எலும்புத் தேய்மானம் தடுப்பது எப்படி?

எலும்புத் தேய்மானம் தடுப்பது எப்படி?


பெண்களுக்கு மாதவிடாய் நிறைவுபெறும் காலத்தில் எலும்புத் தேய்மானம் ஏற்படுவது இயற்கையான நிகழ்வு.

ஆனால் இப்பொழுது இருபது முதல் முப்பது வயதடைய இளம்பெண்களிடையே கூட எலும்பு தேய்மான பாதிப்பு உள்ளது.

பல இளம்பெண்கள் கழுத்து வலி, முதுகுவலி, மூட்டு வலியால் துன்பப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் எலும்பு தாதுவில் அடர்த்தி குறைந்து, எலும்பின் வலிமை குன்றுவது தான்.

எலும்பு தேய்மானத்திற்கான காரணங்கள்:

இரவு வெகு நேரம் கண் விழிப்பது, காலையில் தாமதமாக எழுவது, இரவு பணி செய்வது, குளிரூட்டப்பட்ட இடங்களில் வேலை செய்வது, ஏ.சி. வாகனங்களில் பயனிப்பது என சூரிய ஒளி நம் உடலிலேயே படாமல் இருப்பவர்கள் இப்பொழுது அதிகம் பேர் உள்ளனர்.

சூரிய ஒளியினால் கிடைக்ககூடிய வைட்டமின் டி குறைவால் எலும்பின் அடர்த்தி குறையும். உடலுக்கு ஒரு வடிவத்தை கொடுப்பதுஎலும்பு. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களால் எலும்பு உருவாகின்றது.

கால்சியத்தை எலும்பு ஏற்றுக்கொள்ள வைட்டமின் டி. தேவைப்படுகிறது. இளம்வயதில் எலும்புகள் நீளமாகவும், அகலமாகவும் வளரும். பதினெட்டு வயதுக்கு பின் நீண்டு வளராது. அகலத்தில் தான் வளரும். 30 வயதுக்கு பின் எலும்பின் வளர்ச்சி நின்று விடும்.

அதற்குள் நாம் எலும்பின் உறுதியையும், திண்மையையும் அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். 30 வயதுக்கு பின் எலும்பின் அடர்த்தி சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும்.

உணவில் தேவை அக்கறை:

அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும்.

உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும். உடலில் உப்பு அதிகமாகும் பொழுது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அப்பொழுது அதனுடன் கால்சியமும் தாதுவும் வெளியேறிவிடும்.

அதுனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குதீனியை குறைத்து சாப்பிட வேண்டும்.

பாஸ்போரிக் அமிலம் உள்ள குளிர்ப்பானங்கள் கால்சியம் தாதுவை அழிக்கும் தன்மையுள்ளவை. காபி, டீ போன்ற பானங்கள் அதிகம் பருதுவதும் கால்சியம் குறைய காரணமாகின்றது.

கால்சியம் நிறைந்த உணவுகள்:

பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த வேண்டும். வயதானவர்களுக்கு பால் அதிகம் ஜீரணமாவதில்லை.

அவர்கள் கால்சியம் சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றம் கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம்.

காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைகாய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்சியம் அபரிமிதமாக உள்ளது.

அகத்திகீரை, முருங்கைகரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறி வேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்சியம் உள்ளது.

எள், கால்சியம் சத்து நிறைந்தø ஒரு எண்ணெய் வித்து, எள்ளை வெல்லம் உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்சியம் உள்ளது. எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம். தினமும் 5 பாதம் பருப்புகளை ஊற வைத்து அரைத்து பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

கேழ்வரகில் பாலை விடை அதிக கால்சியம் உள்ளது. குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் முருங்கை கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம். இது ஒரு கால்சியம் சத்துள்ள முழுமையான சிற்றுண்டி.
பெரியவர்கள் கஞ்சி கூழாக செய்து சாப்பிட நல்ல பலனிருக்கும்.

எலும்பு தேய்மானத்துக்கு மிக அருமையான உணவு மருந்து பிரண்டை என்னும் கொடி. பிரண்டை எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இணைப்பு திசுக்களை விரைவில் வளரவும் உதவுகின்றது. சிறந்த வலி நிவாரணியாகவும்,வலி, வீக்கத்தை குறைக்கும் தன்மையுடையதாகவும் உள்ளது. உடைந்த எலும்புகளை எளிதில் சேர்க்கும் தன்மையும் இதற்குஉண்டு.
பிரண்டையை துவையலாக செய்து தினம் இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம்.

உடற்பயிற்சியின் அவசியம்:

எலும்புகள் உறுதியாக உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சி செய்யும்பொழுது எலும்புகள் வலிமை பெறும். இன்று குழந்தைகள் ஓடி விளையாடுவதே குறைந்து விட்டது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் உடற்பயிற்சிக்கான நேரம் ஒதுக்குவதே இல்லை. சிறுகுழந்தைகளாக இருக்கும்பொழுதே பெற்றோர்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு விளையாட்டில் பழக்கி விட வேண்டும்.

பெற்றோர்களும் நேரம் ஒதுக்கி குழந்தைகளுடன் யோகாசனம், நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், தோட்ட வேலைகள் என்று செய்ய, குடும்ப ஆரோக்கியம் மேம்படும். உடற்பயிற்சி தசைகளை வலுவாக்கும்.

வலுவான தசைகள் எலும்புகளை பாதுகாக்கும்.
ஒல்லியாக இருப்பது தான் அழகு. ஆரோக்கியம் என இளம்பெண்கள் கருதுகிறார்கள். ஆனால் அது தவறான கருத்து. பலமாக உறுதியாக இருப்பது தான் அழகு. ஆரோக்கியம்.

பிற்காலத்திற்கான பயத்தை சேமிப்பதற்கு அக்கறையுடன் செயல்படுவது போன்று, நம் உணவுக்கும், உடற்பயிற்சிக்கும் அக்கறை அளிக்க வேண்டும்.

இளம்வயதிலேயே எலும்பை உறுதியாக வலுவாக ஆக்கிக்கொண்டால் போனஸாக நோயற்ற வாழ்வு கிட்டும்.

"ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவமுறை அவசியம்"

"இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்"

"ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்"

பித்தப்பை கல் நோய் நீங்க

பித்தப்பை கல் நோய் நீங்க



இன்று மக்கள் அதிகமாக சந்தித்து வரும் நோய்களில் பித்தப்பை கல் நோயும் ஓன்று. இதை ஆங்கிலத்தில் (Gallstones )என்பார்கள். இந்த பித்தப்பை கல் ஏன் வருகிறது என்றால், உணவு முறை தான் முதல் காரணம். இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு தான் இது மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கும். இதனுடைய செயல் பாடுகள் என்னவென்றல்,உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு முக்கியமானது.

அது போல் இது மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்து கொள்ளும் ஒரு தனி அரை.நாம் உண்ணும் உணவானது செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் சுரக்கிறது. இந்த அமிலம் பலவகையான பொருட்களால் ஆனது.
அவையாவது கொழுப்பு,பித்தச்செம்பசை,பித்த உப்பு.  இது சுரந்து அதை குடல் வழியாக நம் உணவோடு சேர்த்துவிடும்.மேலும் இது உருவாவதற்கு பல வகையான கரங்கள் உண்டு.

அவற்றை கீழே பார்ப்போம்.

1) இந்த நோயானது நம் குடுமபத்தில் யாருக்காவது இருந்தது என்றல். குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் வரும் வாய்பு உள்ளது.
2) உடல் பருமன் இதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. உடல் பருமனானவர்களுக்கு கொழுப்பு அதிகமாக உண்டாகிறது.அந்த கொழுப்பானது பித்தபையை காலியாக இருக்கவிடாது.
3) எசுத்தோசென்(Estrogen): இது கொழுப்பை அதிகமாக உடலில் உண்டு பண்ணும் மேலும் இது பித்தபையை அசைய விடாமல் அதன் செயல் பாடுகளை குறைக்கும். மாசமாக உள்ளவர்கள், கருத்தடை மாத்திரை எடுத்து கொண்டவர்கள், ஹார்மோன் அதிகமாக சுரப்பவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்புகள் அதிகம்.
4) இனம் சம்பந்தமாக     பூர்வீகம் உள்ளவர்களுக்கு இந்த நோய் வர வாய்புகள் அதிகம்
5)பாலினம் மற்றும் வயதும் ஒரு முக்கிய காரணம். இந்த நோய் வயதான பெண்களை அதிகமாக தாக்கும்.
6)போதையான கொழுப்பு பொருள் பித்தத்தில்   கொழுப்பை அதிக படுத்தும்.இது போன்று நிகழும் போது கொழுப்பு கற்கள் உருவாகும்.
6) நீரிழிவு: நீரழிவை த்டுபதற்காக கையலபடுகிற முறைகளினால் இரத்தத்தில் கொழுப்பு உண்டாகும். இந்த வகை பித்தப்பை கல்  மிக மோசமானது.

இந்த நோயால் பாதிப்படைந்தவர்கள் முதலில்  உடல் பருமனை குறைக்க வேண்டும்.
நோன்பு நோர்பதினால் பித்தப்பை சுருங்கும்.

இந்த நோயின் அறிகுறிகள்:

1) மேற்புற வாயிற்று பகுதியில் மற்றும் முதுகு புரத்தின்  மேற்புறத்தில் வலி உண்டாகும்.
2) குமட்டுதல்: இந்த நோய் உள்ளவர்களுக்கு குமட்டல் உண்டாகும்.
3) வாந்தி உண்டாகும்.
4) உணவு பாதையில் பிரச்னை உருவாகும்,வாயு தொல்லை உண்டாகும்,    அஜீரணம் பிரச்சனைகள் உண்டாகும்.

மருத்துவம்:

இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.

முடிந்த வரை இந்த மருந்தை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் உடன் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் தெரியபடுத்துங்கள். மேலும் இந்த மருந்தை உபயோக படுத்தியவர்கள் தங்களின் அனுபவத்தை என்னிடம் தெரிய படுத்து மாறு கேட்டு கொள்கிறேன்.

கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும். இதன் அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும். ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும்.

பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநெல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரணக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
                   💛💙💜❤💚💓

பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம்..!

 புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது.

ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.

ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும்.

எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.
இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.

அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.

மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.