந்த 5ல் ஒன்றோ இரண்டோ கெட்டு விடும். நம் உடலில் 5 விஷயங்கள் ஒழுங்காக இருக்கும் பொழுது மட்டுமே ஒரு நோய்க்கிருமியை உடல் அறிவால் அழிக்க முடியும். அப்பொழுது பிறந்த குழந்தைக்கு என்ன இருக்கிறது. இப்போது நம்மிடம் என்ன இல்லை என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

பிறந்த குழந்தைக்குத் தடுப்பூசி என்ற பெயரில் நோய்கிருமி அனுப்பும்பொழுது அது உடம்பில் நோய்கிருமியை அழித்து விடுகிறது. ஆனால், 20 வயது 50 வயது நபர்களுக்கு நோய்க்கிருமியின் மூலமாக சிக்கன் குனியா, மட்டன் குனியா போன்ற நோய்கள் வருகிறதே இது எதனால் என்று யோசிக்க வேண்டும்.

மனிதனின் உடலுக்கே நோய்கிருமியை அழிக்கும் சக்தி இருந்தால், எனக்கு ஏன் சிக்கன் குன்யா போன்ற நோய்கிருமிகள் வருகிறது என்ற சந்தேகம் உங்கள் மனதில் தோன்றும். அதற்குக் காரணம், சிறு வயதில் நம் உடலில் 5 விஷயங்கள் ஒழுங்காக இருக்கிறது. இப்பொழுது 5 விஷயங்களில் ஏதோ ஒன்றோ இரண்டோ ஒழுங்காக இல்லை. எனவே, நோய்கிருமியினால் ஒரு மனிதனுக்கு நோய்கள் வருவதில்லை. நம் உடலில் ஏதோ ஒன்று குறைபடுவதால் அந்த மருந்தைத் தயாரிக்கும் முறையில் சில சிக்கல்கள் ஏற்படுவதால் அந்த நோய்க்கிருமியை அழிக்க முடியாமல் நம் உடல் தடுமாறுகிறது. எனவே, தவறு நோய் கிருமிகள் மேல் இல்லை. நமது உடலில் உள்ள சில விஷயங்கள் என்ன என்பதைப் புரிந்து கொண்டு அதை சரிப்படுத்துவது எப்படி என்று ஆராய்ச்சி செய்தால் நாம் நோய்கிருமியை பார்த்து பயப்படத் தேவையில்லை.

உடலை அம்மாவாகவும், இரத்தத்தை சமையலறையாகவும் இரத்தத்தில் உள்ள பொருள்களை சமையல் அறையில் உள்ள பொருளாகவும், ரசத்தை ஒரு நோய்கிருமிக்கான மருந்தாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். சமையலறையில் ரசத்திற்கு தேவையான ஒரு பொருள் கெட்டுப்போன பொருளாக இருந்தால் அதை வைத்து ரசம் செய்யும்பொழுது அந்த ரசத்தை நாம் சாப்பிட முடியாது. அதுபோல ஒருவருக்கு ஒரு நோய்க்கிருமி உடலில் நுழையும்பொழுது அதை அழிக்கத் தயாரிக்க தேவையான ஒரு பொருள் நமது இரத்தத்தில் கெட்டுப்போய் இருந்தால் அந்த மருந்தால் சரியாக வேலை செய்ய முடிவதில்லை. இதனால் நமக்கு அந்த நோய்கிருமியை அழிக்க முடியாமல் நோய் வருகிறது. இது முதலாவது காரணம்.

இப்பொழுது கூறுங்கள். நோய்கிருமியால் நோய் வந்ததா? அல்லது நம் இரத்தத்தில் ஒரு பொருள் தரம் குறைந்ததால் நோய் வந்ததா? நமது சிகிச்சையில் தரம் குறைந்த பொருளைத் தரம் சரி செய்வது எப்படி? என்பதை நாம் கற்றுக் கொள்ள போகிறோம். எனவே இனி நாம் நோய்க்கிருமியை அழிப்பதற்கு மருந்து மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

காரணம் இரண்டு. ஒரு வேளை சமையலறையில் ரசம் தயாரிக்க ஒரு பொருள் இல்லை என்று வைத்துக் கொள்வோம். ரசத்தில் ஒரு பொருள் இல்லாமல் உருவாக்கினால் அதை யாரும் சாப்பிட முடியாது. அதேபோல் இரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமியை அழிக்க தேவைப்படும் ஒரு பொருள் இல்லாமல் இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ நம் உடலால் அந்த குறிப்பிட்ட மருந்தை தயாரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, நோய்க்கிருமி அழிக்க முடியாமல் நோய் வருகிறது. இப்பொழுது சொல்லுங்கள் நோய்கிருமியால் நோய் வந்ததா? இரத்தத்தில் ஒரு பொருள் இல்லாமல் அல்லது குறைந்து இருப்பதால் நோய் வந்ததா? நமது சிகிச்சையில் இரத்தத்தில் இல்லாமல் போன பொருளை வைப்பதற்கும், குறைந்த பொருளை சரிசெய்வதற்கும் சில எளிய முறைகள் உள்ளன. அதை நாம் கற்றுக் கொள்ளப்போகிறோம். அதை கற்றுக்கொண்டு ஒழுங்கு படுத்தினால் நோய்கிருமிகளிலிருந்து நம் உடலை நாம் காப்பாற்றலாம்.

மூன்றாவது காரணம். ஒவ்வொரு மனிதனுடைய உடலிலுள்ள உயரம், எடை, வயதைப் பொறுத்து இரத்தத்திற்கு ஒரு அளவு உள்ளது. 4 லிட்டர் 5 லிட்டர் என நம் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு சரியாக இருக்க வேண்டும். அதன் அளவு குறையும் பொழுது நோய்க்கிருமிகளுக்கு எதிரான போராட்டத்தை நம் உடல் செய்யாது. எனவே இரத்தத்தின் அளவு குறைவதால் தான் நோய் வருகிறதே தவிர, நோய்கிருமியால் அல்ல என்பதை புரிந்து கொண்டு இரத்தத்தின் அளவை சரியாக வைத்துக்கொள்வதற்கு நாம் கற்றுக்கொள்ளப்போகிறோம். எனவே நாம் நோயிலிருந்து விடுபடலாம்.

நான்காவது காரணம். நமது மனம் கெட்டுப்போனால், நோய்க்கிருமியை அழிக்க முடியாது. நமது மனதிற்கும், உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நம் மனம் எதைப்பற்றி யோசிக்கிறதோ, உடல் அதைச் செய்யும். ஒரு உடலுக்கு நோய்க்கிருமியால் ஒரு காய்ச்சல் வந்தவுடன் நமது மனம் நமக்கு நோய் வந்து விட்டது பயமாக இருக்கிறது. இதை மருந்து மாத்திரையால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்று நினைத்தால், உடல் உங்கள் நோயை குணப்படுத்தாது. என் உடலுக்கு அறிவுள்ளது அது கண்டிப்பாக குணப்படுத்தும் என்று மனதில் பயமில்லாமல் தைரியமாக இருந்தால் மட்டுமே நம் உடல் நம் நோயை குணப்படுத்த முடியும்.

 நீங்கள் பார்த்திருக்கலாம் பலர் பல சந்தோஷமாக அமர்ந்திருக்கும்பொது அந்த உணவில் பல்லி விழுந்து விட்டது என்று யாராவது சொன்னால் அடுத்த வினாடி வாந்தி வருகிறது. உணவில் பல்லி விழுந்தது என்று தெரியாதவரை ஜீரணம் செய்து கொண்டிருந்த வயிறு இப்போது ஏன் வாந்தி எடுத்தது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, மனம் நினைத்தால் ஜீரணம் செய்யும் வயிற்றை நிறுத்தி வாந்தி எடுக்க வைக்கும். எனவே, மனதில் ஒரு நோய் வந்தவுடன் பயம் ஏற்பட்டால் அந்த நோயை உடல் குணப்படுத்தாது. இது நான்காவது காரணம்.

நமது உடலில் அறிவு உள்ளது. அந்த அறிவுதான் நோய்க்கிருமியை அழிக்கிறது. அந்த அறிவும் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. அது கெட்டுப் போகும் பொழுதும் நமக்கு நோய்க்கிருமியால் நோய் வரும். இது ஐந்தாவது காரணம்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொண்டது என்னவென்றால் நோய்க்கிருமியால் உடலுக்கு நோய் வருவதில்லை. நம் உடலில் இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப்போவதால், இரத்தத்தில் ஒரு பொருள் இல்லாமல் போவதால் அல்லது குறைந்து போவதால், இரத்தத்தின் அளவு குறைவதால், மனது கெட்டுப் போவதால், உடல் அறிவு கெட்டுப் போவதால் மட்டுமே நமக்கு நோய் வரும்.
எனவே ஒருவருக்கு நோய்கிருமியால் எந்த நோயும் வரவில்லையென்றால் அவ்வுடலில் இந்த 5 விஷயங்களும் ஒழுங்காக இருக்கிறது என்று பொருள். ஒருவருக்கு நோய்க்கிருமியால் நோய் வந்து விட்டது என்றால் ஐந்தில் ஒன்றோ, இரண்டோ அல்லது பல விஷயங்கள் கெட்டுப் போய்விட்டது என்று பொருள்.

நோய்க்கிருமியால்தான் நோய் வருகிறது என்பதை நம்மால் ஒத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் நோய்க்கிருமியால் நோய் வருகிறது என்றால், மருத்துவர்களுக்குத்தான் அதிகமாக நோய் வரவேண்டும்.

ஏனென்றால் அவர்கள்தான் தினமும் மருத்துவமனையில் பல கிருமிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பார்க்கிறார்கள். அவர்கள் உடலிலிருந்து வரும் காற்றின் மூலமாக, அவர்கள் தொடும் பொருள்களின் மூலமாக அந்தக் கிருமிகள் பரவுகிறது. ஏன் மருத்துவர்களுக்கு மட்டும் அந்த நோய் வரவில்லை.

நோய்கிருமியால்தான் நோய் வருகிறது என்பது உண்மையானால் ஒரு ஊரில் உள்ள அனைவருக்கும் ஒரே நோய் வரவேண்டும். ஆனால் உங்கள் வீட்டில் பத்து நபர்கள் இருந்தால் எட்டு நபர்களுக்கு வரும் நோய் அந்த இரண்டு நபர்களுக்கு மட்டும் ஏன் வரவில்லை என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

அந்த இருவருக்கும் இந்த ஐந்து விஷயங்களும் ஒழுங்காக இருக்கும். எனவே உலகிலுள்ள பலவிதமான நோய் கிருமிகள் பற்றி ஆராய்ச்சி செய்து அதற்கு பெயர் வைத்து அந்த நோய்கிருமிகளை பெரிய மனிதர்களாக ஆக்குவதை விட்டுவிட்டு நமது உடலில் இந்த ஐந்து விஷயங்களையும் சரியாக வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றிய சிறிய ரகசியங்களை புரிந்து கொண்டு அதை சரி செய்துவிட்டால் எந்த நோய்க் கிருமியாலும் எந்த நோயும் வராது.

நோய்க்கிருமி என்றால் என்ன? அது என்ன வடிவத்தில் இருக்கும்? என்ன அளவில் இருக்கும் என்று தெரியாத பலர் இந்த நோய்கிருமியைப்பார்த்து பயப்படுவார்கள். பல கிருமிகள் நம் கண்ணிற்கே தெரியாது. இதுவரை யாரும் மைக்ரா°கோப் மூலமாக கூட யாரும் பார்த்தது கிடையாது. நாம் சுவாசிக்கும் காற்றில் பலகோடிக் கணக்கான நோய் கிருமிகளும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வினாடியும், நாம் விடும் மூச்சுக்காற்றின் வழியாக பல கோடிக்கணக்கான நோய்க்கிருமிகளை நம் உடலுக்குள் சென்று வெளியே அனுப்புகிறோம்.

எனவே தயவு செய்து நோய்க்கிருமியைப் பார்த்து பயப்படாதீர்கள். ஒரு மனிதனுக்கு மேலே கூறப்பட்ட ஐந்து விஷயங்களும் சரியாக இருந்தால் அவருக்கு எந்த நோய்க்கிருமியாலும் எந்த நோயும் வராது. அப்படி வந்தாலும் காய்ச்சல் வந்தால் என்ன செய்யவேண்டும் என்று இந்த புத்தகத்தில் விரிவாக கூறியிருப்போம். அதைமட்டும் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்தினால் எந்த மருந்து, மாத்திரை மற்றும் மருத்துவரின் உதவி இல்லாமலே நாம் நோய்க்கிருமியை வெல்ல முடியும்.

எனவே, தடுப்பூசியில் நோய்க்கிருமிதான் இருக்கும். பிறந்த குழந்தைக்கு மிகச்சிறந்த தடுப்பூசி குழந்தையின் அம்மாவின் தாய்ப்பால்தான். தாய்ப்பால்தான் உலகத்திலேயே மிகச்சிறந்த தடுப்பூசி. ஒரு அம்மா தன்னுடைய வாழ்நாளில் மற்றும் அவருடைய பரம்பரையில் உள்ள அனைத்து நோய்களையும் எப்படி குணம் செய்தார் என்ற ரகசிய பார்முலாவை தாய்ப்பாலின் வழியாக தன் குழந்தைக்கு கற்றுக்கொடுக்கிறாள். பிறந்த குழந்தைக்கு முதல் 3 முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வேறு எந்த தடுப்பூசியும், மருந்து மாத்திரையும், லேகியமும் கொடுக்காமல் வளர்த்தால் உலகிலேயே அந்த குழந்தைபோல் நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குழந்தை வேறு எந்தக் குழந்தையும் இருக்காது.

இப்படிப் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி என்ற பெயரில் ஒரு நோய்க் கிருமியை உள்ளே அனுப்பும்பொழுது அந்த குழந்தையின் உடல் தாய்ப்பாலின் மூலமாக வரும் பலகோடிக்கணக்கான அறிவை சேர்த்து வைக்காமல் இந்த தடுப்பூசியில் உள்ள நோய்க்கிருமியை பார்த்து பயந்து இந்த நோய்க் கிருமிகளுக்கு எதிராக சிகிச்சை அளிப்பதற்கு வேலை செய்ய ஆரம்பிக்கிறது. எனவே, தடுப்பூசி போட்ட அந்த நோய்க்கு மட்டும் பாதுகாப்பாக இருக்குமே தவிர, வேறு எந்த நோய் வரும்பொழுது பயப்பட ஆரம்பிக்கிறது. எனவே குழந்தைகளுக்குத் தடுப்பூசி கொடுப்பது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைவு செய்யுமே தவிர அதிகப்படுத்தாது.

தடுப்பூசி என்றால் என்ன? தடுப்பூசி எப்படி உருவாயிற்று? பல நூற்றாண்டுகளாக இந்தத் தடுப்பூசி எந்தெந்த நாடுகளில் பயன்படுத்தப் பட்டது?. எந்தெந்த நாடுகளில் எத்தனை மக்கள் உயிரிழந்தார்கள்?. தடுப்பூசியைத் தடை செய்வதற்கு அது சம்பந்தமான ராயல் கமிஷன் ஆப் இந்தியா என்ற ஒரு இயக்கம் தோற்றப்பட்டது எப்பொழுது? இப்பொழுது தடுப்பூசியின் நிலை என்ன? தடுப்பூசி என்பது தேவையில்லாத ஒன்று என்பதை இயற்கை வைத்தியம் என்ற தமிழ்வாணன் ஐயா எழுதிய புத்தகத்தை தயவு செய்து படித்துப்பாருங்கள். அதில் முதல் 200 பக்கங்களில் இந்த தடுப்பூசி பற்றி தெளிவாக கூறியிருப்பார்.

தடுப்பூசி என்பது நோய்க் கிருமியை உடலுக்குள் அனுப்பும் ஒருமுறை. உடல் நோய்க்கிருமியை பார்த்த அடுத்த வினாடி, ஹெல்பர், கில்லர், சப்ர°ஸர், மெம்மரி என்ற நான்கு காரியத்தை செய்யும். ஹெல்பர் என்றால் சளி. முதலில் சளியை உண்டு செய்து அந்த நோய்கிருமியை சளி மூலமாக வெளியேற்றும். சளி என்பது நோய்க்கிருமியை வெளியேற்றும் ஒரு வாகனம். எனவேதான், தண்ணீரை மாற்றிக் குடிக்கும்பொழுது சளிப் பிடிக்கிறது. இது ஏன் என்பதை தண்ணீர் அருந்தும் முறை என்ற தலைப்பில் இந்த புத்தகத்தில் தெளிவாகப் பார்க்க உள்ளோம். ஒரு நோய்க்கிருமியை ஹெல்பர் என்ற சளியால் வெளியே அனுப்ப முடிந்துவிட்டால் அத்துடன் உடல் சமாதானம் அடைகிறது.

ஒரு சில நோய்க்கிருமிகள் சளிக்கு வெளியே செல்லாமல் சளியை இழுத்துக்கொண்டு உடலுக்குள் செல்ல ஆரம்பித்துவிடும். அப்பொழுது கில்லர் என்ற ஒரு மருந்தை நமது உடல் தயார் செய்து அந்த நோய்க்கிருமியை அழிக்கிறது. இந்த கில்லர் என்ற மருந்து ஒரு புரோட்டீன் ஆகும். இம்மருந்து நோய்கிருமியை அளித்த உடல் அந்த கில்லர் என்ற மருந்தை அழிப்பதற்காக சப்ர°ஸர் என்ற ஒரு மருந்தை உடன் தயார் செய்கிறது. இந்த சப்ர°ஸர் என்ற மருந்து கில்லர் என்ற மருந்தை வீரியமிழக்கச் செய்கிறது. இப்படி சளி, நோய்க்கிருமியை அழிக்கும் மருந்து, மருந்தை சமாதானப்படுத்தும் மருந்து என 3 மருந்துகளை அது அனுப்பி நான்காவதாக நமது உடலில் உள்ள செல்களில் நான் ஒரு நோய்க்கிருமியை பார்த்தேன். அந்த நோய்க்கிருமியின் வீரியம் இவ்வளவு, அதை அழிப்பதற்காக நான் இந்த மருந்துகளை அனுப்பினேன், அதன் மூலமாக அந்த நோய்க்கிருமி இறந்து விட்டது, சக்ஸ°, என்று அந்த பார்முலாவை பதிவு செய்வது மெம்மரி என்ற அறிவு. இப்படி ஒவ்வொரு நோய்க்கிருமியும் உடலுக்குள் போகும்பொழுது இந்த நான்கு முறையில் நான்கு விதமாக நமது உடல் அறிவு வேலை செய்து நோய்க்கிருமியை அழிக்கிறது.