மோர் இன்றி அமையாது உலகு...!!!

மோர் இன்றி அமையாது உலகு...!!!




கிராமத்து மண்வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது. இயற்கையின் கொடையான மோருக்கு ஈடுகொடுக்க வணிகப் பானங்களால் முடியாது. பசுவின் உயிர்ச் சத்துகளுள் ஒன்றான மோர், வேனிற் காலத்தில் உண்டாகும் வெப்பத்தைக் குறைப்பதோடு பல ஆரோக்கியப் பலன்களையும் தருகிறது.

குறுந்தொகையில்...

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்….தீம்புளிப்பாகர்…” என்ற குறுந்தொகை பாடல் புளித்த தயிரைக் கொண்டு, புளி சேர்க்காத இனிமையான தீம்புளிப்பாகர் (மோர்க் குழம்பு) செய்து தலைவனுக்குத் தலைவி கொடுத்து மகிழ்வித்ததாகக் குறிப்பிடுகிறது. மோரானது பானமாக மட்டுமன்றி, பண்டைய காலம் முதல் சமையலிலும் முக்கிய இடம்பெற்று உடலைச் சீராக்கியுள்ளது. நமது வாழ்வோடு பயணித்த மோரின் சிறப்புகளைப் பார்ப்போம்:

செரிமானப் பாதை சீராக

உணவருந்தும்போது இறுதியில் மோர் சாதம் சாப்பிட வேண்டும் என்று முன்னோர் வலியுறுத்தியதற்குக் காரணங்கள் பல. செரிமானப் பாதையில் உள்ள சிறு சிராய்ப்புகளையும் புண்களையும் ஆற்றும் தன்மை மோருக்கு உண்டு. உடலுக்கு நலம் தரக்கூடிய `புரோ-பயாடிக்’ நுண்ணுயிரிகளைத் தன்னகத்தே கொண்டு, வேனிற் காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு - குடல் சார்ந்த உபாதைகளை மோர் சீராக்குகிறது. செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்ந்த தாளித்த மோர், பல குடும்பங்களில் இன்றும் இடம்பெறும் அற்புதச் செரிமானப் பானம்.

மருந்தாகும் மோர்

கலோரிகள் நிறைந்த செயற்கை பானங்களுக்கு நடுவில், கலோரிகள் குறைந்த மோரானது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. கரிசாலை, கீழாநெல்லியை மோரில் கலந்து அருந்துவது காமாலை நோய்க்கான இயற்கை மருந்து. மாதவிடாய்க் காலங்களில் பனை வெல்லம் கலந்த மோரைப் பெண்கள் அருந்திவருவதால், மாதவிடாய்த் தொந்தரவுகள் குறையும். கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபுளோவின் போன்ற சத்துகள் மோரில் அதிக அளவில் இருப்பதால் எலும்பு, தசைகளின் வலிமைக்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்கு மோர் சிறந்தது. தோல் நோய் உள்ளவர்கள் அதிக அளவில் நீர்மோர் அருந்துவதால், நோய் விரைவில் குணமடையும். வாய்ப் புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள், மணத்தக்காளி பழம் கலந்த மோரைக் குடித்துவரப் புண்கள் விரைவில் ஆறும்.

திரிதோஷ சமனி

“மோருண வளிமுதன் மூன்றையுமடக்கி” எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், மோரானது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்தும் என்று குறிப்பிடுகிறது. உடலில் உண்டாகும் வீக்கம், ரத்தக் குறைவு, பேதி, பசியின்மை, தாகம், உடல் வெப்பம் போன்றவற்றுக்குப் பசுவின் மோர் சிறந்தது. கறிவேப்பிலைப் பொடியை மோரில் கலந்து பருக, பசி அதிகரிப்பதோடு ரத்தச் சிவப்பணுக் களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

நீர் சுருக்கி, மோர் பெருக்கி

கிருமிகளை அழிக்க, நீரை நன்றாகக் காய்ச்சிச் சுண்ட வைத்தும், மோரின் குணங்களை முழுமையாகப் பெற, மோருடன் அதிக நீர் சேர்த்து, நீர் மோராகவும் அருந்த வேண்டும் எனும் அறிவியலை `நீர்சுருக்கி மோர்பெருக்கி’ என்று அன்றே ஓலையில் செதுக்கினார் தேரையர். மோரின் புளிப்புத் தன்மை நீங்கும் அளவுக்கு நீர் சேர்த்துப் பருகுவதால், புளிப்பு சுவை அதிகரிப்பதால் உண்டாகும் பாதிப்புகள் ஏற்படாது என்பதே சித்தர்களின் சிந்தனை.

அனுபானம்

மோரின் சிறப்பை அறிந்தே, பல சித்த மருந்துகளைத் தயாரிக்க மோர் பயன்படுத்தப்படுகிறது. சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சில மருந்துகளின் அனுபானமாகவும் (Vehicle) மோர் பயன்படுகிறது. உடலுக்கு எவ்விதமான தீங்கையும் உண்டாக்காத காரணத்தால் மோரானது பத்தியத்தின்போதுகூடப் பயன்படுத்தக் கூடிய உணவு வகைகளுள் ஒன்று. மூலம் மற்றும் கருப்பை நோய்களுக்கு, கற்றாழைக் கூழை மோரோடு கலந்து குடிப்பது மிகச் சிறந்தது.

வெயில் காலங்களில்

வேனிற் காலம் எனும் ரதத்தை அழகாக இழுத்துச் செல்லும் சாரதி மோர். வெயில் காலத்தில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், நீர் சுருக்கு போன்ற உபாதைகள் வராமல் தடுக்க மோர் குடிப்பது அவசியம். மோர் அருந்துவதால் குடற்புண், கண்ணெரிச்சல், கைகால் எரிச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளை மோரில் கலந்து குடிப்பதைத் தவிர்த்து, மண் பானைகளில் குளிரூட்டப்பட்ட மோரைப் பயன்படுத்தலாம். மோரின் குளுமையோடு பானையின் குளுமையும் சேர்வதால் வெப்பத்தைக் குறைக்கும் அற்புதமான பானமாகும். அலுவலகத்துக்குச் செல்வோர், பள்ளிக் குழந்தைகள், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வோர், புட்டிகளில் நீருக்குப் பதிலாக நீர்மோரையே தாகம் தணிக்க எடுத்துச் செல்லலாம். மாலை வேளைகளில் டீ, காபிக்குப் பதிலாகச் சீரக மோரைப் பருகலாம். வெயில் காலங்களில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்வதில் மோருக்கு முக்கியப் பங்குண்டு. தாகத்தை நிவர்த்தி செய்து, சிறுநீர் பெருக்கியாக மோர் செயல்படுகிறது.

நஞ்சகற்றி

மது, புகையிலையால் உடலில் சேர்ந்திருக்கும் நஞ்சை வெளியேற்ற, தினமும் புதினா கலந்த மோர் குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உடலில் சேர்ந்த கழிவைச் சிறுநீரின் மூலம் வெளியேற்றும் குணம் மோருக்கு உண்டு. சில வகை உணவுப் பொருட் களுக்கு, மோரானது நஞ்சு முறிவுப் பொருளாகவும் பயன்படுகிறது.

மோருடன் வரவேற்போம்

ஆங்காங்கே `மோர்ப் பந்தல்கள்’ அமைத்து மக்களின் நலம் காத்த வரலாற்று குறிப்புகள் நம்மிடம் ஏராளம் உண்டு. பல ஆயிரம் வருடங்களாக வெயில் காலத்தை எதிர்கொள்ள ஏற்படுத்தப்பட்ட விருந்தோம்பல் முறை மோர்ப் பந்தல்கள். ஆனால் இன்றைக்கு மோர்ப் பந்தல்கள் குறைந்து, செயற்கை குளிர்பானங்களின் விற்பனை அதிகமாகிவிட்டது. இனிமேலும் விழித்துக்கொள்ளாவிட்டால், நம் ஆரோக்கியமும் பாரம்பரியமும் முற்றிலும் தொலைந்து போகலாம்.

இந்த 15 விஷயம் ஒரு பொண்ணுக்கிட்ட இருந்தா? உசுரே போனாலும் மிஸ் பண்ணிடாதீங்க

இந்த 15 விஷயம் ஒரு பொண்ணுக்கிட்ட இருந்தா? உசுரே போனாலும் மிஸ் பண்ணிடாதீங்க! சிறந்த காதலிக்கு இருக்க வேண்டிய முக்கியமான 15 குணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன




இந்த 15 குணங்களுடன் ஒரு பெண் கிடைத்தால் அந்த பெண்ணை தவற விட்டுவிடாதீர்கள்...

ஒரு பெண்ணை காதலிக்கலாம வேண்டாமா என்ற யோசனையா? இதோ இந்த 15 குணங்களுடன் ஒரு பெண் கிடைத்தால், தயவு செய்து அந்த பெண்ணை தவற விட்டுவிடாதீர்கள்...

1. உங்கள் விருப்பமே அவர் விருப்பம்

உங்கள் விருப்பமே அவர் விருப்பம் உங்களுக்கு பிடித்த சினிமா, நீச்சல் என இருவருக்கும் ஒரே மாதிரியான விஷயங்கள் பிடித்திருக்கும். உங்கள் இருவரது கண்ணோட்டமும் ஒரே மாதிரியாக இருக்கும். இருவரது கருத்துக்களும் 90% ஆவது ஒத்துப்போகும்.

2. உங்கள் வேலையில் மூக்கை நுழைக்கமாட்டார்

 உங்கள் வேலையில் மூக்கை நுழைக்கமாட்டார் உங்களது பொழுதுபோக்கு மற்றும் உங்களுக்கு பிடித்த நல்ல காரியங்களை செய்யும் போது உங்கள் பாதையில் குறுக்கிடாமல் இருப்பார்.

3. கஷ்டத்தை கூறுவார்

 கஷ்டத்தை கூறுவார் யாரும் எல்லா நேரமும் சந்தோஷமாக இருப்பது இல்லை. அந்த பெண் ஏதேனும் ஒரு காரணத்தால், சோகமாக இருந்தால் அதற்கான காரணத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

4. உங்களை நேசிக்கும் பெண்

 உங்களை நேசிக்கும் பெண் உங்களை மட்டும் காதலிப்பார். நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை பார்த்து காதலிக்கமாட்டார். பல பிரபலங்கள் இது போன்ற குணம் கொண்ட பெண்களை தான் விரும்புகிறார்களாம்.

5. உங்களை மாற்ற நினைக்கமாட்டார்

 உங்களை மாற்ற நினைக்கமாட்டார் நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்களோ அப்படியே ஏற்றுக்கொள்வார். உங்களை மிஸ்டர்.பெர்பெக்ட்டாக மாற்ற எண்ணி உங்களுக்கு மிகவும் பிடித்த காரியங்களுக்கு தடை போடமாட்டார். பிடிக்காத விஷயங்களை செய்ய வலியுறுத்தமாட்டார்.

6. தனது அழகில் தன்னம்பிக்கை உள்ள பெண்

தனது அழகில் தன்னம்பிக்கை உள்ள பெண் அடிக்கடி தனது ஸ்டைலை மாற்றி அமைக்கமாட்டார். குண்டாக இருக்கிறோமோ என்று ஜிம்மிற்கு செல்வது, டயட்டில் இருப்பது போன்ற காரியங்களில் அதீத கவனம் செலுத்தமாட்டர். நாம் எப்படி இருக்கிறோமோ அதுதான் அழகு என தன்னம்பிக்கையுடன் இருப்பார்.

7. உங்கள் ஓய்வு நேரத்தை எடுத்துக்கொள்ளமாட்டார்

 உங்கள் ஓய்வு நேரத்தை எடுத்துக்கொள்ளமாட்டார் உங்களது ஓய்வு நேரத்தில் நீங்கள் தனக்காக இதை இதை செய்ய வேண்டும் என அறுபது டஜன் லிஸ்ட்டுகளை போட்டு கையில் தரமாட்டார். உங்களது ஓய்வு நேரத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய அனுமதிப்பார்.

 8. உங்கள் மதிப்பை பகிர்ந்து கொள்வார்

 உங்கள் மதிப்பை பகிர்ந்து கொள்வார் இருவருக்கும் ஒருவரிடம் ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற புரிதல் இருக்கும். உங்களது உறவில் போதுமான அளவு நேர்மை இருக்கும். மேலும், பணத்தை இருவரும் எவ்வாறு செலவு செய்கிறீர்கள் என்பது அவசியம். நீங்கள் கஞ்சமாகவோ அல்லது அதிகம் செலவு செய்பவராகவோ இருக்கலாம், உங்களை போலவே அவரும் இருக்கிறாரா என்பது அவசியம்.

9. வெளிப்படையாக இருக்கும் பெண்

 வெளிப்படையாக இருக்கும் பெண் அவருக்கு சின்ன வயதில் ஏற்பட்ட பிரச்சனைகள், கஷ்டங்கள், நிறைவேறாத ஆசைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். எந்த ஒரு கவலை, சோகத்தையும் உங்களிடம் கூறுவார். அவரது புத்திசாலித்தனங்கள் மட்டுமல்லாது, குறைகளையும் உங்களிடம் கூறுவார்.

10. காது கொடுத்து கேட்கும் பெண்

 காது கொடுத்து கேட்கும் பெண் உங்கள் அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனையா? புராஜெக்ட் வேலைகளை முடிப்பதில் சிரமமா என்பது போன்ற சில கேள்விகளின் மூலம் உங்களின் பிரச்சனைகள் அனைத்தையும் அறிந்து, உங்கள் குழப்பத்திற்கும், மன சங்கடத்திற்கும் தீர்வு கொடுப்பார்.

11. உங்களை மகிழ்விப்பார்

 உங்களை மகிழ்விப்பார் நீங்கள் இருவரும் ஒரே விசயத்திற்காக சிரிப்பிர்கள். இருவரும் ஒன்றாக இருக்கும் போது நேரம் போவது கூட தெரியாத அளவிற்கு மகிழ்ச்சியாக பேசிக்கொள்விற்கள். கேலிகள், கிண்டல்கள் என உற்சாகமாக இருக்கும். இருவரும் சேர்ந்து பல குறும்புத்தனங்களை செய்வீர்கள்.

12. உங்கள் குடும்பதிற்கு ஏற்ற பெண்

 உங்கள் குடும்பதிற்கு ஏற்ற பெண் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உங்களுக்கு பிடித்த பெண் இணைந்துவிட்டால் பல பிரச்சனைகள் தீரும். உங்களின் குடும்பத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து நடந்துகொள்ள முடியும். பொறாமை எண்ணம் வராது.

13. ஆடைகளை பற்றி அபிப்ராயம் கேட்கமாட்டார்

ஆடைகளை பற்றி அபிப்ராயம் கேட்கமாட்டார் எனக்கு இந்த ஆடை நல்லா இருக்குமா, இந்த கலர் நல்லா இருக்குமா என உங்களை வறுத்தெடுக்கமாட்டார். ஏனென்றால் தனக்கு என்ன பொருந்தும் என்பதில் தெளிவாக இருப்பார்.

 14. உங்களை ஆச்சரியப்படுத்துவார்
 உங்களை ஆச்சரியப்படுத்துவார் உங்களை ஆச்சரியப்படுத்தும் வித்தை கற்றவராக இருப்பார். உங்களை திடிரென வெளியில் அழைத்து சென்று ஆச்சரியப்படுத்துவார். அவர் செய்யும் மிகச்சிறிய விஷயம் கூட உங்களை பிரமிக்கவைக்கும்.

15. மனம் புண்படும்படி நடக்கமாட்டார்

 மனம் புண்படும்படி நடக்கமாட்டார் உங்களுக்கு தெரியாத ஏதேனும் ஒரு விஷயத்தை நீங்கள் தவறாக செய்தால், உங்கள் மனம் புண்படும்படி சிரிக்கமாட்டார். உங்களுக்கு தெரியாதவற்றை பொருமையுடன் சொல்லிக்கொடுப்பார்.


ஓட்டிப்போன கன்னமா இருக்கா குண்டு கன்னங்கள் வேண்டுமா..?

ஓட்டிப்போன கன்னமா இருக்கா குண்டு கன்னங்கள் வேண்டுமா..?



  கன்னங்களை புஸ் புஸ் ஆக்குகிறது தக்காளி கூழ். தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள்.

ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை எடுங்கள். முதலில், முகத்தில் ஆலிவ் எண்ணெயைத் தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழை பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படிச் செய்து வர, குஷ்பு கன்னங்கள் கிடைக்கும்.

நாற்பது வயதை நெங்கும்போதே முகத்தில் சில வரிகளும் நம் முகவரி தேடி வந்து விடும். அந்த முதுமை வரிகளை ஓட ஓட விரட்டும் சக்தி தக்காளியில் உண்டு.

தக்காளி விழுது, பாதாம் விழுது… தலா அரை டீஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து கொள்ளுங்கள் இதை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்து வர, சுருக்கம் இருந்த சுவடுகூடத் தெரியாது
 கரை செல்வன்  

வாத நாசக முத்திரை !!!

வாத நாசக முத்திரை !!!




வாத நாடி  கூடினால் சந்திவாதம், கீல் வாதம், முடக்கு வாதம் என 21 வகையான வாத நோய்கள் உண்டாகும். மேலும், காதுவலி, தலைவலி, தலைசுற்றல், சக்தியின்மை, பொறுமையின்மை, சுறுசுறுப்பின்மை, குறைவான நினைவாற்றல், தூக்கமின்மை,ரத்த ஓட்ட குறைவால்  உடலில் மதமதப்பு ஏற்படுதல், மூட்டுவலிகள்(ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்),தலைமுடி, நகம், கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுதல், பிறப்புகளிலிருந்து வாயு பிரிதல், ஏப்பம் போன்ற நிறைய நோய்குறிகள் தோன்றும் அவற்றிர்க்கு நிவாரணம் தருவது இந்த முத்திரை.

ஆள்காட்டிவிரல், நடுவிரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து அதன் மீது கட்டைவிரலால் அழுத்தி பிடிக்கவும். மற்றவிரல்கள் நீட்டிய படி இருக்கட்டும். இதுவே வாத நாசக முத்திரை.காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் மிகுந்த பலனளிக்கும். 30 வினாடியிலிருந்த 15 நிமிடம் வரை செய்வது உத்தம பலன் கொடுக்கும்.

பூரான் கடித்தால் என்ன செய்வது?.. அலட்சியம் வேண்டாம்

பூரான் கடித்தால் என்ன செய்வது?.. அலட்சியம் வேண்டாம்…!!!





விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் – நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.

வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.

உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம்.

பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். பனைவெல்லாம் சாப்பிடவேண்டும்.

பூரான் கடியை தீர்க்க மருந்து

குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.

வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.

மற்றொரு மருந்தாக ஆகாச கருடன் கிழங்கை சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும். வெயில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும்.

ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் – கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.