தோப்புக்கரணம்(Super Brain Yoga) கொடுக்கும் பலன்கள்

தோப்புக்கரணம்(Super Brain Yoga) கொடுக்கும் பலன்கள் 

தோப்புக்கரணம் உடற்பயிற்சிகளுக்கு தாய் என சொல்லலாம். தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்துவந்தால் பல பலன்கள் உடலுக்கு கிடைக்கும்














புதிதாக செய்ய தொடங்குபவர்களுக்கான எளிய யோகா முறைகள்

தூங்கும் நிலை (Sleeping Position) - எப்படி தூங்கினால் நல்லது

திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது.

திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது.




சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற அலோபதி மருத்துவரை ஒரு மருத்துவக் கட்டுரை விஷயமாக சந்தித்தேன்.
வயது 70களில் இருப்பவர்..

அவர் ஒரு ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்டும்கூட!
தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது..

அன்று காலை எழுந்தவுடன்
அவருக்கு ஒரு பிரச்னை.
சிறுநீர் போகவேண்டும்போல அவரின் அடிவயிறு முட்டிக்கொண்டு இருக்கிறது.. ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை.
இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்துவிடும் என்பதால், சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும்தான், ஏதோ பிரச்னை என்று புரிந்தது.

டாக்டராக இருந்தாலும், தசையும் ரத்தமும் கொண்ட மனிதர்தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

‘நான் இப்போது புறநகர்ப்பகுதியில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன். பத்தரை மணிபோல உங்கள் வீடு இருக்கும் ஏரியா அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்துவிடுவேன்.

அதுவரை இன்னும் ஒன்றரை மணி நேரம் தாங்குவீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் அந்த மருத்துவர்.
‘‘பொறுத்துப் பார்க்கிறேன்!’’ என்று அவர் சொன்ன
அந்த நேரம் பார்த்து இன்னொரு போன்.
அது, அவரின் ஊர்க்காரரான (சுசீந்திரம் பக்கம்) இன்னொரு அலோபதி மருத்துவரிடமிருந்து வந்திருந்தது..
போன் பேசக்கூட முடியாதபடி, தன்னை பெரும் கஷ்டத்துக்குள்ளாகும் தன் பிரச்னையைப் பற்றி தன் சிறுவயது மருத்துவ தோழரிடம் பகிர்ந்து கொண்டார் ஈ.என்.டி. மருத்துவர்.

‘‘ஓ.. சிறுநீர் சேர்ந்திருந்தும் வெளிவர வில்லையா? கவலைப்படாதே.. சரி, நான் சொல்வதுபோல செய், வந்துவிடும்! என்றவர், அதற்கான இன்ஸ்ட்ரக்ஷன்களைத் தர ஆரம்பித்து விட்டார்.

‘‘எழுந்து நின்று நன்றாகக் குதி... குதிக்கும்போது உன் ரெண்டு கையையும் அப்படியே மேலேயிருக்கும் மாம்பழத்தைப் பறிப்பதுபோல ஆக்ஷன் செய்! இப்படி ஒரு பதினஞ்சு இருபது முறை செய்!’’ என்று சொல்லியிருக்கிறார்.

என்னது! அடிவயிறு சிறுநீரால் தளும்பிக்
கொண்டிருக்கும் நிலையில் மேலே எழும்பிக் குதிப்பதா? என்று திகைத்தாலும், நண்பர் கூறினாரே என
குதிக்க ஆரம்பித்தார். நாலைந்து முறைகூட குதிக்கவில்லை, அடைபட்டு இருந்த சிறுநீர்
வெளிவர ஆரம்பித்து விட்டது.
அப்படியொரு மகிழ்ச்சி அந்த ஈ.என்.டி. மருத்துவருக்கு!!

‘‘எத்தனை எளிமையாக என் பிரச்னையை தீர்த்தாய் நண்பா!’ என கொண்டாடிவிட்டார்.
அவர் சொன்னார், ‘‘இந்தப் பிரச்னைக்குத்தான் மருத்துவமனையில் சேர்த்து, பிளாடரில், கதீட்டர் டியூப் எல்லாம் சொருகி, ஒரு புரசீஜர் செஞ்சு அதுக்கு ரூ. 50,000 போல சார்ஜ் செஞ்சிருப்போம்.

அதுக்கும் மேல ஆஸ்பத்திரி செலவுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஊசிகள், முக்கியமா அலைச்சல்கள், மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து செலவாகும்!

நண்பர் சொன்ன ஒரு சின்ன குதிப்பதில்
இத்தனை செலவுகள் எனக்கு மிச்சமாச்சு!’’ என்றார் பெருமிதத்துடன்.

மருத்துவர்_பெற்ற_பலன்_இவ்வுலகும்_பெற_வேண்டி  பகிர்கிறேன்.

புடலங்காய் கூட்டு சாப்பிடுவதால் ஆரோக்கிய நன்மை

புடலங்காய் கூட்டு சாப்பிடுவதால் ஆரோக்கிய நன்மை




புடலங்காயை நாம் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும்.

எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுப்படும்.

இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.

புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.

புடலங்காயை பொறியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.

கடும் காய்ச்சல் உள்ளவர்கள் வெட்டிய புடலங்காய் 250கிராம் எடுத்து 300மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 200மிலி குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாக நீங்கும்.

சுத்தம் வேறு - ஒருவரிடம் அன்பாக பழகுவது என்பது வேறு.

சுத்தம் வேறு - ஒருவரிடம் அன்பாக பழகுவது என்பது வேறு.



ஒருவர் எச்சிலை ஒருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் .
அது போல ஒருவர் செருப்பை ஒருவர் போட்டாலோ ,இல்லை துணி மணியை உபயோகித்தாலோ ,இல்லை ஒருவர் படுக்கையில் அடுத்தவர் படுத்தாலோ ,இல்லை ஒருவர் மாலையை இன்னொருவர் சூட்டிக்கொண்டாலோ ,ஒருவர் பாத்திரத்தை இன்னொருவர் உபயோகித்தாலோ,ஒருவர் உள்ளங்கையாய் இன்னொருவர் உள்ளங்கையால் தொட்டாலோ , அவர்கள் குணம் வாசனைகளாக நமக்கு வரும் .
திருமணத்தின் பிறகு இருவருடைய மனமும் ஒத்து போக வேண்டும் ,சண்டை போட கூடாது என்றால் இருவேறு குடும்பங்களில் இருந்து வந்த இவர்களுடைய குணங்களும் வாசனைகளும் இருவருக்கும் ஒன்றாக வேண்டும்.அதற்க்கு தான் திருமண சடங்குகளில் ஒருவர் மாலையை இன்னொருவருக்கு போடுதல் ,ஒருவர் எச்சில் செய்த தட்டில் இன்னொருவர் சாப்பிடுதல் ,இருவர் உள்ளங்கையயும் சேர்த்து பணிகிரஹணம் என்று பிடித்தல் ,ஒருவர் காலை இன்னொருவர் தொடுதல் ,ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் துணியை இன்னொருவர் துணியுடன் முடி போடுதல் ,என்று இருவருடைய வாசனைகள் ,குணங்களை பரிமாறி கொள்ளும் சடங்குகளாக வைத்து இருக்கின்றனர் .அதனால் மனமும் குணமும் வாசனைகளும் ஒத்துப்போனால் ,சண்டைகள் குறைந்து ஒற்றுமையாக வாழ்வார்கள் என்பதே காரணம்.
இதனால் தான் சாஸ்திரங்கள் மஹான்கள் /பக்தர்கள் சாப்பிட்ட எச்சிலை சாப்பிடு ,அவர்களுக்கு கால் பிடித்து விடு ,அவர்கள் உடுத்திய வஸ்திரத்தை நீ வாங்கிக்கொள்,அவர்களுக்கு போட்ட பூமாலையை நீ போட்டு கொள்,அவர்கள் கால் பட்ட மண்ணை தலையில் போட்டு கொள் என்றெல்லாம் சொல்வதற்கு காரணமும் இதுவே . அப்படியாவது அவர்களிடம் உள்ள தெய்வீகத்தில், குணங்களில் ,வாசனைகளில் கொஞ்சமாவது அழுக்கு படிந்த நமக்கு தப்பி தவறி வந்து விடாதா?? என்ற காரணமே.
கோயில்களில் இறைவனுக்கு சாத்திய புஷ்பங்கள் வஸ்திரங்கள் பிரசாதங்கள் நமக்கு கொடுக்கும் காரணமும் இதுவே .
எனவே ஆபீஸ்லோ, வெளி இடங்களிலோ ஒருவருடன் ஒருவர் பழகும் போது இவைகளை நாம் செய்யாதிருத்தல் நமக்கு நல்லது .FRIENDSHIP வேறு சுத்தமாக இருத்தல் வேறு ,இரண்டையும் போட்டு குழப்பி கொள்ளாமல் பழகவேண்டும் .
உபநிஷதுகளில் மிக பெரிய தவங்கள் செய்த ஒரு மகரிஷி இன்னொருவர் செருப்பை போட்டு கொண்டதினால் இன்னொரு பிறவி எடுத்தார் .நாரதர் சாதாரண கீழ் குலத்தில் இருந்து நாரத மகரிஷி
ஆனதிற்கு காரணம்,ரிஷிகள் சாப்பிட்ட எச்சில் பிரசாதத்தை அவர் உட்கொண்டு வந்ததே .இது போல எண்ணற்ற உதாரணங்கள் நமது சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளது .
தண்ணீருக்கு இந்த வாசனைகளை போக்கும் சக்தி உண்டு .அதனால் தான் ரிஷிகள் ஒரு கமண்டலுவில் அருகில் தண்ணீர் வைத்து கொள்வார்கள் .ஒரு திருடனின் வாசனையை மோப்பம் பிடிக்கும் நாய் ,
தொடர்ந்து சென்று அவன் போகும் பாதையை கண்டுபிடிக்கிறது .ஆனால் அவன் ஒரு நீர் நிலையை தாண்டிவிட்டால் அந்த நாயினால் அவனுடைய வாசனைகளை கண்டுபிடிக்க முடிவதில்லை .தண்ணீருக்கு அத்தனை சக்தி உண்டு . அதனால் தான் பெரியோர்கள்,மஹான்கள் அடிக்கடி குளித்து கொண்டே இருக்கின்றனர் ,
எனவே சுத்தமாக தொட்டு தொட்டு கலந்து பழகாமல் இருக்க முடியவில்லை என்றாலும் அதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பது தவறு ஏதும் இல்லை .நமக்கு மற்றவர்களிடம் இருந்து வரும் கெட்ட வாசனைகளில் ,குணங்களை கொஞ்சமாவது குறைக்க செய்யலாம் .

நன்றாக நினைவில் கொள்ளுங்கள் ஒருவரிடம் நாம் மிகவும் நெருக்கமானவராக காட்டி கொள்வதற்காக ,வித்யாசம் பார்க்கவில்லை என்பதை காட்டிக்கொள்வதற்காக ,நம் சுத்தத்தை விட்டு கொடுத்து ,எச்சிலை சாப்பிட்டு ,தொட்டு தொட்டு பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை .சுத்தம் வேறு, ஒருவரிடம் அன்பாக பழகுவது என்பது வேறு.