50 எளிய இயற்கை வைத்தியம - மருத்துவ குறிப்புகள்

50 எளிய இயற்கை வைத்தியம - மருத்துவ குறிப்புகள்

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.

1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

இயற்கை முறைக்கு மாறுவோம்
ஆரோக்கியமாக வாழ்வோம்
------------------------------------------------------------------------------------

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாத பழங்கள்!

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாத  பழங்கள்!

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் உள்ள ஃப்ளேவர் தாய்ப்பாலில் கலந்து, குழந்தைக்கு வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

ஸ்ட்ராபெர்ரி

தாய்ப்பால் கொடுக்கும் போது ஸ்ட்ராபெர்ரி பழத்தை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், குழந்தைக்கு தீவிரமாக அழற்சி ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் வாய்வுத் தொல்லை, வயிற்றுப்போக்கு, எரிச்சல் போன்றவையும், சில நேரங்களில் சருமத்தில் அரிப்புக்களும் ஏற்படும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

அன்னாசி

அன்னாசியில் உள்ள அசிட்டிக் தன்மை, தாய்ப்பாலுடன் கலந்தால், அது தாய்ப்பாலை நாற்றமிக்கதாக மாற்றுவதோடு, குழந்தைக்கு நாப்கின் அரிப்புக்களையும் உண்டாக்கும்.

கிவி

கிவி பழத்தை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது குழந்தைக்கு ஆரோக்கியமானதல்ல. இப்பழத்தில் உள்ள உட்பொருட்கள் குழந்தைக்கு வாய்வுத் தொல்லையை உண்டாக்கும்.
ழங்கள்

செர்ரிப் பழங்கள்

செர்ரிப் பழங்களை அதிகமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் இயற்கையாகவே மளமிளக்கும் தன்மை உள்ளது. ஒரு வேளை அதிகமாக உட்கொண்டால், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

கொடிமுந்திரி

கொடிமுந்திரியையும் தாய்ப்பால் கொடுப்பவர்கள் அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இது குழந்தைக்கு அடிக்கடி டயப்பரை மாற்றக்கூடியவாறு செய்துவிடும். ஒருவேளை உங்களுக்கு இப்பழத்தை உட்கொள்ள தோன்றினால், அளவாக உட்கொள்ளலாம். ஆனால் இதை அதிகமாக உட்கொள்ளக் கூடாது.

ஆப்பிள்

என்ன தான் ஆப்பிள் பழங்களிலேயே ஆரோக்கியமானதாக இருந்தாலும், தாய்ப்பால் கொடுப்பவர்கள் இப்பழத்தை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து, குழந்தைக்கு மலச்சிக்கலை உண்டாக்கிவிடும்.

பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1.நார்ச்சத்து அதிகம் உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனைகள் குணமாகும்.

2. உடல் இளைத்தவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும்.

3.உடலுக்கு குளிர்ச்சித் தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கிறது.

4. பனங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து வேகவைத்து, வெயிலில் காயவைத்து, பின் அதை, அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து அதிகமாகும்.

5. பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும்.

6. சர்க்கரை நோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்சனை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

7. பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

கற்பக விருட்சம் என்ற போற்றப்படும் ஒரே மரம் இந்த பனை மரம் தான்.

நமது நாட்டில் அழிந்து கொண்டிருக்கும் மர வகைகளில் இந்த‌ பனைமரம் முதலிடத்தில் உள்ள‍து. இந்த பனை மரத்தில் இருந்து கிடைக்க‍க்கூடிய நுங்கு, பதநீர், கிழங்கு மற்றும் பழம் போன்றவை அதிக சுவையுடன் மனிதர்களுக்கு நல்லாரோக்கியத்தையும், நோய் தீர்க்கும் மாருந்தாக வும் செயல்படக் கூடியது.

பனைமரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு. அதனை வெட்டாமல் மரத்திலேயே விட்டு விட்டால் அந்த நுங்கு நன்றாக பழுத்து பனம்பழமாகி விடும். இந்த பனம்பழத்தினை எடுத்து வெட்டி நிலத்தில் குழி தோண்டி அதில் புதைத்து வளர்த்துவந்தால் கிடைப்பதுதான் பனங்கிழங்கு.

ம‌லக் கழிவை வெளியேற்ற‍ இயலாமல் அதாவது மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள்…. வெயிலில் காய வைத்த‍ பனங்கிழங்கை (ப‌ச்சையாக) எடுத்து, தேவையானளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஈரமாவு ஆக அரைத்து அம்மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியுள்ள‍ அல்ல‍து உடலிலிருந்து வெளியேரமறுக்கும் மலத்தை இளகவைத்து, எளிதான மலத்தை வெளியேற்றி அதாவது மலச்சிக்கலை தீர்த்து பூரண சுகத்தை அளிக்கும். மேலும் உடலுக்கு எதிப்புச் சக்தியாகவும் செயல்பட்டு உடலைக் காக்கும் என்கின்றன‌ சித்த மற்றும் இயற்கை வைத்திய முறைகள்.
.

வாழையிலைக் குளியல் - இயற்கை சிகிச்சை முறைகள்

வாழையிலைக் குளியல் - இயற்கை சிகிச்சை முறைகள்

      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

*இயற்கை சிகிச்சை முறைகள்.*
***********************************
(1) வாழையிலைக் குளியல்
(2) மண் குளியல்
(3) நீராவிக் குளியல்
(4) முதுகு தண்டுக் குளியல்
(5) இடுப்புக் குளியல்
(6) கண் குவளை
(7) மூக்கு குவளை
(8) எனிமா
(9) ஈரத்துணிப்பட்டி
(10) ஈரமண் பட்டி
(11) சூரிய ஒளி குளியல்

*வாழையிலைக் குளியல்*
****************************

(1) 10லிருந்து 15 வரை முழு நீள வாழையிலை ஒரு நபருக்கு தேவைப்படும்.

(2) இந்த சிகிச்சையை பகல் 12 மணிக்கு முன்னால் செய்வது நல்லது. நல்ல சூரிய வெள்ச்சம் இந்த சிகிச்சை முறைக்கு தேவைப்படும். வியர்வையின் முலமாக இந்த சிகிச்சை முறையில் கழிவுகள் வெளியேறும். இதய நோயாளிகள் இந்த சிகிச்சையின் போது சிறிது சிறிது படபடப்பாக உணருவர். அதற்கு பயப்படத் தேவையில்லை.

(3) இந்த சிகிச்சை மூலமாக வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சிகிச்சைக்கு முன்னர் எவ்வளவு தண்ணிர் அருந்த முடியுமோ அவ்வளவு த ண்ணீர் அருந்தவேண்டும்.

(4) மிகவும் குறைந்த அளவு உடைகளே போதுமானது. ஒருசிறிய ஈரத்துணியை தலையின் மேல் போட்டுக் கொள்ள வேண்டும்.

(5) நல்ல சூரிய ஒளி உள்ள இடத்தில் ஒரு பாயை விரிக்கவும். அதற்கு மேல் ஒரு போர்வையை தண்ணீரில் நனைத்து போடவும்.

(6) போர்வையின் மேல் சிறிய சணல் கயிறு அல்லது நாடா போன்றவற்றை 5 (அ) 6 எடுத்து போர்வையின் மேல் சிறிது இடைவெளி விட்டு போடவும். (சிகிச்சை எடுப்பவரை வாழையிலையில் கட்டுவதற்காக). இதற்கு மேல் வாழையிலைகளை விரிக்கவும். நாம் உண்ணும் பகுதி நமது உடலின் மேல் படுமாறு இருக்க வேண்டும். சிகிச்சை எடுப்பவரை வாழையிலையில் படுக்க வைத்து மேல் பக்கத்திலும் வாழையிலையை வைத்து மூடி கீழே இருக்கும் சணல் கயிற்றினால் காற்று உள்ளே புகாதவாறு கட்டி விடவும். மூச்சு விட மூக்கின் அருகே ஒரு சிறிய துளை செய்து விட வும்.

(7) 20 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த சிகிச்சையை செய்யலாம். மிகவும் சிரமமாக உணர்ந்தால் கட்டுக்களை அவிழ்த்து விட்டு விடலாம்.

(8) 1/2 முதல் 1 லிட்டர் வரை கழிவுகள் வியர்வை மூலமாக வெளியேறி இருக்கும்.

(9) பிறகு காற்றோட்டமான நிழலுள்ள இடத்தினில் 1/2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும்.

(10) உடல் பருமனுக்கு இது மிகவும் சிறந்த சிகிச்சையாகும்.

(11) இலைகளில் விஷமேறி விடுவதால் இதை செடி, கொடிகளுக்கு உரமிடுவதோ ஆடு, மாடுகளுக்கு தீவனமாக கொடுப்பதோ கூடாது.

(12) இந்த சிகிச்சை மேற்கொண்டால் சிறிது களைப்பாகவோ, தலைவலியோ இருக்கும். பயப்படத் தேவையில்லை.

(13) ஆரோக்கியமாக உள்ளவர்கள் இதை மாதம் ஒரு முறை செய்தால் போதும். நோய்க்காக சிகிச்சை எடுப்பவர்கள் 2 வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். இது இரத்தத்தை சுத்தம் செய்கிறது.

*மண் குளியல்*
****************

(1) செம்மண், களிமண், புற்று மண் (அ) ஒட்டக் கூடிய தன்மை உள்ள எந்த மண்ணையும் பயன் படுத்தலாம். மண் குளியல் எடுக்க வேண்டிய நாளைக்கு முதல் நாள் இரவே மண்ணை நீரில் குழைத்து வைத்து கொள்ள வேண்டும். இது மண்ணை குளிர்ச்சி அடைய வைத்து தோலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சி அடைய வைக்கிறது.

(2) பகல் 12 மணிக்கு முன்னர் எடுக்க வேண்டும்.

(3) மிகக் குறைந்த அளவு ஆடைகளே அணிய வேண்டும்.

(4) தலை உட்பட எல்லாப் பகுதிகளிலும் மணலை பூசிக் கொள்ள வேண்டும். புண்களிலும் பூசலாம்.

(5) சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.

(6) 1/2 மணி நேரத்திற்கு பிறகு (அ) மணல் முழுமையாக காய்ந்த பிறகு நிழலில் 1/2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.

(7) பிறகு பச்சை தண்ணீரில் குளிக்கவும். சோப்பு, ஷாம்பூ, சிகைக்காய் எதுவும் தேவையில்லை. மணலையே நன்றாக தண்ணீர் சேர்த்து தேய்த்து மெதுவாக மசாஜ் செய்து குளிக்கவும்.

(8) கழிவுகள் இம்முறையில் வெளியேறும். வியர்வைத் துளைகள் சுத்தமாகும். பிரஷ்ஷாக இருக்கும்.

(9) தோல் வியாதிகளான சொரியாஸிஸ், வெண் குஷ்டம் மற்றும் நரம்பு பிரச்சனைகள், வாதம், தொழு நோய் போன்றவற்றிற்கு இது நல்ல பலன் தரும்.

(10) அபார்ட்மென்ட் மற்றும் நகரங்களில் வாழும் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து இல்லாத நல்ல மணல் கிடைக்கப் பெறாதவர்கள் ’முல்த் தானி மிட்டி‘ என கூறப் படும் மண்ணை பேன்சி ஸ்டோர்களில் வாங்கி பயன் படுத்தலாம்.

*நீராவிக் குளியல்*
********************

மழைக் காலங்களிலும், குளிர் நாடுகளிலும் நீராவிக் குளியல் பயன் தரும். இந்த இடங்களில் வியர்வை மூலமாக கழிவுகள் வெளியேறுவது மிகவும் குறைவு. இந்த குறையை நீராவிக் குளியல் போக்குகிறது. இதை வீடுகளிலேயே எடுக்கலாம். துளசியிலை, வேப்பிலை, நொச்சி இலை போன்றவற்றை பயன்படுத்தலாம். பிரஷர் குக்கர் மற்றும் கேஸ் டியூப் போதுமானது. குக்கரில் தண்ணீர் வைத்து குக்கரை சூடு ப டுத்தவும். கேஸ் டியூப்பை குக்கரில் ஆவி வரும் இடத்தில் பொருத்தவும். நீராவிக் குளியல் எடுப்பவரை ஒரு ஸ்டூல் (அ) சேரில் உட்கார வைத்து 3 (அ) 4 போர்வைகள் எடுத்து மூடவும். குக்கரில் இருந்து வரும் நீராவியை போர்வையின் வழியாக உள்ளே செலுத்தவும்.(சிகிச்சை பெறுபவர் உடலின் மேல் ஆவி படக் கூடாது). பிரஷர் குக்கர் கீழே விழாதவாறு ஒருவர் கவனித்துக் கொள்ள வேண்டும். நன்றாக வியர்க்க வேண்டும். சிகிச்சை பெறுபவர் இயன்ற வரை உள்ளே இருக்க வேண்டும். சளி, ஆஸ்த்துமா, உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.

*முதுகு தண்டு குளியல்*
**************************

இதை எடுக்க தேவையான சாதனம் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும். 1/2 மணி நேரம் முதுகு தண்டு படுமாறு இதில் ப டுக்க வேண்டும். பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும். முதுகு வலி, முதுகு தண்டு பிரச்னை, உயர் இரத்த நோயாளிகளுக்கு இது பயன் தரும்.

*இடுப்புக் குளியல்*
*********************

இதற்கு தேவையான சாதனமும் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும். அல்லது ஒருவர் கால்களை வெளியில் விட்டு உட் காரக் கூடிய வகையில் உள்ள பாத்திரத்தையும் பயன்படுத்தலாம். பாத்திரம் குட்டையாகவும் அகலமாகவும் இருந்தால் நல்லது. பாதி பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் அமரவும். கால்கள் வெளியில் தரையில் படாதவாறு இருக்க வேண்டும். கால்களை மரக்கட்டைகளில் வைத்துக் கொள்ளலாம். இதனால் உடலின் காந்த சக்தி தரையில் பாயாதவாறு இருக்கும். ஒரு சிறிய துணியை வைத்து வயிற்றை மசாஜ் செய்து கொண்டே இருக்கவும். 40 நிமிடங்கள் வரை அமரலாம். 15 நிமிடங்களுக்கு பிறகு குளிக்கலாம். ஒரு முறை உபயோகித்த நீரை மீண்டும் உபயோகிக்கக் கூடாது. இது வயிறு சம்மந்தமான பிரச்னைகளுக்கு உகந்தது. வயிற்றை குளிர்ச்சி அடைய செய்து எல்லா நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலை கு றைக்கிறது. தலைவலி மற்றும் காய்ச்சலின் போது இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

*கண் குவளை*
*****************

இது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஒரு சிறிய சாதனமாகும். இது இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும். அல்லது ஒரு நீர் நிரம்பிய சிறிய கிண்ணத்தையும் பயன்படுத்தலாம். இது இரவு நேரம் விழித்து பணி புரிபவர்கள், கணினியில் பணி புரிபவர்கள், டி.வி. பார்ப்பவர்கள், தூசியில் பணிபுரிபவர்கள், வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கும் பயன்படும். இது கண்களை குளிர்ச்சி அடைய வைக்கும்.
இந்த குவளையில் கண்ணை வைத்து இடது மற்றும் வலது புறமாக சுழற்ற வேண்டும். (5 நிமிடங்கள்). முதலில் சிறிது சிரமமாக இருக்கும். இது கண்களை பாதுகாக்க ஒரு எளிய வழியாகும்.

*மூக்கு குவளை*
******************

இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும். சிறிதளவு உப்பு போட்டு தண்ணீரை வெதுவெதுப்பாக்கி கொள்ளவும். அதற்கென உள்ள சாதனத்தில் இந்த நீரை ஊற்றிக் கொள்ளவும். முன்புறம் வளைந்து தலையை மேல்புறமாக திருப்பி வைத்து கொள்ளவும். வாயின் வழியாக மூச்சு விட்டுக் கொண்டு நீரை சிறிது சிறிதாக வலது நாசியில் விடவும். நீர் இடது நாசி வழியாக வெளியேறும். இதையே இடது நாசிக்கும் மாற்றிச் செய்யவும். இது சுவாச சம்பந்தமான பிரச்சனைகளான சளி, சைனஸ், ஆஸ்துமா, டிபி(காச நோய்) போன் றவைகளுக்கு பயன் தரும்.

*எனிமா*
***********

இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கிறது.
மலச்சிக்கல் உள்ள உடலில் கிருமிகள் உற்பத்தியாகும். எனவே இரத்தத்தில் நச்சுக்கள் ஏற்ப்படும். உடல் நோய் வாய்ப்படும். மலச்சிக்கலினால் உடல் உஷ்ணம் அடைகிறது. இது மூல வியாதிக்கு காரணம் ஆகிறது. நாம் வாய் கொப்பளிப்பது போல எனிமா குவளையை குடலை கழுவ பயன்படுத்தலாம். மலச் சிக்கல் இருந்தால் இதனை தினமும் பயன் படுத்தவேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் இருக்க அதிக நார்ச் சத்துள்ள உணவு(இயற்கை உணவு) உண்ண வேண்டும். இயற்கை உணவும் உண்டு நாக்கில் வெள்ளை படலமும் இல்லாமல் இருந்தால் வாரம்
1 முறை எனிமா எடுத்தால் போதுமானது. மலம் ஒட்டுவது மலச்சிக்கலை குறிக்கிறது. குழந்தைகள் கூட இதை பயன்படுத்தலாம். தலை வலி, காய்ச்சல், சளி தொந்தரவுக்கு இதை பயன் படுத்தலாம். சமையல் உணவில் இருப்பவர்களுக்கு இது பயன் தரும்.
எப்படி உபயோகப்படுத்துவது?
எனிமா கப்பை தண்ணீர் ஊற்றி தலைக்கு மேலே ஒரு உயரத்தில் தொங்க விடவும். பின் நாசில் வழியாக தண்ணீரை மலத்து வாரத்திற்குள் முன்புறம் குனிந்தவாறு செலுத்தவும். நாசிலில் சிறிது எண்ணெய் பூசிக் கொள்ளலாம். தண்ணீர் அனைத்தும் குடலுக்குள் சென்ற பிறகு 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்கவும். படுத்திருந்தால் மலத்தை அடக்க எளிதாக இருக்கும். பலனும் நன்றாக இருக்கும். பிறகு மலம் கழிக்கலாம். குடலில் தேங்கியுள்ள நாட்பட்ட கழிவுகள் எல்லாம் வெளியேறும். குடிப்பதற்காக பயன் படுத்தும் நீரையே இதற்கும் பயன்படுத்த வேண்டும்.

*ஈரமண்பட்டி*
**************

சுத்தமான மண், புற்று மண், செம் மண், களி மண்(உரமும், பூச்சிகொல்லி மருந்தும் இல்லாதது) தண்ணீருடன் குழைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு செவ்வக வடிவத்தில் உள்ள துணியில் மண்ணை வைத்து மண் வெளியே விழாதவாறு மடித்து கொள்ள வேண்டும். 1/2 மணி நேரத்திற்கு மேலாக வைக்கலாம். பயணத்தினால் ஏற்படும் உஷ்ணம், காய்ச்சல், தலை வலி, மலச்சிக்கலுக்கு இந்த சிகிச்சை முறை சிறந்தது. சிகிச்சைக்கு பிறகு எனிமா எடுப்பது நல்ல பலன் தரும்.

*சூரிய ஒளிக் குளியல்*
*************************

குறைந்த அளவு உடை உடுத்திக் கொண்டு நின்றோ, அமர்ந்தோ, படுத்தோ இந்தக் குளியல் எடுக்கலாம். சுரிய ஒ:ளி நமக்கு நிறைய ஆற்றலை வழங்குகிறது. விட்டமின் டி சுரிய ஒளியில் உள்ளது. அது தலை வலி மூலமாகவும், வியர்வை மூலமாகவும் உடலின் அழுக்கு களை வெளியேற்றி உடலுக்கு தேவையான உஷ்ணத்தையும் தருகிறது.

சூரிய ஒளியின் நன்மைகள்:
(1) தோல் கேன்சர் சூரிய ஒளி அதிகமாக உள்ள நாடுகளில் மிகவும் குறைவு.
(2) தோல் வியாதிகள் மிகவும் குறைவு.
(3) கறுப்பு நிறத் தோலே வெளிர் நிறத்தோலை விட ஆரோக்கியமானது.
(4) காலை 9 மணிக்கு முன்னரும் மாலை 4 மணிக்கு பின்னரும் இதை எடுக்க வேண்டும். சூரியஒளி அதிகமாக உள்ள நாடுகளில் 20 நிமிடத்திற்கு மேல் எடுக்க வேண்டாம்.

*எண்ணெய் கொப்பளித்தல்*
*******************************

இது இயற்கை சிகிச்சை முறையில் வராவிட்டாலும் இது உடலிலுள்ள கழிவுகளை ஒரு எளிய முறையில் நீக்குகிறது. இது தீங்கு விளைவிக்காது. நோய் அதிகமாக இருக்கும் போது இதை உணவு உண்பதற்கு முன்னர் தினசரி 3 நேரம் செய்ய வேண்டும். பிறகு ஒரு நா¬ ளக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.

செய்முறை:
சமையலுக்கு பயன்படுத்த கூடிய எந்த எண்ணெய் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். 1 ஸ்பூன் போதுமானது. வாயில் வை த்து 15 முதல் 25 நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும். பிறகு அதை விழுங்காமல் துப்பி விட வேண்டும். விழுங்கினால் தவறேதும் இல்லை. ஆனால் விழுங்குவதை தவிர்ப்பது நல்லது. பிறகு நீரில் வாய் கொப்பளிக்கலாம். காலையில் பல் தேய்த்த உடன் இதை செய்யலாம். சவ்வூடு பரவுதல் (ஆஸ்மாஸிஸ்) மூலமாக கழிவுகள் வாய்க்கு இந்த முறையில் வந்து விடுகிறது.

சமையலுணவில் குறைக்கவேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு
குறைக்க வேண்டியது மாற்று உணவு
(1) சர்க்கரை வெல்லம், கரும்பு சர்க்கரை கருப்பட்டி
(2) பொடி உப்பு கல் உப்பு
(3) கரையாத கொழுப்பு கரையும் கொழுப்பு
கொண்ட எண்ணெய் கொண்ட எண்ணெய்
(4) மிளகாய் மிளகு
(5) புளி எலுமிச்சை
(6) கடுகு சீரகம்
(7) காபி,டீ லெமன் டீ, ப்ளாக் டீ,
சுக்கு காப்பி, வரக்காப்பி
(8) பாலிஷ் செய்த அரிசி அவல், சிகப்பரிசி
இந்த மாற்று உணவு (மிளகு, எலுமிச்சை, சீரகம் தவிர) சமைத்த உணவை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும். இவை இயற்கை உணவு அல்ல. இவற்றினால் சிறிது தீமை குறைவு.

*சாறு உண்ணா நோன்பு (ஜுஸ்பாஸ்டிங்)*
********************************************

வெறும் நீர் அருந்தி உண்ணா நோன்பு இருக்க முடியாத பட்சத்தில் சாறு உண்ணா நோன்பு இருக்கலாம். இதில் பழச்சாறுகள் மட்டுமே அருந்த வேண்டும்.

நன்மைகள்:
(1) உணவு திரவ வடிவில் இருப்பதால் ஜீரணத்துக்கு தேவைப்படும் ஆற்றல் மிகவும் குறைவு. எனவே உடலின் ஆற்றல் முழுவதும் கழிவுகள் வெளியேற்றத்துக்கு உபயோகப்படுத்தப் படுகிறது.
(2)உடல் எளிதாக ஆற்றலை கிரஹித்துக் கொள்ளும்.
(3)சாறுள்ள பழங்களின் ஜுஸ்கள் (திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் பழம் போன்றவை) அதிகமான க்ளுக்கோஸ் சத் துக்களை கொண்டுள்ளதால்
உடல் நிலை பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய உதவுகிறது.
(4) மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டோர் இதை ஜீரணிக்க எளிதாக உணருவர்.
சாறு உண்ணாநோன்பின் போது கவனிக்க வேண்டியவை
(1) திரவ வடிவில் இருப்பதால் நார்ச்சத்து கிடைப்பதில்லை.
(2) மலச்சிக்கல் மற்றும் மூலவியாதி இருப்பவர்களுக்கு இது உகந்தது அல்ல. அவர்கள் இயற்கை உணவை உள்ளது உள்ள படியே (நார்ச்சத்துடன்) உண்ண வேண்டும்.
(3) சாறுண்ணா நோன்பின் போது மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் ஒரு நாளைக்கு ஒரு முறை எனிமா எடுத்துக் கொள்ளலாம்.

*இயற்கை உணவும் இரத்தத்தின்தன்மையும்*
*************************************************

இரத்தம் காரத்தன்மை (ஆல்கலைன்) உடையது. இயற்கை உணவும் காரத்தன்மை உடையது. எனவே இயற்கை உணவு எளிதாக இரத்தத்தின் காரத் தன்மையை சமன் செய்யும். ஆனால் சமைத்த உணவு அனைத்தும் அமிலத்தன்மை (அசிடிக்) உடையது. எனவே அது இரத்தத்தை அமிலத்தன்மை உடையதாக்கும். ஆனால் உடலோ மீண்டும் இரத்தத்தை காரத்தன்மை உடையதாக்க போராடும். அந்த போராட்டத் தில் உடல் தோல்வியடையும் போது நாம் நோய்வாய்ப்படுகிறோம்.

நம் உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவையாவன:
(1)பிட்யுட்டரி
(2)பீனியல்
(3)அட்ரீனல்
(4) பான்கிரியாஸ்
(5) நாபிச் சக்கரம்
(6) தைராய்டு
(7) பாலியல் சுரப்பிகள் ஆகும்.

இவை ஒரு மனிதனின் குணத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை சரியாக செயல்பட்டால் ஒருவர் அன்பு, தைரியம், கருணை, வைராக்கியம், பொறுமை, எளிமை, பொது நலம், சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பர். இவை சரியாக செயல் படாவி ட்டால் அதிக காமம், கோபம், பிடிவாதம், அமைதியின்மை, சிடுசிடுப்பு, ஆடம்பர பொருட்கள் மேல் மோகம், கோழைத்தனம், அதிக ஆசை, சுயநலம், சோம்பேறித்தனம், சோர்வு, தற்கொலை எண்ணம், திருடும் எண்ணம், கொடூரம், பயம் போன்றவற்றுடன் காணப்படுவர். எனவே மனரீதியான பிரச்னை உள்ளவர்கள் இயற்கை உணவு, தியானம் மற்றும் அக்குபிரஷர் (முக்கியமாக நாளமில்லா சுரப்பிகளில் எந்த சுரபி குறைபாடுடன் இ ருக்கிறது என கண்டுபிடித்து அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்) செய்து வந்தால் வியக்கத்தக்க மாறுதல்களை காணலாம். குற்றவாளிகளை கூட இந்த சிகிச்சை முறையால் திருத்தி விட முடியும்.

நாளமில்லா சுரப்பிகளை தவிர மற்ற உறுப்புகளுக்கு கடைகளில் விற்கப்படும் அக்குபிரஷர் உருளைகளை வாங்கி பயன்படுத் தலாம். மேலும் சீப்பு, துணிகிளிப், ரப்பர் பாண்டு, மரக்குச்சி, துணி துவைக்கும் பிரஷ் கூட பயன்படுத்தலாம். இவைகளை கொண்டு நாம் டிவி பார்க்கும் பொழுதும், கணினியில் வேலை செய்யும் பொழுதும், புத்தகங்கள் படிக்கும் பொழுது கூட நேரத்தை வீணாக்காமல் அக்குபிரஷர் கொடுக்கலாம். நாளமில்லா சுரப்பிகளுக்கு மட்டும் கட்டை விரலால் செங்குத்தாக அழுத்தம் கொடுக்க வேண்டும

நாளமில்லா சுரப்பிகளை தவிர மற்ற உறுப்புகளுக்கு கடைகளில் விற்கப்படும் அக்குபிரஷர் உருளைகளை வாங்கி பயன்படுத் தலாம். மேலும் சீப்பு, துணிகிளிப், ரப்பர் பாண்டு, மரக்குச்சி, துணி துவைக்கும் பிரஷ் கூட பயன்படுத்தலாம். இவைகளை கொண்டு நாம் டிவி பார்க்கும் பொழுதும், கணினியில் வேலை செய்யும் பொழுதும், புத்தகங்கள் படிக்கும் பொழுது கூட நேரத்தை வீணாக்காமல் அக்குபிரஷர் கொடுக்கலாம். நாளமில்லா சுரப்பிகளுக்கு மட்டும் கட்டை விரலால் செங்குத்தாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் ?

காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் ?

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

காதுக்குள் திடீரென ஏதேனும் ஒரு பூச்சியோ, எறும்போ நுழைந்து விட்டால் என்ன செய்வெதன்று தெரியாமல் திணறுவோம்.

அதற்கு ஒரு எளிய வழி உள்ளது.

அதாவது, காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் உடனடியாக காதினுள் எண்ணையையோ (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்) உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.

இதனால், காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். பிறகு அதனை எடுத்து விடலாம்.

சிலர், பூச்சி காதுக்குள் போனதும் வெறும் தண்ணீரை ஊற்றுவார்கள். ஆனால், பூச்சிக்குத் தேவையான ஆக்ஸிஜன் தண்ணீரிலும் இருப்பதால் சில பூச்சிகள் இறப்பது இல்லை.

அதே போல, குழந்தைகளுக்கு காது தொடர்பான பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வது சற்று கடினமான வேலை தான்.

சில குறிப்புகளை வைத்து குழந்தைகளுக்கு காதில் பிரச்சினை உள்ளதை தெரிந்து கொள்ளலாம்.

காது கேட்பது மட்டுமே பிரச்சினை அல்ல. காதில் வலி, சீழ் வடிவது, கிருமி தொற்று போன்ற பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

இதனை கண்டறிய சில குறிப்புகள் :

தேவையில்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்தால் அதற்கு ஏதேனும் ஒரு பிரச்சினை இருக்கக் கூடும் என்று தெரிந்து கொள்வீர்கள். ஆனால் காதில் பிரச்சினை இருக்கிறது என்பதை, காதுக்கு அருகே உங்களது கைகளை வைத்து லேசாக வருடி விடுங்கள். அப்போது அழுகை குறைந்தால் பிரச்சினை காதில் என்பதை கண்டறிந்து விடலாம்.

காது என்பது மூக்கு, வாயுடன் தொடர்புடையது என்பதால், இவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் கூட காதினை பாதிக்கலாம். எனவே, மூக்கு மற்றும் வாயில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.

குழந்தை பிறக்கும் போது காதுகளின் உள் இருக்கும் மெல்லிய எலும்புகள் மூடியிருக்காது. குழந்தை பிறந்த பிறகு காதுகளை உலர்வாக வைத்திருந்தால்தான் அவை மூடுகின்றன. அதில்லாமல் எப்போதும் சளிப்பிடித்து காதுகள் ஈரமாக இருக்கும்பட்சத்தில் அவை மூடுவதற்கு காலதாமதம் ஏற்படும். இந்த சமயத்தில் தான் குழந்தைகளுக்கு தொற்று பிரச்சினை ஏற்படுகிறது. காதுக்குள் தொற்று பரவும் போது காதில் சீழ் வடிகிறது.

இந்த பிரச்சினை உள்ள குழந்தையை குளிக்க வைக்கும் முன் பஞ்சினை தேங்காய் எண்ணெயில் நனைத்து காதுகளில் வைத்துவிட்டால் குளிக்கும் போது தண்ணீர் காதுக்குள் செல்வதை தவிர்க்கலாம்.

அதிக சப்தம் கேட்கும் இடங்களில் குழந்தைகளை வைத்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

வகுப்பறையில் கவனம் செலுத்தத் தவறினால் குழந்தையை அடிப்பதையோ, திட்டுவதையோ விட்டுவிட்டு அவர்களுக்கு காதில் ஏதேனும் பிரச்சினை உள்ளதாக என்று கண்டறியலாம்.

குழந்தைகள் தாங்களாகவே பட்ஸ் அல்லது வேறு ஏதேனும் ஒன்றை காதில் போட்டு குடைவதை தவிர்க்க வேண்டும்.

மெல்லிய டவலின் நுனிப் பகுதியை லேசாக காதுகளில் விட்டு அருகில் உள்ள நீர்த்தன்மையை போக்கலாமேத் தவிர, குழந்தைகளின் காதுகளில் பட்ஸ்களைப் பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டாம்.

காதுகளில் இருந்து மோசமான நாற்றம் வருமாயின் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என்பதை உணருங்கள்.

சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும்

சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும்

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத காரணத்தால் இதை மக்கள் பயன்படுத்துவது குறைவு. இதனால் இதனை பயிரிடுவதில்லை.  ஆனால் இது தானாக பல இடங்களில் வளர்கிறது.  இந்தக் கீரையின் விதைகளை வாங்கி வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டு வளர்க்கலாம்.

உணவுமுறை மாறுபாடு,  மன அழுத்தம் போன்ற காரணங்களால் குடலில் புண்கள் உருவாகின்றன. இவர்கள் சுக்கான் கீரையை புளி சேர்க்காமல் பாசிப் பருப்புடன் கலந்து வேகவைத்து மதிய உணவில் சேர்த்துக்கொண்டால் குடல்புண் குணமாகும். இதனை சட்னி செய்தும் சாப்பிடலாம்.  அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது.  இவர்கள் சுக்கான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலப்படும், சீராக இயங்கும்.  சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்கள் பலப்படுவதுடன் பல் ஈறுகள் உறுதியாகும்.  சிலருக்கு சாப்பிட்ட உணவு எளிதில் சீரணமாகாது. மேலும் பசி என்பதே இவர்களுக்கு இருக்காது.   இவர்கள் சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும்.  மது, புகை, போதை வஸ்துக்கள் பயன்படுத்துபவர்களுக்கு ஈரல் வெகு விரைவில் பாதிக்கப்படும். இவர்கள் சுக்கான் கீரையை சூப் செய்து அருந்தி வந்தால் ஈரல் நன்கு பலப்படும்.  சிலருக்கு எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும். இவர்கள் சுக்கான் கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும்.  இரத்தம் தூய்மையாக இருந்தால் தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும்.  சுக்கான் கீரை இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி பின் சட்னியாக அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தப்படும்.  தேள் கொட்டினால் விஷம் ஏறி கடுப்பையும், மூர்ச்சையையும் உண்டாக்கும்.   எனவே தேள் கடித்த உடனே கடி பட்ட இடத்தில் சுக்கான் கீரையின் சாறு விட்டு வந்தால் வலி குறையும், மூர்ச்சை ஏற்படாது. விஷமும் விரைவில் இறங்கும்.

கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பண்டைய தமிழ் முறையை அறிய அவசியம் படியுங்கள்

முதல் மாதத்தில் அடி வயிறு வலிக்கும்.

இரண்டாவது மாதத்தில் சிறு குத்தலாக இருக்கும்.

மூன்றாவது மாதத்தில் கொஞ்சம் அதிகபட்சமாக வலி உண்டாகும்.

நான்காவது மாதத்தில் கர்ப்பவலியும் ரத்தமும் காணப்படும்.

ஐந்தாவது மாதத்தில் அடி வயிறு அகன்று அகன்று வலிக்கும்.

ஆறாவது மாதத்தில் கர்ப்பக் குடல்  அகன்று வலிக்கும்.

ஏழாவது மாதத்தில் விசேஷமாக வலி உண்டாகும். ஏழாவது மாதத்தில் இருந்து அனைத்து பெண்களுக்கும் வயிற்றிலும், மார்பிலும் அரிப்பு எடுக்க ஆரம்பிக்கும். இந்த ஏழு மாதத்தில் இருந்து  பத்து மாதம் வரை வயிற்றை யாரும் சுரண்டக்கூடாது. வயிறு தொவ்வலாகிவிடும். குழந்தை வளர வளர வயிறு பெரிதாகும். அவ்வாறு வயிறு பெரியதாக ஆக நமநமவென்று அரிப்பு உண்டாகும். நாம் அதை சுரண்டிக் கொண்டெ இருந்தால் குழந்தை பிறந்த பின் நம் அடிவயிறு வெள்ளையாக வடுவடுவாக கோடு கோடாக இருக்கும். நாம் சுரண்டாமல் இருந்தால் கோடு அதிகம் வராது. அவ்வாறு அரிக்கும் பொழுது விளக்கெண்ணையை அடிவயிற்றில் தடவினால் அடிவயிறு அதிகம் அரிக்காது. வெள்ளையாக வடுவாகவும் வராமலிருக்கும்.

எட்டாவது மாதத்தில் கை, கால்கள் அசதியாக இருக்கும்

ஒன்பதாவது மாதத்தில் கர்ப்பத்தில் வலி உண்டாகும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பமுண்டாகி ஏழாவது மாதத்தில் இருந்து சீரகம் திரியடிபிரமாணம் , 10 மிளகு எடுத்து 5 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து நன்கு ஆறியவுடன் குடித்து வர சளி அறவே குறைந்து விடும். சிசுவுக்கும் சளி நீங்கும். கீரை வகைகளையும் அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும். கர்ப்பமான எட்டு மாதத்திலிருந்தே சரீர சம்மந்தம் வைத்துக் கொண்டால் குழந்தை கஷ்டமில்லாமல் பிறக்கும். குழந்தை பிறப்பதற்கு ஐந்து மணி நேரத்திற்கு முன்பு வரை சரீர சம்மந்தம் வைத்துக் கொள்ளலாம். இதனை நான் சொல்லவில்லை . சித்தர்கள் கூறியதைச் சொல்கிறேன்.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது மாங்காய், புளியங்காய், போன்றவை விரும்பி அதிகமாக சாப்பிட்டால் பிறக்கும் மூத்த குழந்தை மந்தமாக பிறக்கும்.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது சிறுநீரை அதிகமாக அடக்கக் கூடாது. அவ்வாறு அடக்கினால் பிறக்கும் குழந்தைக்கு வாயில் இருந்து எச்சில் வடிந்து கொண்டெ இருக்கும். இடது கையை கழுத்து அளவில் தூக்கிக் கொண்டே கையை ஆட்டிக் கொண்டோ வாயில் சீழ்வடியும். சிறுநீரையும் மலம் கழிப்பதையும் அதிகமாக அடக்கினால் பிறக்கும்  குழந்தை குருடாகவும், செவிடாகவும் ஊமையாகவும் பிறக்கும் வாய்ப்பு.

கர்ப்பப்பையில் 3 .1/2 லிட்டர் தண்ணீரில் அந்த மும்மூர்த்தியின் கங்கையில்  அது தவழ்ந்து கொண்டு இருக்கும். அந்த தண்ணீர் குடம் உடைந்து 16 மணி நேரம் கழித்து ஒரு குழந்தை பிறந்தால் 2 கால்கள், 2 கைகள் விளங்காமல் இருக்கும். மூளை வளர்ச்சியும் இருக்காது. பேச்சும் சரியாக வராது. தண்ணீர் குடம் உடைந்து 16 மணி நேரம் கழித்து பிறக்கும் குழந்தை இவ்வாறு இருக்கும் என்று அறிக. நீங்கள் எத்தனை மருத்துவரிட்டும், எத்தனை வைத்தியரிடமும் காண்பித்தால் கூட கேட்காது. அக் குழந்தை 32 வயதிலே இறந்து விடும். கருப்பையில் தண்ணீரின் அளவு குறைவாக இருந்தாலும் இப்படித்தான் குழந்தை பிறக்கும். அப்படிப்பட்ட நோய் உள்ள குழந்தைக்கு  ஆராக் கீரையை கொடுத்து வர குணமடையும்.

மேலும் கர்ப்பணி பெண்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது தண்ணீர் குடம் உடைந்தது தெரிந்தவுடன் தனது இனக் குறியைக் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தண்ணீர் இடம் உடைந்த பின்பு ஆகாரம் எதையும் சாப்பிடாமல் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் பிரசவம் வீட்டிலேயே பார்ப்பதே நல்லது. ஏனெனில் பிரசவம் ஆகும் பொழுது அதிக அளவு அசுத்த ரத்தம் வெளியேறும். மருத்துவ மனைக்குச் சென்று பிரசவம் பார்த்தால் அசுத்த ரத்தம் வெளியேறாமல் இருக்க ஊசி போட்டு விடுவர். இதனால் அசுத்த ரத்தம் வெளியேறாமல் உள்ளேயே தங்கி விடும். இதனால் பிரசவம் ஆன பிறகும் கூட வயிறு பெருத்து உப்பலாகவே இருக்கும். எனவே சுகப் பிரசவம் தகுந்த நபர்களை வைத்து வீட்டிலேயே பார்ப்பதே மிகவும் நல்லது.

அனைத்து மருத்துவ பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் என்பதை எப்போதும் மறவாதீர்கள்.

கர்ப்ப சஞ்சீவி எண்ணை:-

சிற்றாமணக்கெண்ணை 1/4 படி, பசும் பால் 1/4 படி,
வெள்ளைப் பூண்டு அரைக்காப் படி, கழுதைப்பால்  அரைக்கால்ப் படி, கருஞ்சீரகம் 1 . 1/2 விராகநிடை , வெள்ளைப் பூண்டின் தோலை நீக்கி சிறுக அரிந்து சீரகத்தை சிற்றாமணக்கெண்ணை விட்டு அரைத்து யாவும் ஒன்றாக ஊற்றிக் கலந்து கரண்டியால் கலக்கி அடுப்பேற்றி எரிக்கவும். அப்படி எரிக்கும் போது மெழுகு பதமானவுடன் அந்த எண்ணையில் கை விட்டு விழாவி பார்த்தால் குளிர்ந்த நீர் போல் இருக்கும் .

அந்தப் பதத்தில் இறக்கி வடித்து வைத்துக் கொண்டு கற்பஸ்திரிகளுக்கு ஐந்தாவது மாதம் முதல் நாளில் இருந்து ஐந்து நாட்கள் காலையும், மாலையும் வேளைக்கு 1/4 பலம் விதமாக கொடுக்கவும். உப்பு, புளி தள்ளி புத்தியமிருக்கில் கருவை அழிக்கும் கிரந்தி சூலை கெற்பகாரிகம் அணுக ஒட்டாமற் காற்பதுடன் பிரசவ காலத்தில்  யாதொரு வருத்தமும் இல்லாமல் பிறக்கும். இது மட்டும்மின்றி  தாய் தந்தையாருக்கு எவ்வியாதியிருந்தாலும் பூர்ண ஆயுளும் பெற்று துளரும். மாந்தம், கணம், கரப்பான் இவைகள் வராது. எண்ணைகளுக்கெல்லாம் இது மிகவும் உத்தமமான எண்ணையாகும்.

குழந்தை ஆணா?...பெண்ணா அறிய...

கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிய பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது அவர்கள் தரையில் இருந்து எழுந்திருக்கும் பொழுது இடது கையை ஊன்றி எழுந்தால் அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்றும், வலது கையை ஊன்றி எழுந்தால் அவர்களுக்கும் ஆண்குழந்தை பிறக்கும் என்றும் அறிக. அதே போல், கர்ப்பிணி பெண்களுக்கு வயிறு நேராக இருக்காது. இடதுபுறமோ, அல்லது வலது புறமோ சாய்ந்து இருக்கும். வயிறு இடதுபுறம் சாய்ந்து இருந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்றும், வலது புறம் சாய்ந்து இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று அறிக.

கர்ப்பிணி பெண் நடந்து போகும் போது அவளது பெயரை சொல்லி கூப்பிட்டால், அவள் வலதுபுறமாக திரும்பினால் 'ஆண் குழந்தையும் ' இடது புறமாக திரும்பினால் ' பெண் ' குழந்தையும் ' பிறக்கும் என்று அறிக.

கர்ப்பிணி பெண் படியில் ஏறும் பொழுது முதலில் அவளது வலது காலை எடுத்து வைத்தால் ' ஆண் குழந்தை ' என்றும், இடது காலை எடுத்து வைத்தால் ' பெண் குழந்தை ' என்றும் அறிக.

உடலை கஷ்டம் செய்யாமல், குழந்தைக்கு விஷ அலோபதி மருந்து கொடுக்காமல்,சிசரியன் ஆப்பரேஷன் செய்யாமல் வாழ்க...வளர்க.

ஆடாதோடா - மருத்துவ குணங்கள்

ஆடாதோடா - மருத்துவ குணங்கள்

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

கிராமப்புரங்களில் சாதாரனமாக சாலையோரங்களில் இருக்கும் பல செடிகளின் மருத்துவ குணங்கள் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

நம் முன்னோர்கள் அனைத்தையும் அறிந்து பயன்படுத்தி வந்ததால் அவர்கள் நீண்ட காலம் நோய் நொடியில்லாமல் இருந்து வந்தனர். ஆனால், இப்போது உள்ளவர்கள் அவற்றை மூலிகையாக பார்க்காமல் செடியாக பார்ப்பதால் பல்வேறு நோய்கள் தாக்குகிறது.

அந்த வகையில் ஆடாதோடாவை பற்றி நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால், எதற்கு எப்படி பயன்படுத்துவது என்று பலருக்கு தெரியாது. இப்போது அதன் மருத்துவ குணங்களையும், எப்படி பயன்படுத்துவது என்பதையும் பார்க்கலாம்.

ஆடாதோடா செடியானது மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை தடுக்கக்கூடியது. மார்பு சளியை கரைத்து வெளியேற்றும். இருமலை தடுக்கும், காய்ச்சலை குணமாக்கும்.

காய்ச்சலை குணமாக்கக்கூடிய மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள் : ஆடாதோடா இலை, மஞ்சள் மற்றும் தேன்.

செய்முறை : ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் விட்டு, கால் டீஸ்பூன் மஞ்சள், 2 டீஸ்பூன் ஆடாதோடா இலையின் சாறு சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் அந்த கசாயத்தை வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

மஞ்சள் காமாலையை கட்டுப்படுத்தக்கூடிய மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள் : ஆடாதோடா இலை, மஞ்சள் மற்றும் தேன்.

செய்முறை: 2 டீஸ்பூன் ஆடாதோடா இலையின் சாறுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து குடித்துவந்தால் மஞ்சள் காமாலை கட்டுக்குள் வரும்.

இருமல் சளி போன்றவற்றிருக்கான மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள் : ஆடாதோடா இலை, மிளகு தூள், இஞ்சி மற்றும் தேன்.

செய்முறை : பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு டீஸ்பூன் ஆடாதோடா இலை சாறு சேர்த்து, அத்துடன் மிளகுப் பொடி, இஞ்சி நறுக்கியது சிறிதளவு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வந்தால், சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

வயிற்று வலிக்கான மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்: ஆடாதோடா இலை, பனங்கற்கண்டு மற்றும் ஏலக்காய் தூள்.

செய்முறை : இரண்டு முழு ஆடாதோடா இலையை சிறு சிறு துண்டாக நறுக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு பனங்கற்கண்டு, ஏலக்காய் தூள் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் அதை வடிகட்டி  குடித்து வந்தால், வயிற்று வலி போன் பிரச்னைகள் குணமாகும்.

பிடித்திருந்தால் பக்கத்தை share & Like செய்யுங்கள்.. மட்றவர்களுக்கு பயனுறும்...!

தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாக

தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாக
இதை இரண்டு நேரமும் சாப்பிட்டாலே போதும்.

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், ஏராளமானோருக்கு தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது.

பொதுவாக தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும்.

அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும். இங்கு இந்த தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஹைப்பர் தைராய்டு:

ஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கும் நிலையாகும்.

அறிகுறிகள்:

* அதிகமாக வியர்ப்பது

* தும்மல்

* எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது

* நினைவாற்றல் பிரச்சனை

* மோசமான குடலியக்கம்

* படபடப்பு

* மன அழுத்தம்

* எடை குறைவு

* மாதவிடாய் பிரச்சனைகள்

* அதிகப்படியான சோர்வு

ஹைப்போ தைராய்டு:

ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் மோசமான செயல்பாட்டால், போதிய அளவு தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படாத நிலையாகும்.

அறிகுறிகள்:

* நகங்களில் வெடிப்பு

* மலச்சிக்கல்

* உடல் பருமன்

* தசைப் பிடிப்புகள்

* மோசமான மாதவிடாய் கால இரத்தப் போக்கு

* கழுத்தின் முன் பகுதியில் வீக்கம்

* மிகுதியான களைப்பு

* நினைவாற்றல் பிரச்சனை

* வறட்சியான சருமம் மற்றும் தலைமுடி

* மன இறுக்கம்

தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க ஓர் அற்புத நாட்டு மருந்து உள்ளது. அதை ஒருவர் உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம்.

தேவையான பொருட்கள்:

பச்சை வால்நட்ஸ் – 40

தேன் – 1 கிலோ

செய்முறை:

வால்நட்ஸ் காயை துண்டுகளாக்கி கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதில் தேன் ஊற்றி, 40 நாட்கள் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக இந்த பாட்டிலை பகலில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் வைத்து, அவ்வப்போது பாட்டிலைக் குலுக்க வேண்டும். 40 நாட்கள் கழித்து, அதில் உள்ள வால்நட்ஸ் காயை நீக்கிவிட வேண்டும்

உட்கொள்ளும் முறை:

இந்த தேனை தினமும் காலை மற்றும் மாலையில் 2 ஸ்பூன் சாப்பிட்டு வர, தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும்.

இப்போது இதன் இதர நன்மைகளைக் காண்போம்.

நன்மை – 1

இதில் வைட்டமின் சி, அயோடின் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் உட்கொண்டு வந்தால், சீக்கிரம் இரத்த சோகை நீங்கும்.

நன்மை – 2

பச்சை வால்நட்ஸை தேனில் ஊற வைத்து, அந்த தேனை தினமும் சாப்பிடும் போது கல்லீரல், வயிறு மற்றும் இரத்தம் சுத்தமாகும்.

நன்மை – 3

அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், இதை சாப்பிட்டால் பலவீனமாக இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

நன்மை- 4

மாதவிடாய் காலத்தில் அதிக பிரச்சனையை சந்திக்கும் பெண்கள், பச்சை வால்நட்ஸ் ஊற வைத்த தேனை சாப்பிட்டால், பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.

நன்மை – 5

முக்கியமாக இந்த தேன் சுவாச பாதை மற்றும் மூச்சுக் குழாயில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி, அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மூட்டு வலிகளைப் போக்கும் தேங்காய்-பேரிச்சம்பழம்

மூட்டு வலிகளைப் போக்கும் தேங்காய்-பேரிச்சம்பழம்

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

உலகில் 60 சதவிகிதம் பெண்களும் 17 சதவிகிதம் ஆண்களும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றர்கள். ஆர்த்ரட்டீஸ் என்றழைக்கப்படும் கால் மூட்டு வலி பெண்களையே அதிகம் பாதிக்கிறது. குழந்தைப் பிறப்பினால் ஏற்படும் சுண்ணச் சத்து மீண்டும் அவர்களுக்குத் தேவையான அளவு கிடைப்பதில்லை. குழந்தைகள் மற்றும் வீட்டிலிருப்போர் மிச்சம் வைக்கும் உணவையும், சிறிதளவுள்ள உணவைக் கூட தூக்கி எறிய மனமின்றி வயிற்றுக்குள் போட்டு வயிற்றை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தி அவர்களின் வயிற்றுக்கு கேடு விளைவிக்கின்றனர்.

எனவே தாய்மார்கள் மீதமான உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். தேவைக்கு அதிகமாக உணவு உண்ணக் கூடாது. இயற்கை உணவுக்கு மாற வேண்டும்.

பழங்கள் கொட்டைப் பருப்புகள் போன்றவற்றை உண்டு இழந்த சுண்ணச் சத்தைத் திரும்பப் பெறத் தாய்மார்கள் முயற்சிக்க வேண்டும்.

பேரிச்சம் பழங்களையும் தேங்காயும் காலை உணவாகத் தொடர்ந்து உண்டு வந்தால் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. எல்லாவிதமான எலும்பு வலிகளையும் குறைக்கும். எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள்கூட தேங்காயுடன் பேரிச்சம்பழங்களைக் கலந்து உண்டு வந்தால் விரைவில் குணமடையும்.

நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?

நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

1.பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள்

நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம்.

எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

2) உற்சாகமாக இருங்கள் :-

🍃சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.

🍃இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.

3. பவர்ஃபுல்லாக உணருங்கள் : -

🍃உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம்.

🍃உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள்.

🍃இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.

🍃உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.

4. லவ் பண்ணுங்க :-
உங்களை நீங்களே நேசியுங்கள்.

🍃 இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.

🍃உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.

🍃 உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள்.

🍃 உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

5. பயணப்படுங்கள் :-

🍃வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.

🍃இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும்.

🍃அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.

🍃 வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது.

🍃 ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ,
உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும்,
உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்🌼