கண்களுக்கு ஐ லைனர் போடுவது எப்படி?

கண்களுக்கு ஐ லைனர் போடுவது எப்படி?


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


கண்களின் மேல் மற்றும் கீழ் பக்கங்களில் ஐ லைனர் தீட்டுவதன் மூலம் கண்களின் வடிவமும் அழகும் இன்னும் பல மடங்கு அதிகரித்து காட்டும்.

உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் வெளிக்காட்டும் கண்ணாடி நமது கண். கவரும் கண்களைப் பெற எளிதான சில விஷயங்களை செய்தாலே போதும். பலரும் முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கண்களுக்குக் கொடுப்பதில்லை. சிலருக்கு நமது கண்ணுக்கு எந்த விதமான மேக்கப்பை போட வேண்டும் என்று தெரிவதில்லை. இளம் பெண்களின் மத்தியில் டிரெண்டாகும் வில் போன்ற ஐ லைனர்.

பொதுவாக கண்களின் மேல் மற்றும் கீழ் பக்கங்களில் ஐ லைனர் தீட்டுவதன் மூலம் கண்களின் வடிவமும் அழகும் இன்னும் பல மடங்கு மேம்படும். ஐ லைனர்களில் இன்று நிறைய ஷேடுகளும் வகைகளும் கிடைக்கின்றன. வாட்டர் ப்ரூஃப் ஐ லைனர் என்பது கண்களின் வெளியே கொஞ்சம்கூட கசியாமல் நீண்ட நேரத்துக்கு அப்படியே இருக்கும்.

பென்சில் வடிவிலான ஐ லைனரை பயன்படுத்துவது சுலபம். முதன் முறையாக உபயோகிப்பவர்களுக்கு இந்த பென்சில் ஐ லைனர் உதவியாக இருக்கும். ஆனால், ஜெல் அல்லது நீர் தன்மையில் இருக்கும் ஐ லைனர் போன்று இந்த பென்சில் ஐ லைனரில் அடர்த்தியாக வில் போன்ற வடிவில் போடமுடியாது.

பென்சில் ஐ லைனர் வைத்து ஒரு கோடு வரைந்துக் கொண்டு பின்னர் ஐ லைனரால் இழுத்தால் நெளியாமல் ஒரே வளைவாக வரும். அது பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

இமை முடிக்கு மேல் ஸ்காட்ச் டேப் போட்டு ஒட்டிவிட்டு அதன் மேல் ஐ லைனர் பயன்படுத்தினாலும், வில் போன்ற வடிவில் வரைய ஏதுவாக இருக்கும்.

ஐ லைனர், ஐ ஷேடோ போடும்போது கையில் நடுக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்று. அதனை 3 எளிய வழிகளில் நீக்கிவிடலாம். ஒரு சேரில் வசதியாக அமர்ந்துக் கொள்ளுங்கள். வாட்டமான இடத்தில் கை முட்டியை வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை நடுக்காமல் இருக்க தாடை பகுதியில் வைத்து அழுத்திக் கொண்டால் ஆட்டம் இல்லாமல் ஐ லைனர் போடலாம்.

ஐ லைனர் போடும்போது களைந்துவிட்டால் துடைக்க கையில் பஞ்சு வைத்துக் கொள்வது நல்லது.

கண் சீலர் அல்லது பிரைமர் பயன்படுத்தாவிட்டால் ஐ லைனர் கண்ணுக்கு கீழ் கசிந்து அழகை பாழாக்கிவிடும்.