பொடுகு தொல்லைக்கு எலுமிச்சை - Dandruff-control-lemon

பொடுகு தொல்லைக்கு எலுமிச்சை  - Dandruff-control-lemon

தலைமுடி அழகை குறைப்பதில் பெரும் பங்கு பொடுகுக்கு உண்டு. பொடுகு, கூந்தல் பிரச்சனைக்கு எலுமிச்சை பழத்தால் தீர்வு கிடைக்குமா என்று பார்க்கலாம்.
பொடுகு தொல்லைக்கு எலுமிச்சை  - Dandruff-control-lemon



           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753


பொடுகு தொல்லைக்கு எலுமிச்சை தீர்வு தருமா?
தலைமுடி அழகை குறைப்பதில் பெரும் பங்கு பொடுகுக்கு உண்டு. அழகாக அலங்கரித்த தலையில் அங்கங்கே காணப்படும் வெள்ளை திட்டுகளாக பொடுகு தோன்றும்போது பார்க்க நன்றாக இருக்காது. கூடவே அரிப்பும் சேர்த்து தலை முடி அழகை கெடுத்து விடும்.

எலுமிச்சை சாறில் இருக்கும் அமிலதன்மை தலைமுடியின் pH அளவை சமன் செய்ய உதவுகிறது. 1-2 ஸ்பூன் எலுமிச்சை சாறை எடுத்து தலையில் தடவி ஊற விடவும். 1 மணி நேரம் கழித்து தலையை அலசவும். தினமும் இதை செய்து வருவதால் பொடுகு மறைந்து தலை முடியும் பளபளப்பாக இருக்கும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பூண்டு அல்லது சந்தன எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து, அந்த கலவையை தலைக்கு தடவலாம். பூண்டு மற்றும் சந்தன எண்ணெய்யில் ஆன்டி மைக்ரோபியல் தன்மை அதிகமாக உள்ளதால் பொடுகு உடனே மறைகிறது. ஒரு பங்கு எலுமிச்சை சாறுடன் 2 பங்கு பூண்டு அல்லது சந்தனஎண்ணெய்யை சேர்த்து சிறிதளவு தேன் சேர்த்து பயன்படுத்தலாம்.

ஆரோக்கியமான, வலுவான கூந்தலுக்கான உங்களை கனவை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் வைட்டமின் சி கொண்டுள்ளது. இது மயிர்கால்களை வலுவாக்கி, தலைமுடி வளர்ச்சியை ஊக்குவித்து, எண்ணெய்பசையை உச்சந்தலையில் இருந்து அகற்றி, பொடுகையும் நீக்குகிறது. ஆனால் வைட்டனின் சி பயனை பெறுவது எப்படி? இதற்கான பதில் எலுமிச்சையில் இருக்கிறது. ஆம், பொடுகை அகற்றி, உங்கள் கூந்தலுக்கு வைட்டமின் சி பலன்களை அளிக்க எலுமிச்சையே போதுமானது. 

தலைமுடியில் இருந்து பொடுகை நீக்கி, பொலிவு மிக்க ஆரோக்கியமான கூந்தலுக்காக, வைட்டமின் சி ஆற்றலை பெற எலுமிச்சையை பயன்படுத்திக்கொள்வதற்கான வழிகள் இதோ:

உங்கள் கூந்தலை எலுமிச்சை, தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். எலுமிச்சை ஹேர் ஸ்கிரப்பை முயற்சிக்கவும். எலுமிச்சை சாறு , தண்ணீர் கொண்டு ரின்ஸ் செய்யவும்

வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலக்கவும். இந்த கலவை கொண்டு கூந்தலை 10 நிமிடம் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் பொடுகு எதிர்ப்பு ஷாம்பு கொண்டு கூந்தலை அலசவும்.

இரண்டு ஸ்பூன் கடல் உப்பு, பாதி எலுமிச்சையில் இருந்து எடுத்த சாறு மற்றும் 23 ஸ்பூன் ஆலிவ் ஆயில் கொண்டு ஹேர் ஸ்கிரப் தயார் செய்யவும். எலுமிச்சை மற்றும் கடல் உப்பு, பொடுகை எதிர்க்க வல்லவை. ஆலிவ் ஆயில் உச்சந்தலையின் இயற்கையான எண்ணெய் பசையை தக்க வைப்பவை. 8 முதல் 10 நிமிடம் வரை மென்மையான உச்சந்தலையை ஸ்கிரப் செய்து பின்னர் ஷாம்பு கொண்டு குளிக்கவும். பொடுகு இல்லாத கூந்தல் பெற வாரந்தோறும் இவ்வாறு செய்யவும்.