எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க

எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்!




கண்டிப்பாக, ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம்.

கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களையும் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.

“எலி”:-

எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.

“பல்லி”:-

உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..? அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள். இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.

மேலும் பல்லி தொல்லையில் இருந்து மிக எளிதில் விடுபட இதோ வீடியோ இணைப்பின் மூலமும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்…..

“ஈ”:-

சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும். அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள். இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

“கொசுக்கள்”:-

கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும். மேலும் பல கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள். இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.

“கரப்பான் பூச்சி”:-

கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம். அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.

“மூட்டைப்பூச்சி”:-

மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்து விடும்.!!.

வாந்தி : மருத்துவம்

வாந்தி : மருத்துவம்


மருத்துவம்

தயாரித்த மருந்து

1.   மாதுளை மணப்பாகு

2.   துருஞ்சி மணப்பாகு

இவைகளுள் ஏதாவது  ஒன்று ஒரு தேக்கரண்டி வெந்நீருடன் தினம் மூன்று வேளை



கைப்பக்குவ மருந்து:

குழந்தைகளுக்கு:

1.   வால் மிளகு 1 கிராம் , ஏலக்காய் 1 கிராம் ஒன்றிரண்டாக இடித்து, 100 மி.லி நீர்விட்டு காய்ச்சி , 30 மி.லி அளவாக வற்றியவுடன் குளிர வைத்து , ஒரு சங்களவு தினம் , இருவேளை கொடுக்கவும்.

2.    பாசிபயிறு 10 கிராம் ¾ டம்ளர் 150 மி.லி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 30 மி.லி எடுத்து அச்சு வெல்லம் ஒன்றை கரைத்து குடிக்க கொடுக்கவும்.

3.   வசம்பச் சுட்டு சுருக்கி 1 சிட்டிகை அளவு எடுத்து 5 முதல் 10 மி.லி தேனில் கலந்து கொடுக்கவும்.

மருத்துவ அறிவுரைகள்:

புதினா துவையல் , இஞ்சி துவையல் , கறிவேப்பிலை

முருங்கைக்கீரை - மருத்துவக் குணங்கள்

முருங்கைக்கீரை - மருத்துவக் குணங்கள்



முருங்கை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது. அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.  ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமைக்கலாம்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சேர்த்து வந்தாலே குடும்ப ஆரேக்கியம் மேம்படும்.

மருத்துவக் குணங்கள்

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.

நீரிழிவுக்காரர்களுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இல்லை என்கிறார்கள். குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது முருங்கை.

சைவ உணவுக்காரர்களுக்கு சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவுத் துறை நிபுணர்கள், இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முருங்கையின் மூலம் கிடைக்கிற புரதமானது முட்டை, பால் மற்றும் இறைச்சியில் கிடைக்கக்கூடிய
புரதத்துக்கு இணையானது.

மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இறைச்சியில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு எகிறும்.

குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவதுண்டு. முருங்கைப்பூவை பொடிமாஸ் மாதிரி செய்து சாப்பிடலாம். அரைவேக்காடு வேக வைத்த பாசிப்பருப்புடன், முருங்கைப்பூவையும் பொடியாக நறுக்கிய வெங்காயமும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது குழந்தையின்மைப் பிரச்னை தீர உதவும். கர்ப்பப்பைகோளாறுகளை சரி செய்யும்.

ஒரே ஒரு கைப்பிடி பருப்பு சேர்த்து வைக்கிற தண்ணி சாம்பாரில், கொதிக்கும் போது நான்கைந்து கொத்து முருங்கைக்கீரையை அப்படியே கொத்தாகச் சேர்த்து ஒரு கொதி விடவும். பிறகு அந்தக் கொத்தை அப்படியே எடுத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட,  நுரையீரலில் கட்டிக் கொண்ட கபத்தை வெளியேற்றும். அடிக்கடி சளி, இருமல், அலர்ஜியால் அவதிப் படுவோருக்கும் இது அருமையான மருந்து.

தினமும் சாப்பிட வேண்டிய அளவு
பெண்கள்    100 கிராம்
ஆண்கள்    40 கிராம்
10 வயதுக்கு மேலான குழந்தைகள்    50 கிராம்

முருங்கைச் சத்து முழுமையானது!

முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் சியும், வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4  மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம். மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

முருங்கைக்கீரை சூப்

என்னென்ன தேவை?

முருங்கைக்கீரை (இளம் காம்புடன் சேர்த்து) - 2 கப், பூண்டு- 5பல், சாம்பார் வெங்காயம் - 6, மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, மிளகு - 1 டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், உப்பு- தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

உப்பு தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு, குக்கரில் 1 விசில் வைக்கவும். ஆறியதும் மிக்சியில் அரைத்து, கீரை வடிகட்டியில் வடிகட்டி உப்பு சேர்த்துப் பரிமாறவும்.

வாரத்துக்கு 3 முறை என 6 வாரங்கள் எடுத்துக் கொண்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்  (காலை வேளை). இதில் பால் சேர்க்கக்கூடாது. அதில் கால்சியம் இருப்பதால் கீரையில் உள்ள இரும்பை முறித்து விடும்.

எப்படி சமைக்கக்கூடாது?

முருங்கைக்கீரையின் சத்துகள் முழுமையாகக் கிடைக்க  கீரையை நீண்ட நேரம் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் சமைப்பதால் பார்வைத்திறனுக்கு உதவக்கூடிய கரோட்டின் சிதைந்து விடும். முருங்கைக்கீரையை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

முருங்கைக்கீரை கூட்டு

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு-  1 கப், முருங்கைக்கீரை - 2 கப், பூண்டு - 5 பல், சீரகம் - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் (கீறியது) - 3, உப்பு, மஞ்சள் தூள்- சிறிதளவு.

தாளிக்க...

கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பு, பூண்டு, பச்சைமிளகாய், சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பாகம் வெந்ததும் அலசி வைத்துள்ள கீரையை அதில் சேர்க்கவும். 10 நிமிடங்கள் வேக வைத்து, இறக்கி, உப்பு சேர்த்து தாளித்துக் கொட்டவும்.

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு - 2 கப், இஞ்சி- 1 துண்டு, பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 1 கப், முருங்கைக்கீரை - 1 கப், பச்சை மிளகாய் - 3, கடூகு, சீரகம், கடலைப்பருப்பு - தாளிக்க, எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பையும் பச்சை மிளகாயையும், இஞ்சி சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, வெங்காயம் தாளித்து, அலசி வைத்துள்ள முருங்கைக்கீரை சேர்த்து ஒரே ஒரு முறை வதக்கி, அரைத்த விழுதுடன் சேர்த்து, உப்பு சேர்த்து சின்ன அடைகளாக ஊற்றி  சூடாக சாப்பிடவும். காலை மற்றும் மாலை உணவுக்கு ஏற்றது. இரவு உணவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம். செரிமானமாவதில் சிரமம் இருக்கும்.

என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)

ஆற்றல்    64 கிலோ
கலோரிகள்
கால்சியம்    185 மி.கி.
பாஸ்பரஸ்    112 மி.கி.
இரும்பு    4 மி.கி.
புரதம்     9.40 கிராம்
கொழுப்பு    1.40 கிராம்
நார்ச்சத்து    2 கிராம்
தண்ணீர்    78.66 கிராம்



முருங்கைக்கீரை கூட்டு / மிளகூட்டல்

 தேவையான பொருட்கள்;-
முருங்கைக்கீரை - 3 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க :
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - தலா அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1

வறுத்து அரைக்க:
லேசாக வெதுப்பிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல் - 1
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மணம் வர வறுக்கவும்.அத்துடன்
தேங்காய்த்துருவல்  - 3 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5

சேர்த்து அரைக்கவும்.

 தேவைக்கு தண்ணீர் சிறிது சேர்த்து அரைத்து எடுக்கவும்.

செய்முறை:
கீரையை உருவி நன்கு அலசி தண்ணீர் வடித்து எடுக்கவும்.

 ஊற வைத்த பாசிப்பருப்பை தேவைக்கு தண்ணீர் மஞ்சள் தூள் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சூடு செய்யவும்.

 கடுகு,உளுத்தம் பருப்பு,வற்றல் கிள்ளி போடவும்.

 கீரை சேர்த்து வதக்கவும்.

 அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.

ஒன்று சேர்ந்து சிறிது வேக விடவும்.கீரையை திறந்தே சமைக்கவும்.நிறம் மாறாமல் இருக்கும்.

பின்பு வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

 தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

சுவையான கீரை கூட்டு அல்லது மிளகூட்டல் ரெடி.

வெறும் சோற்றில் பிரட்டியோ தொட்டுக் கொண்டு சாப்பிடவோ சூப்பராக இருக்கும்.நீங்களும் செய்து பாருங்க.


வாழைப்பூ---முருங்கைக்கீரை துவட்டல்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய வாழைப்பூ --ஒரு கப்
முருங்கைக்கீரை ---ஒரு கப்
தேங்காய்த்துருவல்---ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் --ஒரு டீஸ்பூன்
கடுகு --  கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு--தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் ---1
பெருங்காயத்தூள்---கால் டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு

செய்முறை :

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காய்த்தூள், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, அதில் முருங்கைக்கீரை நன்றாக அலசி போடவும், வாழைப்பூ சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடியவிடவும், தண்ணீர் வடிந்தது, அதை வதங்கிக் கொண்டிருக்கும் முருங்கைக்கீரையுடன் போடவும், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, கடைசியாக தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி இறக்கவும்.

பஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது

பஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது





 பஞ்ச பூதங்களும் உயிர் பிரிந்த பின் பஞ்ச பூத பெருஞ் சக்திகளுடனே சேர்ந்துவிடும்.இந்த பஞ்ச பூத சக்திகளை பிரியாமல் எவ்வளவு காலம் வைத்திருக்கிறோமோ,அவ்வளவு காலம் உயிர் உடலில் நிலைத்திருக்கும். அவைகளில் மாறுபாடு இல்லாமல் பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள் (நோய்கள்) உண்டாகா!!!!!!அந்த வழிகளையே கீழே விவரித்திருக்கிறேன்.

*1)உணவு(மண்):-*
(அ):-
சாப்பிடுவதற்கு முன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
(ஆ):-
பசி இல்லாத போது சாப்பிடக் கூடாது.
(இ):-
உணவில் ஆறு சுவைகள் இருக்க வேண்டும். முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும்.
(ஈ):-
நாக்கால் சுவையை ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். ஆறு சுவைகளையும் திகட்டும் வரை உண்ண வேண்டும்.
(உ):-
சாப்பிடும் பொழுது கண்களை மூடி உதட்டை பிளக்காமல் (வாயை மூடியபடி மெல்ல வேண்டும்) மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும்.
(ஊ):-
சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பும் பின்பும் நீர் அருந்தக் கூடாது.
(எ):-
சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் மூன்று முறை உள்ளங் கையில் நீரை உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.
(ஏ):-
குளித்த பின் 45 நிமிடங்களுக்கு பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும்.சாப்பிட்ட பிறகு 2 1/2 மணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது.
(ஐ):-
சாப்பிடும் முன் கை, கால், முகம் கண்டிப்பாக கழுவ வேண்டும்.
(ஒ):-
டி.வி பார்த்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
(ஓ):-
பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது.
(ஔ):-
கால்களைத் தொங்க வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
(க):-
அம்மா தன் பிள்ளைகளுடன் அமர்ந்து சாப்பிடக் கூடாது.
(ங):-
புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடக் கூடாது.
(ச):-
முதல் ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.

*2)குடி தண்ணீர்(நீர்):-*

(அ):-
தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது.
(ஆ):-
தாகம் எடுத்த உடனே தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
(இ):-
மினரல் வாட்டர் பயன் படுத்தக் கூடாது.
(ஈ):-
நீரை பில்டர் செய்யக் கூடாது.
(உ):-
நீரை மண் பானையில் குறைந்தது 2 மணி நேரம் வைத்திருந்து பின் பயன் படுத்த வேண்டும்.
(ஊ):-
தாகம் இல்லாமல் நீர் அருந்தக் கூடாது.
(எ):-
சிறுநீர் கழித்தால் உடனே தண்ணீர் அருந்த வேண்டும்.
(ஏ):-
நீரை அண்ணாந்து குடிக்கக் கூடாது. மெதுவாக சப்பி குடிக்க வேண்டும்.

*3)ஓய்வு தூக்கம் (ஆகாயம்):-*
(அ):-
வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.
(ஆ):-
டீ, காபி குடிக்க கூடாது.
(இ):-
வெறும் தரையில் படுக்கக் கூடாது.
(ஈ):-
உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும்.
(உ):-
மனதுக்கும், புத்திக்கும் வேலை கொடுப்பவர்கள் குறைந்த பட்சம்  6 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
(ஊ):-
தூக்கத்திற்கும் ஓய்வுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
(எ):-
இரவில் பல்விளக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
(ஏ):-
தாடைக்குக் கீழ் தடவிக் கொடுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
(ஐ):-
தலையில் உச்சிக்கும்,சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும்.

*4)காற்று (வாயு):-*
(அ):-
கொசுவர்த்தி,ஆல் அவுட்,குட் நைட் பயன்படுத்த கூடாது.
(ஆ):-
வீடு, அலுவகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும்,எப்போதும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும் .
(இ):-
தூங்கும் போது ஜன்னல்களை அடைத்து வைத்து தூங்கக் கூடாது.
(ஈ):-
கொசு கடிக்காமல் இருக்க கொசு வலையை பயன்படுத்தலாம்.

*5) உழைப்பு (நெருப்பு):-*
(அ):-
பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
(ஆ):
A/C MACHINE ஐ 37'C ல் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
(இ):
உழைப்புக்கேற்ற உணவு (அல்லது) உணவுக்கேற்ற உழைப்பு வேண்டும்.
(ஈ):-
தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புக்களுக்கும் வேலை தர வேண்டும்.
(உ):-
இரத்தம் ஓட இதயம் உதவும்.ஆனால் நிணநீர் ஓட்டம் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும்.
(ஊ):-
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடலில் நிணநீர் ஓட்டம் இருக்காது.இதுதான் பல நோய்களுக்கு காரணம் .


மூச்சுத்திணறலையும் எளிதாக விரட்டப் பயன்படும் மூலிகைகள் !!!

அதிகரிக்கும் காற்று மாசுவும் அதனால் ஏற்படும் மூச்சுத்திணறலையும் எளிதாக விரட்டப் பயன்படும் மூலிகைகள் !!!



நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள்தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன. இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையில் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்றறைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:
காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
15 மிலி. துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து உண்ணலாம்.
ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகலாம்.
ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம்.
கசகசாப் பொடியில் அரைஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.
கைப்பிடி அளவு கண்டங்கத்திரிச் செடியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்ற வைத்து அருந்தலாம்.
பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு சம அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம்.
தவசு முருங்கையிலைச் சாறு 15 மிலி அருந்தலாம்.
ஒரு ஸ்பூன் தும்பைப் பூச் சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.
அரை ஸ்பூன் தூதுவளைப் பொடியில் தேன் கலந்து உண்ணலாம்.
சதகுப்பை இலைப் பொடியில் சம அளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
15 மிலி. கற்பூர வள்ளிச் சாறைக் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.
ஆதண்டைக் காயை வற்றலாகச் செய்து சாப்பிடலாம்.
ஊமத்தையும் சுக்கையும் சம அளவு எடுத்துப் பொடித்து, அதை அரை ஸ்பூன் தேனில் கலந்து உண்ணலாம்.
50 கிராம் மணத்தக்காளி வற்றலை, 200 மிலி வெந்நீரில் ஊறவைத்து வடித்து அருந்தலாம்.
திப்பிலிப் பொடியுடன் பனங்கற்கண்டு சம அளவு சேர்த்து, அரைஸ்பூன் பாலில் கலந்து உண்ணலாம்.
வெற்றிலைச் சாறு 15 மிலி எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.
வெளிப் பிரயோகம்:
சுக்கை களியாகச் செய்து நெற்றியில் பற்று போடலாம்.
லவங்கத்தை நீர்விட்டு மைபோல் அரைத்து நெற்றியிலும், மூக்கின் மேலும் பற்று இடலாம்.
செம்பைப் பூவை எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தலையில் தேய்க்கலாம்.
அகிற்கட்டைத் தைலத்தைத் தலையில் தேய்க்கலாம்.
கண்டுபாரங்கியைக் கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்த்து அரைத்துப் பற்று போடலாம்.
சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து, நெற்றியில் பற்றிட்டு அனல் படும்படி லேசாகக் காட்டலாம்.

இவ்வாறு எளிமையான கை வைத்தியத்தின் மூலம் எளிதாக மூச்சுத் திணறலில் இருந்து விடுபடலாம்.

நோய்க்கு ஏற்ற உணவு பொருட்களும் அவை குணமாக்கும் வியாதிகளும்

சாப்பிடும் உணவை கூட மருந்தாகப் பயன்படுத்தலாம், நோய்க்கு ஏற்ற உணவு பொருட்களும் அவை குணமாக்கும் வியாதிகளும்...!!!


1. கொத்தமல்லி கீரை - மூளை,மூக்கு சம்பந்தமான சகல வியாதியையும் குணமாக்கும்.

2. செவ்வாழைப்பழம் - கல்லீரல் வீக்கம், மூத்திரவியாதியை குணமாக்கும்.

3. பச்சை வாழைப்பழம் - உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்

4. ரஸ்தாளி வாழைப்பழம் - கண் மற்றும் உடலுக்கு வழுவை தரும்.

5. பேயன் வாழைப்பழம் - வெப்பத்தைக் குறைக்கும்.

6. கற்பூர வாழை - கண்ணிற்குக் குளிர்ச்சி தரும்.

7. நாவல்பழம் - நீரிழிவை நீக்கும்.

8. நேந்திரம் பழம் - இரும்புச் சத்தினை உடலுக்குக் கொடுக்கும்.

9. கொய்யா - சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு நல்லது.

10. பப்பாளி - மூல வியாதிகாரர்களுக்கு நல்லது.

11. மாம்பழம் - ரத்த அழுத்தம் சீராகும்.

12. ஆப்பிள் - மலச்சிக்கலை போக்கும்.

13. திராட்சை - இரத்த அழுத்தத்திற்கு நல்லது.

14. எலுமிச்சை - மலச்சிக்கலை போக்கும்.

15. செர்ரி - கருப்பை வியாதிகளுக்கு நல்லது.

16. மாதுளம்பழச்சாறு - பால் சேர்த்து குடிக்க இரும்பு சத்து கிடைக்கும

17. கேழ்வரகு - கேழ்வரகு கூழ் செய்து பருகினால் பித்தம் தணியும்

18. வெந்தயம் - கல்லீரல்வீக்கம், இருமல், வயிற்றுவலி குணமாகும். மற்றும் இரவில் நீரில் ஊறவைத்து காலையில் உண்டால் உடல் பருக்கும்.

19. இஞ்சி - மென்று தின்றால் குரல்கம்மல் சரியாகி விடும்.

20. சின்ன வெங்காயம் - பசுவெண்ணையுடன் கலந்து சாப்பிட மூல வியாதி குணமாகும்.

21. பூண்டு - பூண்டை சுட்டு சாப்பிட்டு நீர் குடித்தால் இருதய நோய்க்கு நல்லது.

22. வாழைப்பூ - விந்துவை அதிகரிக்கச் செய்யும் மற்றும் சீதபேதி, ரத்த மூலம் கட்டுப்படுத்தும்.

23. நெல்லிக்கனி - உடல் அசதியைப் போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

24. மிளகு - பூச்சிகடிகளுக்கு மிளகு சாப்பிடுவதால் உடலில் உள்ள நஞ்சு அழிந்து விடும்.

25. முள்ளங்கி - கபம், இருமல் ஆகியவை தீரும்.