குழந்தைகள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய பழக்கங்கள்

குழந்தைகள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய பழக்கங்கள்



















குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு சொல்லலாம் பை பை!

குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு சொல்லலாம் பை பை!



'மலச்சிக்கல்' என்பது பொதுவான பிரச்னையாக இருக்கிறது குழந்தைகளுக்கு. பள்ளிக்குச் செல்லும் போதும், வெளியிடங்களுக்குச்  செல்லும் போதும் காலையிலேயே மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத குழந்தைகளால், அவர்களை அப்படிப் பழக்கப்படுத்தாத பெற்றோர்களால் இருவருமே சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இப்பிரச்னையை சரிசெய்ய மதுரை ஆயுர்வேத மருத்துவர் ஹரிணி அளிக்கும் டிப்ஸ்....

* காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரைப் பருகக் கொடுக்கலாம்.

* இரவு ஒரு டம்ளர் தண்ணீரில், 10 உலர் திராட்சையை ஊற வைத்து காலையில் ஊறிய உலர் திராட்சையைப் பிழிந்து, அத்தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கச் செய்யலாம்.

* காலையில் வெறும் வயிற்றில் 10 உலர் திராட்சையை உண்ணச் செய்து ஒரு டம்ளர் வெது, வெதுப்பான தண்ணீர் கொடுக்கலாம்.

* மதிய உணவுக்குப் பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து நார்ச்சத்துக்கள் நிறைந்த கொய்யா, பனங்கிழங்கு போன்றவற்றை உண்ணக் கொடுக்கலாம். இது மலச்சிக்கலை அறவே தீர்க்கும்.

* மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக பாதாம்பருப்பு, பேரீச்சை, முந்திரிப்பருப்பு, பிஸ்தா போன்றவற்றை ஊற வைத்தோ அல்லது அப்படியோ சாப்பிடக் கொடுத்தால் மலச்சிக்கல் தீரும்.

* துவரம்பருப்பு வேக வைக்கும் போது, ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி, பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைக்கவும். பிறகு சாதத்தில் பருப்பை நெய் விட்டு பருப்பு சாதமாக கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.

* காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கலாம்.

* ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

* சூடான, காரமான, புளிப்பான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

* பேக்கரி உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* பரோட்டா, பீட்சா, பர்க்கர் போன்று மைதாவில் செய்யப்படும் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

இவற்றையெல்லாம் தொடர்ந்து செய்தாலே உங்கள் குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு பை பை சொல்லிவிடலாம்.

குழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா?

குழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா?



நமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறது. வளர்இளம் பருவத்தை எட்டும் சிறுவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது, பாலியல் படங்களைப் பார்க்கும் நோயாளிகளாக மாறுவது என, குழந்தைகள் சிறு பருவத்திலேயே பாலியல் குழப்பங்களுக்கு ஆளாகின்றனர். பெற்றோர் செய்வதை அப்படியே காப்பியடிப்பதும், கொஞ்சமாகத் தெரிந்த விஷயங்களை ஆர்வத்தோடு தேடித் தெரிந்துகொள்வதும் இந்த வயதின் இயல்பு.

பெற்றோர் கவனக்குறைவாகச் செய்யும் பல தவறுகள், குழந்தைகளை வேறு பாதைக்குக் கொண்டுசெல்கிறது. அவற்றில் ஒன்று, குழந்தைகள் முன்பு உடை மாற்றுவது. குழந்தைதானே அவர்களுக்கு என்ன புரியப்போகிறது என்ற எண்ணம் ஒரு பக்கம். சிறு வயதிலேயே பெண்ணுடல் பற்றித் தெரிந்துகொண்டால், அவர்களின் எண்ணத்தில் வித்தியாசம் தெரியாது என்று நினைக்கிற அம்மாக்கள் இருக்கிறார்கள்.

இது குறித்து மனநல மருத்துவர் மீனாட்சி கூறுகையில், ‘‘பச்சிளம் குழந்தையாக இருந்தாலும் ஆண், பெண் இருவருமே, அவர்கள் முன்பு டிரஸ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு ஒரு வயது ஆகும் போதே அனைத்து விஷயங்களும் தெரியும். ஒரு வயதில் இருந்தே குழந்தையின் முன்பு டிரஸ் செய்வதை கட்டாயம்  தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளின் கலாச்சாரம் வேறு., எனவே அங்கு வளரும் குழந்தைகளுக்கு உடை என்பது பெரிய விஷயமாக ஈர்ப்பதில்லை. ஆனால் நம் நாட்டு குழந்தைகள் அப்படி வளர்க்கப்படவில்லை. சமூகமும் அதுபோன்று மாறவில்லை எனும்போது நாம்தான் குழந்தைகள் முன்பு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். உடை மாற்றும்போது நம்மை பார்க்கும் குழந்தைகளின் மனதில் அதிர்ச்சி ஏற்படும். அவற்றை அவர்களால் காட்டத் தெரியாது. அவை அப்படியே தொடரும்போது பாலியல் குழப்பத்துக்கு ஆளாவார்கள்.

குழந்தைகள் தன்னைச் சுற்றி நடக்கும் சூழலில் இருந்தே பெரும்பாலான விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரும் விஷயங்களின் ரோல்மாடலாக பெற்றோரே உள்ளனர். இதை ஒவ்வொரு பெற்றோரும் மனதில் கொள்ள வேண்டும். குளிப்பது, உடுத்துவது என்று பெற்றோரின் தனிமையை குழந்தைகளுக்கு மிகச்சிறு வயதில் இருந்தே புரிய வைக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் போது ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோரான ஆண், பெண் இருவருமே குழந்தைகள் முன் முகம் சுழிக்கும் படியாக உடுத்தக் கூடாது. எந்த சூழலிலும் கண்ணியமாக உடுத்த வேண்டும். மற்றவர்கள் மனதில் உறுத்தலை ஏற்படுத்தும் படி உடுத்துவது குழந்தைகளுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகவே அமையும்.

நல்ல விஷயங்களை உங்களது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கான முன்னுதாரணமாக மாற நீங்கள் செய்ய வேண்டியது இவை தான்...

* உங்கள் குழந்தைக்கான இடங்களில் நீங்கள் அவர்களுக்கான நன்மதிப்பையும் கூட்ட கடமைப்பட்டவர்கள். குழந்தையின் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கண்ணியமாக உடுத்துங்கள். இதுவே உங்களைப் பற்றியும், உங்களது குழந்தை பற்றிய எண்ணங்களையும், மற்ற குழந்தைகள் மனதில் பதிக்க காரணமாக அமையும்.

* எவ்வளவு கோபமான சூழலிலும் உங்கள் குழந்தைகள் முன்பு கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.  பிறகு, அவர்களுக்கும் வழக்கமாக மாறிவிடும்.

* வீட்டில் கணவன், மனைவிக்குள் பிரச்னை இருந்தாலும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் குழந்தைகளிடம்  மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதைத் தவிர்க்கவும்.  இது பெற்றோர் மீது குழந்தைகளின் மதிப்பீட்டை குறைக்கும்.

* மார்டன் என்ற பெயரில் குழந்தைக்கு டைட்டாகவும், மற்றவர்கள் முகம் சுழிக்கும் படியும் உடை உடுத்திவிடும் பழக்கத்தை கை விடவும். குழந்தைகள் கம்ஃபோர்டாக பீல் பண்ணும்படி டிரஸ் செய்வதே என்றும் நல்லது.

* உங்கள் குழந்தை கண்ணாடி போன்ற பொருட்களை எடுக்கும் போது, உடனே உடைத்து விடாதே என்று சத்தம் போட வேண்டாமே. அவர்களுக்கும் அது தெரியும் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

* உங்கள் குழந்தையிடம் எந்த சூழலிலும் ‘நீ உருப்படவே மாட்ட’ என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். அது அவர்களது ஆளுமையையும், நம்பிக்கையையும் சிதைக்கும் வார்த்தை. குறைகளை மிகைப்படுத்தாமல் பாசிட்டிவாகப் பேசுங்கள்.

* வீட்டில் உங்களது குழந்தைக்கு என்று தேவையான விஷயங்கள் இருக்கட்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்களுக்கு திருடும் எண்ணம் ஏற்படும்.

* வீட்டில் உள்ள வேலைக்கார்களை நாம் மரியாதையாக நடத்த வேண்டும். நம்மையே நம் குழந்தைகள் பின்பற்றுகின்றனர். அவர்களிடம் அளவுக்கு அதிகமாக நெருக்கம் பாராட்டுவதையும் தவிர்க்கலாம். இது பின்வரும் ஆபத்துகளைத் தடுக்க உதவும்.

* உங்கள் குழந்தை வெளியில் செல்லும் போது, உங்களிடம் அனுமதி பெற்றுச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

* வீட்டில் மூடிய அறைகளுக்குள் நுழையும் போது அனுமதி பெறும் பழக்கம் அவசியம். நீங்களும் பழகிக் கொள்ளலாம்.

* புதிய சூழலையும், புதிய மனிதர்களையும் பணிவோடு அணுகும் பக்குவத்தை உங்களது குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள்.

இது போல் எந்தெந்த விஷயத்தில் உங்கள் குழந்தை பெட்டராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்களோ அதிலெல்லாம் உங்களை நெறிப்படுத்துங்கள் பெற்றோரே! 

எப்படி உடம்பைக் குறைக்கலாம்?

எப்படி உடம்பைக் குறைக்கலாம்?



எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள் !

1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.
2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.

3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.
5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.
6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.
7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.
8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.
9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.
மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே... உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன.

மரு தொல்லையில் இருந்து விடுபட எளிய வீட்டு வைத்தியம்!

 மரு தொல்லையில் இருந்து விடுபட எளிய வீட்டு வைத்தியம்!



பொதுவாக இந்த மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பின் கீழ்ப்பகுதி, முதுகு போன்ற பகுதிகளில் தான் உண்டாகின்றன. இவை சருமத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன. ஆனால் இதுபோன்ற மருக்களைப் போக்க சில எளிய வழிகளை நம் முன்னோர்கள் பின்பற்றியிருக்கின்றனர். அவைற்றைப் பின்பற்றி, மருத்துவமனைக்குச் செல்லாமல் நம்முடைய வீட்டிலேயே அவற்றை எளிதமாககப் புாக்கிக் கொள்ள முடியும். என்னென்ன பொருட்கள் மருக்களைப் போக்கும் தன்மை கொண்டவை?

இஞ்சி

ஒரு துண்டு இஞ்சியை எடுத்துத் தோல் சீவி, சிறிது தட்டிக் கொள்ளவும். அப்போது வெளியே வருகிற சாறினை மருக்களின் மேல் தேய்த்துவர வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்கள் தளர்ந்து தானாகவே உதிர்ந்துவிடும்.

வெங்காயம்

வெங்காயத்துக்கும் மருக்களைப் போக்கும் சக்தியுண்டு. வெங்காயத்தை முதல் நாள் இரவே உப்பில் ஊறவைத்துவிட்டு, அடுத்த நாள் காலையில் அதை எடுத்து மை போல அரைத்து, மருக்கள் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு உலர்ந்ததும் வெந்நீர் கொண்டு கழுவலாம். இதை இரவு தூங்கச் செல்லும் முன் அப்ளை செய்து கொண்டால், இரவு முழுக்க ஊற வைக்க முடியும்.

சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, மரு உள்ள இடத்தில் ஒற்றி ஒத்தடம் கொடுத்து வந்தால், மருக்கள் விரைவில் உதிரும்.

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயிலை தொடர்ந்து சருமத்தில் தடவி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.  அதேசமயம் டீ ட்ரீ ஆயிலை சருமத்தில் அப்ளை செய்வதற்கு முன் மரு உள்ள இடத்தை சோப்பு போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். அதற்கடுத்து டீ ட்ரீ ஆயிலைத் தடவலாம்.  ஆயில் தடவும் இடத்தில் சிறிது நேரம் எரிச்சல் உண்டாகும். இதை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்தால் போதும் மிக விரைவில் மருக்கள் இருந்த சுவடே தெரியாமல் உதிர்ந்துவிடும்.

பூண்டு

பூண்டு சாறினை எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வர, அவை விரைவில் மறைய ஆரம்பிக்கும். இதை ஒரு நளைக்கு மூன்று வேளையும் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.

புதிதாக மருக்கள் ஏற்படாமல் இருக்க

மரு மருக்களை நீக்கவும், புதிதாக மருக்கள் ஏற்படாமல் இருக்கவும் வாழைப்பழத் தோல் பெரிதும் உதவி புரியும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் வாழைப்பழத் தோலை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். வாழைப்பழத் தோலை சருமத்திற்கு பயன்படுத்த எளிமையான வழியாக இது விளங்குகிறது.

பருக்கள் வாழைப்பழத் தோலைக் கொண்டு முகம் மற்றும் உடலில் தினமும் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அது பருக்களை குணப்படுத்தும். அதுவும் ஒரு வாரத்திலேயே பலனை அனுபவிப்பீர்கள். மேலும் பருக்கள் நீங்கும் வரை இதனை தொடரவும்.

சுருக்கம் வாழைப்பழத் தோல் சருமத்தை நீர்ச்சத்துடன் விளங்க வைக்கும். அதற்கு மசித்த வாழைப்பழத் தோலில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி ஐந்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் நீரில் முகத்தை கழுவவும்.

சிரங்கு சிரங்கு போன்ற சரும அழற்சி ஏற்பட்ட இடங்களில் வாழைப்பழத் தோலை தேய்க்கவும். ஏனெனில் இதில் ஈர்ப்பத குணமும், அரிப்பை நீக்கும் குணமும் உள்ளது. அதனால் இவ்வகை அழற்சியை வேகமாக குணப்படுத்தி, நல்ல முன்னேற்றத்தை விரைவிலேயே காண்பீர்கள்.

பூச்சிக் கடிகளுக்கு மருந்து கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் வாழைப்பழத் தோலை கொண்டு மசாஜ் செய்தால், உடனடி நிவாரணி கிடைக்கும். மேலும் அரிப்பும், வலியும் உடனடியாக நீங்கும்.

புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பு வாழைப்பழத் தோல் கண்களை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும். அதற்கு அதை கண்களில் தடவும் முன் சூரிய ஒளியில் சிறிது நேரம் வைக்க வேண்டும். மேலும் இது கண்ணில் புரை ஏற்படும் ஆபத்தை குறைக்கும்.

தினமும் 3 நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்

தினமும் 3 நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்


 தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.

தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.

நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.

உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம்.

காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.

காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது.

உடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.

உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.

இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் - சக்தி உருவாகும்.

உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம்.

 உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை.

 இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.

ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.

உடல்உ றுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்

உடல்உ றுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்

உங்களுக்கு என்ன நோய்? உடல்உ றுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

நோய் அறிகுறி



1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....?

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி...?

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..

4. கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி...?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

5. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி...?

இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும்,பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

6. முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி....?

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

7. தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி...?

கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

8. பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென
உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி...?

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

9. பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி...?

நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

10. பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி...?

தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

11. சிவந்த உள்ளங்கை என்ன வியாதி...?

கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும்.உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

12. வெளுத்த நகங்கள் என்ன வியாதி....?

இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின் படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

13. விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி...?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்குமட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

14. நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி...?

சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
www.kkrhealthcare.blogspot.com
16. வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி....?

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும்எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

17. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி....?

வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

18. வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி....?

உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

உங்கள் குழந்தைகளிடம் இந்த 19 விடயங்களில் கவனம் வையுங்கள்!

உங்கள் குழந்தைகளிடம் இந்த 19 விடயங்களில் கவனம் வையுங்கள்!



1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.

2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு
துணை புரியும்.

3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்
உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?
நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள்
அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.

4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்
டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள்.  ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.

5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள்.
அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும்.
சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய் அமையும் .

6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக
கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள்.
அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை மனக் கவலைகளை நீக்கி  உங்கள் மீது அவர்களையறியாத
ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.

7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள்.  ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.

8. உண்மை, நேர்மை,  துணிவு,  விட்டுக் கொடுத்தல், மன்னித்தல்,  அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை  ஊட்டுங்கள்.

9. பொய், ஏமாற்று,
திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.

10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள்.
பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.

11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள்.
கல்வியின் முக்கியத்துவம்,
ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.

12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள்.
பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.
அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.

13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள்.
அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.

14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்
படுத்துங்கள்;
அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.

15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;
கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.

16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும்.
அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள்.
குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது
(பயந்த  சுபாவத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும்,  சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள்.
இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.

குறிப்பு:
நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துகளாலும் மருத்துவ முறைகளாலும் நிரந்தரமான  தீர்வை தர இயலாது.

காய்ச்சலின் போது நீங்கள் சாப்பிடக் கூடாத உணவுகள் எவை?

காய்ச்சலின் போது நீங்கள் சாப்பிடக் கூடாத உணவுகள் எவை?





நோய் வாய்ப்பட்ட பொழுது சில உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும். அதே போல் சில உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்த உணவு வரிசை நோயைப் பொருத்து மாறுபடும்

உடல் நிலை சரியில்லாத பொழுது நம்முடைய உடல் மட்டுமல்ல, மனதும் சோர்வாக காணப்படும். அப்பொழுது நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் உங்களுடைய உடலுக்கு ஆரோக்கியத்தை மீட்டுத் தருவதுடன் உங்களுடைய மன நலத்தையும் பாதுகாக்கின்றது. இங்கே நாம் குறிப்பாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் பொழுது தவிர்க்க வேண்டிய உணவுவகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வைரஸ் காய்ச்சலின் போது தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி தெரிந்து கொண்டு, நீங்கள் உங்கள் நோயின் அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்கலாம். மேலும், இதைப் பின்பற்றுவது நீங்கள் நோயின் தீவிரத்தில் இருந்து வேகமாக விடுபட உதவும். இங்கே, நாங்கள் உங்களுக்கு உதவுவதற்காக், நீங்கள் வைரஸ் காய்ச்சலின் போது தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி தெரிவித்துள்ளோம். அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பால் பால் நுரையீரலில் சளி உற்பத்தியை அதிகரிக்கின்றது. எனவே, நீங்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் போது பால் உட்கொள்ளுவதை தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. பால் உங்களுடைய மூச்சு விடுதலை கடினமாக்கிவிடுகின்றது. மேலும் இது மார்பு எரிச்சல் மற்றும் மூக்கு அடைப்பை ஏற்படுத்துகின்றது

சிவப்பு இறைச்சி வைரஸ் காய்ச்சலின் போது, உங்களுடைய செரிமான அமைப்பு வழக்கம் போல் செயல்பட முடியாமல் போகலாம். சிவப்பு இறைச்சி ஜீரணிக்க எளிதானது அல்ல. இதை ஜீரணிக்க உங்களுடைய உடல் அதிகம் சிரமப்படும். இதை எடுத்துக் கொள்ளும் பொழுது, நீங்கள் உங்களுடைய உடலை அதிக வேலை செய்வதற்கு கட்டாயப்படுத்துகின்றீர்கள். வது போன்றதாகும். எனவே இதைத் தவிர்த்து அதிக ஓய்வு எடுத்துக் கொண்டு, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

காரமான உணவுகள் காரமான உணவுகள், நீங்கள் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட போது கட்டாயம் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. எனவே எளிதாக செரிமானம் ஆகக்கூடிய மற்றும் உடலினால மிக எளிதாக உறிஞ்சப்படக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காரமான உணவுகளுக்கு பதில் உடலுக்கு அதிக ஆற்றலைத் தரும் மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எண்ணெய் / பொரித்த உணவுகள் நீங்கள் மொத்தமாக எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்தால் உங்களுடைய செரிமான அமைப்பு உங்களுக்கு என்றென்டும் நன்றியுடன் இருக்கும். எனவே சந்தேகமே இல்லாமல் நீங்கள் வைரஸ் காய்ச்சலால் அவதிப்படும் போது இதை நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் உடல் உணவு செரித்தலுக்கு அதிக ஆற்றலை செலவளிப்பதை விட வைரஸ் தொற்றுக்கு எதிராக போராட அதிக ஆற்றலை செலவிடத் தொடங்கும்.

சீஸ் பாலாடைக்கட்டி நீங்கள் காய்ச்சலால் அவதிப்படும் போது சாப்பிடக்கூடாத ஒரு தவறான உணவாகும். இதை உட்கொள்வதன் மூலம் நுரையீரலில் அதிக சளி உற்பத்தியாகி, மார்பு எரிச்சலுக்கு வழி வகுக்கும்.

டீ / காபி நீங்கள் படுக்கையை ஓய்விலிருக்கும் போது டீ அல்லது காபி அருந்த வேண்டும் என்கிற மயக்கம் உங்களுக்கு ஏற்படலாம். ஆனால், இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது ஒரு வலுவான டையூரிடிக் ஆகும். இதை அருந்துவதன் மூலம் உங்களின் உடலில் இருந்து தண்ணீர் வெளியேறி உடலில் நீரிழப்பு ஏற்பட்டு விடும்.

வியர்வை செய்யும் மாயாஜாலம் ,

வியர்வை  செய்யும்  மாயாஜாலம் ,

வியர்வை வெளியேறுவதனால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. அதிலும் அந்த வியர்வையானது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதனாலோ அல்லது வெயிலில் நடந்து செல்வதாக இருந்தாலோ, எந்த வழியில் வியர்வை வெளியேறினாலும் அது நல்லது தான்.

வியர்வை வெளியேறுவது என்பது உடலின் தீவிர செயல்பாட்டின் ஓர் அறிகுறி. இந்த வியர்வையின் மூலம் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேறும். அதுமட்டுமின்றி வேறு சில நன்மைகளும் வியர்வை வெளியேறுவதன் மூலம் கிடைக்கிறது. இப்போது வியர்வை எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

இதயம்

வியர்வை வெளியேற்றத்தின் போது, உடலில் மற்றும் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும்.
மனநிலை
மேம்படும் உடற்பயிற்சி செய்து வியர்வை வெளியேறும் போது மனநிலையை மேம்படுத்தி, சந்தோஷமாக உணர வைக்கும் எண்டோர்பின் ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது.

விச தன்மைகள் வெளியேறும்,

வியர்வை மூலம் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்படுவதால், உடல் சுத்தமாவதோடு, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளும் வெளியேறி சருமமும் பொலிவோடு இருக்கும்.
சிறுநீரகம் வியர்வை
அதிகம் வெளியேறினால் சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கலாம். எப்படியெனில் வியர்வையின் மூலம் உடலில் உள்ள உப்புக்கள் வெளியேறி, எலும்புகளில் கால்சியம் தக்க வைக்கப்படும். இதன் மூலம் சிறுநீரகங்களில் உப்பு மற்றும் கால்சியம் படிந்து கற்களாக உருவாவதைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி வியர்வை அதிகம் வெளியேறினால், தண்ணீர் அதிகம் குடிக்க தோன்றும். இப்படி தண்ணீர் அதிகம் குடிப்பதால், சிறுநீரகங்களின் செயல்பாடும் மேம்படும்.

காயங்கள் குணமாகும்

சமீபத்திய ஆய்வு ஒன்றில், வியர்வைக்கும், காயங்கள் குணமாவதற்கும் சம்பந்தம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு வியர்வையானது ஆன்டி-பயாடிக்ஸை உடல் முழுவதும் பரப்பி, நுண் கிருமிகளிடமிருந்து நல்ல பாதுகாப்பு அளிப்பதே காரணம்.
உடல் வெப்பநிலை சீராகும்
வியர்வை வெளியேறுவதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக இருக்கும்

நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்

வியர்வைக்கும் நோயெதிர்ப்பு சக்திக்கும் சம்பந்தம் உள்ளது. அதனால் தான் காய்ச்சல் இருக்கும் போது வியர்வை வெளியேறினால், உடனே காய்ச்சல் குணமாகிறது. 

தினமும் காலை உணவாக முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் காலை உணவாக முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்



 தினமும் காலை உணவாக வெறும் மூன்று முட்டையை மட்டும் சாப்பிட்டு வந்தால், நமது உடலில் ஏற்படும் அற்புத நன்மைகள் இதோ

முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.

    முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது.

    முட்டை லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டு பொருட்களை அதிகமாக கொண்டுள்ளதால், இது நமது கண்களின் கருவிழி செயலிழப்பு மற்றும் கண்புரை நோய்களை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்குவதற்கு உதவுகிறது.

    முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.

குறிப்பு
எடையை குறைக்க டயட் இருப்பவர்கள் காலை உணவாக 3 முட்டை சாப்பிடுவதுடன் தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தால், விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

சிறுநீரகம் காக்கும் சுரைக்காய் !

சிறுநீரகம் காக்கும் சுரைக்காய் !


        மனிதனின்  உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது.  காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.

நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர்.  அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.

சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள்.  அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

Tamil    - Suraikai

English    - Bottle gourd

Sanskrit    - Tumbini

Telugu    - Sorakaya

Malayalam     - Titalauki

Botanical name - Lagenaria siceraria

வாதபித்தம் வாயருசி வன்பீரி கஞ்சீதம்

ஓதிருத்து நோயுமுண்டாம் உள்ளனல்போம்-ஓதத்
திருப்பாற் கடற்றிருவே தீக்குணத்தை மேவுஞ்
சுரக்காயைத் தின்பவர்க்குச் சொல்

-அகத்தியர் குணவாகடம்

பொருள் - உடல் சூடு தணியும், சிறுநீர் நன்கு வெளியேறும், குளிர்ச்சியுண்டாக்கும், உடலுக்கு உரத்தைக் கொடுத்து பித்தத்தைச் சமப்படுத்தும்.

உடல் சூடு நீங்க

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும்.  இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும்.  இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர்.  சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

சிறுநீர் பெருக

மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும்.  சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது.  சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது.  இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.

பித்தத்தைக் குறைக்க

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.  இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

· உடலை வலுப்படுத்தும்.

· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.

· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

· குடல் புண்ணை ஆற்றும்.

· மலச்சிக்கலைப் போக்கும்

· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து  சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு  ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும்.  காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து  வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

கொதிக்கும் நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மை !

கொதிக்கும் நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மை !



கொதிக்கும் நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மை:-
உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது சூழ்நிலையில் மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, இயற்கை வழிகளை நாடினால் நல்ல பலன் கிடைக்கும்.
மஞ்சள் தூள் கலந்த துளசி நீர். இந்த நீரில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.

பானம் தயாரிக்கும் முறை :-

ஒரு பாத்திரத்தில் நீரில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கினால் பானம் ரெடி!
 சளி குணமாகும் அடிக்கடி சளி பிடிப்பவர்கள் இந்த நீரை குடித்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்கள் நுரையீரலில் உள்ள அழற்சி மற்றும் சளித் தேக்கத்தைக் குறைத்து, சளி பிடிப்பதைத் தடுக்கும் ஆஸ்துமா துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்க உதவும். சிறுநீரகம் சுத்தமாகும் இந்த இயற்கை பானம் சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். மன அழுத்தம் நீங்கும் துளசி பானத்தை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் அமைதியாகி, மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கல் நீங்கும் நீங்கள் அடிக்கடி மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டு வந்தால், இந்த பானம் குடலியக்கத்தை மேம்படுத்தி அப்பிரச்சனையை உடனடியாக தடுக்கும். அசிடிட்டி குறையும் துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி பிரச்சனையைக் குறைக்கும்.
அல்சர் சரியாகும் இந்த இயற்கை பானத்தில் உள்ள மருத்துவ குணங்கள், வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்து, அல்சர் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்?

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்?



நமது முனிவர்கள் நமக்கு வழங்கிய இவ்வொழுங்கு முறையை அண்மையில் மேல் நாட்டவர் முழுமையாக அங்கீகரித்துள்ளனர்.
நம் உடலைச் சுற்றும் இரு காந்த வளையங்கள் உள்ளன. இவையில் முதலாவதானது காலிலிருந்து தலைக்கும் தலையிலிருந்து காலுக்கும் வலம் வருகின்றது. இரண்டாவது காந்த வளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின்பாகம் வழியாக இடதுபக்கமும் வலம் வருகின்றது. காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையம் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன.

எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தளர்வடையச் செய்யும். எனவே உடல் வலது பக்கம் திரும்பி எழும்புவது காந்த வளையத்தின் சுருள்களை இறுகச் செய்யும் என்பது நவீன மின்இயல் ஒப்புக்கொள்கின்றது.

வாய் துர்நாற்றம், ஈறு நோய்கள், சொத்தைப் பற்கள்

உடல்நலம் வாய் துர்நாற்றம், ஈறு நோய்கள், சொத்தைப் பற்கள் போன்றவற்றிற்கான சில எளிய தீர்வுகள்!




உடல்நலம்
வாய் துர்நாற்றம், ஈறு நோய்கள், சொத்தைப் பற்கள் போன்றவற்றிற்கான சில எளிய தீர்வுகள்!

ஒருவருக்கு வாய் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. வாய் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இல்லாவிட்டால், அதனாலேயே நிறைய உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு தினமும் இரண்டு வேளை பற்களை துலக்கினால் மட்டும் போதாது. உணவை உண்டவுடன் வாயை கொப்பளிக்கவும் வேண்டும். மேலும் வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க ஒருசில இயற்கை பொருட்களால் வாயைப் பராமரிக்க வேண்டும்.
இயற்கைப் பொருட்கள் கொண்டு வாயைப் பராமரித்தால், வாயில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யலாம். குறிப்பாக பல் கூச்சம், மஞ்சள் நிற பற்கள், வாய் துர்நாற்றம், ஈறுகளில் இரத்தக்கசிவு, பல் சொத்தை போன்ற பல பொதுவான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சில செயல்களைப் பின்பற்ற வேண்டும்.

பேக்கிங் சோடா - பல் கூச்சம்
உங்களுக்கு அடிக்கடி பல் கூச்சம் ஏற்படுகிறதா? வாயில் pH அளவு குறைவாக இருப்பதன் காரணமாக பற்களின் எனாமல் தேய்ந்து, பல் திசுக்கள் வெளிப்படுவதால் பல் கூச்சம் ஏற்படுகிறது. இப்படி ஏற்படும் பல் கூச்சத்தை பேக்கிங் சோடா கொண்டு சரிசெய்ய முடியும். அதற்கு ஒரு டம்ளர் நீரில் 1 சிட்டிகை பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு 2 வாரத்திற்கு ஒருமுறை வாயைக் கொப்பளிக்க பல் கூச்சத்தில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய் - ஈறுகளில் இரத்த கசிவு
ஆயுர்வேதத்தின் படி, நீரிழிவு, ஆஸ்துமா, ஈறுகளில் இரத்தக்கசிவு, மஞ்சள் பற்கள் போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆயில் புல்லிங் உதவுவதாக சொல்லப்படுகிறது. அதற்கு தினமும் காலையில் பற்களைத் துலக்கும் முன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி 4-5 நிமிடம் கொப்பளித்து துப்ப வேண்டும். இம்முறையால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

வேப்பிலை - ஈறு நோய்கள்
வேப்பிலையில் ஆன்டி-மைக்ரோபியல், பூஞ்சை எதிர்ப்புப் பொருள் போன்றவை ஏராளமாக உள்ளது. அதனால் தான் நம் முன்னோர் அக்காலத்தில் பற்களைத் துலக்குவதற்கு வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி வந்தனர். இக்காலத்தில் மரங்களைக் காண்பதே அரிதாக உள்ளது. அதிலும் வேப்ப மரம் கிடைத்தால், வேப்பங்குச்சியைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்குங்கள் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரால் தினமும் மூன்று வேளை வாயைக் கொப்பளித்து வாருங்கள்.

படிகாரம் - வாய் துர்நாற்றம்
பலருக்கும் வாய் துர்நாற்ற பிரச்சனை இருக்கும். இப்பிரச்சனைக்கு இயற்கை வழியில் நல்ல தீர்வு காண, ஒரு டம்ளர் நீரில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, அதில் 1/4 டீஸ்பூன் படிகாரத்தை சேர்த்து வடிகட்டி, அதைக் கொண்டு வாயைக் கொப்பளித்து வர, வாய் துர்நாற்றம் தடுக்கப்படும். எப்படியெனில் படிகாரமானது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் டாக்ஸின்கள் மற்றும் அமிலங்களைத் தடுக்கும்.

வெந்தயக்கீரை - வாய் புண்
ஒரு கப் நீரில் சிறிது வெந்தயக்கீரையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு, அந்நீரால் வாயை தினமும் கொப்பளித்து வர, வெந்தயக்கீரையில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை, வாய்ப் புண்ணை சரிசெய்வதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

உப்பு தண்ணீர் - தொண்டைப் புண்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் உப்பு சேர்த்து, தினமும் காலையில் வாயைக் கொப்பளித்து வர, வாய் மற்றும் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து, வெளியேற்றப்பட்டு, தொண்டைப்புண் குணமாகும்.

சுண்டை வற்றல்

சுண்டை வற்றல்


சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும். சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும். சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

வலிகள் வருவது ஏன்?

வலிகள் வருவது ஏன்?



ஒரு அன்பர் கேட்டிருந்தார்: “ஏன் தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் மட்டும் அதிகமான சாமியார்கள் உபதேசம் செய்கிறார்கள்? ஐ.டி. வளர்ச்சிதான் காரணமா? ”

“வரலாறும் பண்பாடும் மறக்கையில் ஆன்மீக வறுமை ஏற்படும். மேம்போக்கான வாழ்க்கை விரக்தியில் முடியும். அது உடல் வலிகளாலும் உபாதைகளாலும் தொடர்ந்து வெளிப்படும். அது வாழ்வியல் பிரச்சினை என்று உணரும்போது மருத்துவர்களை விட இவர்களை நாடிச்செல்லுதல்தான் இயற்கையாய் நடக்கும்” என்று அவருக்குத் தெரிவித்தேன்.

சாமியார்களின் பங்கு

எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் சாமியார்கள் நம் சமூகத்துக்கு ஒரு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். “வலிகள் உடற்காரணங்களால் வருவதல்ல” என்னும் விழிப்புணர்வுதான் அது. அதே போல யோகா மற்றும் ஆயுர்வேதத்தை எளிமைப்படுத்தி நம் மக்களிடம் பரப்பியதும் மகத்தான பணி.

வலி என்றவுடன் உடனேயே மாத்திரையை எடுத்து விழுங்குவதற்குப் பதில் “ஏன் இந்த வலி? ” என்று யோசிக்க வைப்பது முக்கியம். வலிகளுக்கு மருத்துவச் சிகிச்சை எடுப்பது தவறில்லை. சில நேரங்களில் அது ஒன்றுதான் தீர்வாகக்கூட இருக்கும். ஆனால் வாழ்க்கை முறையாலும் சிந்தனைகளாலும் நாம் எப்படி இந்த வலிகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கிறோம் என்று அறிய முயல்வது அவசியம்.

வலிகள்

பணியிடத்தில் உற்பத்திக் குறைவுக்கும், வேலைத்திறன் குறைவுக்கும், விடுப்புகள் அதிகரிப்பதற்கும், சக பணியாளர்களிடம் உறவுச் சிக்கல்கள் ஏற்படுவதற்கும் வலிகள் முக்கியமானக் காரணம் எனத் தொழில் உளவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பணி சார்ந்த வலிகள் கிட்டத்தட்ட எல்லாருக்கும் உண்டு. உடலின் பகுதிகள் யாவும் சீராக இயங்க நாம் விடுவதில்லை. ஒரு சில பகுதிகளை அளவுக்கு அதிகமாகவும் பல பகுதிகளை முற்றிலும் பயன்படுத்தாமலும் உடலை வதைக்கிறோம்.

இதனால்தான் வேலையில் நிற்பவர்கள், நடப்பவர்கள், உட்காருபவர்கள் என அனைவருக்கும் ஏதோ ஒரு சில வலிகள் நிச்சயம் உண்டு. நாம் மடக்கி விரிக்காத பகுதிகள் உடலில் நிறைய உண்டு. அவை தன் இருப்பைத் தெரிவிக்க வலிகளாக மாறுவதைத் தவிர வேறு வழியில்லை.

அபாயமான வேலை

வேலைகளிலேயே அபாயகரமான வேலை ஒரே இடத்தில் அமர்ந்து 8 மணி நேரம் செய்யும் வேலை.

“ Sitting is injurious to health!” என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். இன்று சேவைத் துறையில் பணி புரியும் லட்சக்கணக்கான மக்களின் பிரச்சினை இதுதான். வேலை மட்டுமல்ல. நம் பயணமும் உட்கார்ந்தவாறே நடக்கிறது. பெரு நகரங்களில் இவை 2, 3 மணி நேரங்கள் எனக் கொள்ளலாம். வீட்டிற்குச் சென்றபின்பு கூட சேரில் உட்கார்ந்து சாப்பிட்டு, சோஃபாவில் உட்கார்ந்து டி.வி. பார்த்து, படுக்கையில் விழும் வரை அனைத்தும் உட்காரும்நிலைதான்.

அதனால் விழித்திருக்கும் சுமார் 18 மணி நேரத்தைப் பலர் உட்கார்ந்தே கழிக்கிறோம். இந்த உட்காரும் நிலையினால்தான் கழுத்து, முதுகு மற்றும் மூட்டு வலிகள் இன்று மலிந்து விட்டன.

பாதியில் விடுவோர்

பணியாளர்கள் இன்னொரு உளவியல் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். “இந்த வேலை என்றால் கண்டிப்பாக இந்த வலி வரும். ஒன்றும் செய்ய முடியாது!” என்று மனதளவில் கைவிட்டு விடுகிறார்கள். அதனால் வலிகளைப் பூரணமாக தீர்ப்பதற்குப் பதிலாக நிவாரணம் தேட ஆரம்பிக்கிறார்கள்.

வலி வந்தவுடன் உடற்பயிற்சி பற்றிச் சிந்திப்பவர்கள் முதலில் ஜிம்மிற்கு பணம் கட்டுவார்கள். விலை உயர்ந்த டிராக்ஸ் வாங்குவார்கள். பிறகு ஜிம்மிற்குப் போக மாட்டார்கள். வீட்டில் உடற்பயிற்சி சைக்கிள் வைத்திருப்பவர்கள் பலர் அதில் துணி காயப் போடுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வருகின்றன! வாக்கிங் ஆரம்பித்த ஆசாமிகளில் வயதானவர்களே தொடர்ந்து நடக்கிறார்கள். யோகா, தாய்ச்சி, கராத்தே மற்றும் குருமார்கள் வகுப்புகளில் சேர்பவர்களிலும் பாதியில் விடுபவர் எண்ணிக்கைதான் அதிகம்.

இவை அனைத்திற்கு மூல காரணம் சோம்பல் மற்றும் ஊக்கமின்மை. அதனால் அதைச் சரி செய்கையில் மற்றவை சித்திக்கும்.

சூரியன் உதிக்காத வானம்

பசித்தபோது மட்டும் உண்ணுங்கள். குறைவாக, தேர்ந்து சாப்பிடுதல் நலம். செயற்கை உணவுகள் தவிர்த்து கூடுமான அளவு இயற்கை உணவுகள் தேடிப்போனால் கிடைக்கும். பணியிடத்திலும் உண்ண முடியும். இரவு உணவை எவ்வளவு முன்னதாக உண்ண முடிகிறதோ அவ்வளவு நலம்.

படுக்கையில் டி.வியை அணைத்து விட்டு முழு இருட்டில் விரைவில் தூங்குங்கள். மொபைலை ம்யூட் பண்ணிவிட்டு உறங்குங்கள். ஒபாமாவே போன் பண்ணினாலும் பரவாயில்லை. குடி முழுகிப் போய்விடாது. சூரியன் உதிக்காத வானம் பார்க்க முடிந்தால் நீங்கள் பாக்கியவான். அதிகாலைக் காற்றின் தன்மையை உணருங்கள். பிறகு நீங்களே அந்த நேரத்தைத் தவறவிட மாட்டீர்கள்.

மலையேற்றம்

எந்தப் பணியாக இருந்தாலும் இரண்டு மணி நேரத்திற்கு இரண்டு நிமிடங்களாவது ஓய்வு எடுத்து நடந்து வாருங்கள். பணி இல்லாத வேறு சிந்தனைகளை ஊக்கப்படுத்துங்கள். இடைவேளை நேரத்தில் உண்ண பழங்கள், பால் கலக்காத பானம் எனத் தேர்ந்தெடுக்கலாம்.

நம்பிக்கையைத் தூண்டும் மனிதர்கள், புத்தகங்கள், சூழ்நிலைகளைத் தேர்ந்தெடுங்கள். நகைச்சுவை உணர்வைக் கை விடாதீர்கள். வாரக் கடைசியில் குன்று இருக்கும் கோயிலுக்கோ, ஒரு காட்டுக்கோ, நண்பரின் ஊருக்கோ போக அவசியம் முயலுங்கள். மலை ஏற்றத்தைவிடச் சிறந்த பயிற்சி எதுவுமில்லை.

வலியின் வழி

உங்கள் உடலோடு தொடர்ந்து பேசுங்கள். வலி மனிதனை யோசிக்க வைக்கிறது. அவனை அவனுக்கு உள்ளே பார்க்க வைக்கிறது. அதற்குப் பயந்தோ, சோம்பல்பட்டோ அவன் உள்ளே பார்க்க மறுக்கும்போதும் அது தொடர்ந்து தன் கடமையைச் செய்கிறது. பணியிடமோ, வீடோ வலியை மறக்காதீர்கள். வலி பற்றி யோசியுங்கள்.

வலி வாழ்வின் உன்னதங்களை உணர்த்தும் வழி!

சருமத்தில் உள்ள முடியை நீக்கும் குளியல் பவுடர்

சருமத்தில் உள்ள முடியை நீக்கும் குளியல் பவுடர்


இன்றைய காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி அடைகின்றனர். இதனால், உடலில் அநாவசிய ரோமங்கள் அதிகமாகி விடலாம். இந்த ரோமங்களை நீக்குவதோடு, மேலும் வளரவிடாமல் தடுக்க, விசேஷமான ஒரு குளியல் பவுடர்...

பயத்தம் பருப்பு - அரை கிலோ,
சம்பங்கி விதை - 50 கிராம்,
செண்பகப்பூ-50 கிராம்,
பொன் ஆவாரம் பூ - 50 கிராம்,
கோரைக்கிழங்கு - 100 கிராம்.

இவற்றை பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும், குளிக்கும்போது இந்தப் பவுடரை குழைத்துப் பூசுங்கள். மெழுகு போல் சருமம் மிளிரும்.

எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும்?

ஒவ்வொரு கிழமைகளுக்கும் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்க்கும் சம்பந்தம் உண்டாம். மேலும் எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் என்ன உண்ணலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும்? –  அனைவரும் தெரிந்து கொள்ள பகிரவும்.



ஞாயிறு —  சூரியன்

கோதுமையினால் ஆன உணவை உண்ணலாம்.
சிம்ம ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம்,

சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா,

மாதுளை ஜூஸ்,   கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார்.

திங்கள் — சந்திரன்

பால் சம்மந்தமான உணவு – கடக  ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி,

பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல்,

தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.

செவ்வாய் — செவ்வாய்

துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,

பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,,தர்பூசணி ஜூஸ்,,

தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை.

மேஷ, விருச்சிக   ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

புதன் —  புதன்

கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம்,

பாவக்காய் கொத்சு,  முருங்கைக் காய் சூப்,

பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி,

வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.

மிதுனம், கன்னி ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

வியாழன் — குரு

சுக்கு காபி,அல்லது கஷாயாம், சோளம்,

கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை,

தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல்,

சாத்துக்குடி, மாம்பழஜூஸ்,,பொங்கல்,

கதம்பதயிர் , எலுமிச்சை சாதம்,

மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.

தனுசு, மீன   ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

வெள்ளி — சுக்கிரன்

பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா,

தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட்,

முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ்,

கம்பு தோசை,அவியல், தயிர், கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல்,

நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு  சாலட்.

ரிஷபம், துலா ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

சனி — சனி

எள் உருண்டை, ஜிலேபி, அதிரசம்,

சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல், எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம், மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம்,

புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு,

நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ், பாதாம் , முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.

மகரம், கும்ப ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

மயக்கம் வருவது ஏன்?

மயக்கம் வருவது ஏன்?



மயக்கத்தில் பல வகை உண்டு. காதல் மயக்கம், இசை மயக்கம், இயற்கை மீது மயக்கம், புத்தக வாசிப்பில் மயக்கம் போன்ற மனம் சார்ந்த மயக்கங்கள் வாழ்க்கையை ரசிப்பதற்கு உதவுவதால், அவற்றை வரவேற்கிறோம். அதே வேளையில் நாம் நன்றாக இருக்கும்போதே திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு மூளை வேலைநிறுத்தம் செய்ய, தடாலடியாகக் கீழே சாய்ந்து விழும் உடல் சார்ந்த மயக்கத்தை யாரும் விரும்புவதில்லை.

மயக்கத்தின் வகைகள்

உடல் சார்ந்த மயக்கத்தில் `குறு மயக்கம்' (Fainting/Syncope), ‘நெடு மயக்கம்’ (Unconsciousness) என இரு வகை உண்டு. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடங்களிலும் அலுவலகங்களிலும் திடீரென்று யாராவது மயக்கமடைந்து தரையில் விழுவதைப் பார்த்திருப்பீர்கள். குறிப்பாகப் பள்ளிகளில் காலை இறைவணக்கம் நிகழ்ச்சி நடைபெறும்போது மாணவர்கள், இவ்வாறு மயக்கமடைவது வழக்கம். இதைக் `குறு மயக்கம்’ என்கிறோம்.

ஏற்படுவது எப்படி?

மூளைக்குத் தேவையான ரத்தம் செல்லத் தடை உண்டாவதுதான் குறு மயக்கம் ஏற்பட அடிப்படைக் காரணம். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது. மயங்கித் தரையில் விழுந்ததும் ரத்த ஓட்டம் சரியாகிவிடுகிறது. இதனால் மயக்கமும் சரியாகிவிடுகிறது.

காரணம் என்ன?

காலை உணவைச் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவது முதல் காரணம். இதனைப் 'பசி மயக்கம்' என்று கூறுகிறோம். இரவுத் தூக்கம் தேவையான அளவுக்கு இல்லாதது அடுத்த காரணம். ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்பது மூன்றாவது காரணம். குறிப்பாக, வெயிலில் நீண்ட நேரம் நின்றால் மயக்கம் வரும். உடல் சோர்வு, இந்த மயக்கத்தை வரவழைக்கும்.

அளவுக்கு அதிகமாக விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, ஓடுவது போன்றவற்றாலும் குறு மயக்கம் வரலாம். உணவு புரையேறுதல், தொண்டை அடைத்துக் கொள்ளுதல் ஆகிய காரணங்களும் இவ்வகை மயக்கத்தை வரவேற்கும். மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள, காற்றோட்டம் குறைந்த இடங்களில் அதிக நேரம் இருந்தாலும் இந்த மயக்கம் வருவதுண்டு.

உளவியல் காரணங்கள்

வீட்டுப் பாடங்களை முடிக்காமல் பள்ளிக்கு வருவதால் ஏற்படும் பயம், தேர்வு பயம், ஆசிரியர் மீதான பயம், பதற்றம், மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் குறு மயக்கம் ஏற்படுவதுண்டு.

மனக் கவலை, இழப்பு, சோகம், திகில், அதிர்ச்சி போன்ற உளவியல் காரணங்களால் வயதில் பெரியவர்களுக்குக் குறு மயக்கம் ஏற்படுகிறது. இறப்பு, இழப்பு போன்ற அதிர்ச்சி தரும் செய்திகளைக் கேட்டதும் மயக்கம் வருவது, இதற்குச் சரியான எடுத்துக்காட்டு. நீண்ட நேரம் அழும்போது ஏற்படும் குறு மயக்கமும் இதைச் சேர்ந்ததுதான். மரணம் அடைந்தவர் வீடுகளில் பெண்கள் மயக்கம் அடைவது, இதற்குப் பொருத்தமான ஓர் உதாரணம். சிலருக்கு ரத்தத்தைப் பார்த்தாலே மயக்கம் வரும். ரத்தப் பரிசோதனைக் கூடங்களில் ரத்தம் எடுக்கப்படும்போது, சிலர் மயங்கி விழுவதைப் பார்த்திருப்பீர்கள்.

நோய்களும் காரணமாகலாம்

இடைவிடாத இருமல் சில நிமிடங்களுக்கு நீடிக்கும்போது, வேகமாக எழுந்திருக்கும்போது இந்த மாதிரி குறு மயக்கம் ஏற்படுவதுண்டு. நீண்ட நேரம் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குச் சிறுநீர் கழித்து முடித்ததும் மயக்கம் வரும். கழுத்து எலும்பில் பிரச்சினை உள்ளவர்கள் தலையை ஒரு பக்கமாகச் சாய்க்கும்போது குறு மயக்கம் வரலாம்.

வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும்போதும், உயரமாக ஏறும்போதும் மயக்கம் வரலாம். வெயிலில் அதிகமாக அலைவது, கடுமையான உடல் வலி, ரத்தசோகை, சத்துக்குறைவு, உணவு ஒவ்வாமை ஆகிய காரணங்களாலும் குறு மயக்கம் வருவதுண்டு.

என்ன அறிகுறி?

நின்ற நிலையிலோ உட்கார்ந்த நிலையிலோ இருக்கும் ஒருவர் திடீரென்று நினைவிழந்து, மயங்கி விழுவார். அடுத்த சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து அவராகவே எழுந்து கொள்வார். மயக்கத்திலிருந்து விடுபட்டதும் சில நிமிடங்களுக்குக் கைகால்களில் நடுக்கமும் தசைத்துடிப்பும் ஏற்படும்.

எச்சரிக்கை அறிகுறிகள்

சிலருக்குக் குறு மயக்கம் ஏற்படுவதற்கு முன் படபடப்பு ஏற்படும். அடிக்கடி கொட்டாவி வருவது, ஊசி குத்துவது போன்ற உணர்வு, வியர்ப்பது, மூச்சு வாங்குவது, வாயைச் சுற்றி மதமதப்பு முதலிய அறிகுறிகள் தோன்றுவதுண்டு. இவை ஏற்பட்டவுடன் தரையில் அல்லது படுக்கையில் படுத்துவிட்டால் குறு மயக்கம் வராது.

முதலுதவி என்ன?

# மயக்கம் அடைந்தவரை அப்புறப்படுத்தி, உடனடியாக நல்ல காற்றோட்டமான இடத்துக்குக் கொண்டு செல்லுங்கள்.

# ஆடைகளின் இறுக்கத்தைக் கொஞ்சம் தளர்த்திவிடுங்கள்.

# இடுப்பு பெல்ட்டை அகற்றுங்கள்.

# தலை கீழேயும் பாதங்கள் மேல்நோக்கியும் இருக்குமாறு தரையில் படுக்க வையுங்கள்.

# சில நிமிடங்களுக்குப் பாதங்களை உயர்த்திப் பிடித்துக்கொள்வது நல்லது.

# தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வைத்தால் மூச்சுக் குழாய் அடைபடாமல் இருக்கும்.

# தலைக்குத் தலையணை வைக்கக் கூடாது. பதிலாக, பாதங்களுக்கு அடியில் வைத்துக்கொள்ளலாம்.

# முகத்தில் ‘சுளீர்' என தண்ணீர் தெளியுங்கள். அப்படிச் செய்யும்போது முகத்தின் நரம்புகள் தூண்டப்படுவதால், மூளை நரம்புகளும் வேகமாக வேலை செய்யும். அப்போது மயக்கம் தெளிந்துவிடும்.

# மயக்கம் தெளிந்த பின், குளுகோஸ் தண் ணீரில் சிறிதளவு உப்பைக் கலந்து குடிக்கத் தரலாம்.

# ஐந்து நிமிடங்களுக்குள் மயக்கம் தெளியாவிட்டால் அது நெடு மயக்கமாக இருக்கலாம். இதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.

நெடு மயக்கத்துக்குக் காரணம்

வலிப்பு நோய், இதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், பக்கவாதம், வெப்பத்தாக்கு, மூளையில் ரத்தக்கசிவு, மூளைக் காய்ச்சல், மூளைக்கட்டி ஆகியவை உள்ளவர்களுக்கு நெடு மயக்கம் வரும். இதயத் துடிப்பு, ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவை குறைவாக இருந்தாலும்; மிக அதிகமாக இருந்தாலும் இவ்வகை மயக்கம் வர வாய்ப்பு உண்டு.

அதிக அளவில் மது அருந்துவது, போதை மாத்திரைகளைச் சாப்பிடுவது, மின் அதிர்ச்சி, மருந்து ஒவ்வாமை, விஷக் கடி, விஷ வாயு, தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களாலும் நெடு மயக்கம் ஏற்படும்.

மயக்கம் – உண்மையா, நடிப்பா?

வீட்டிலோ, வேலை செய்யும் இடத்திலோ பிரச்சினை ஏற்படும்போது, அதிலிருந்து தப்பிக்க சிலர் மயக்கம் ஏற்பட்டுள்ளதுபோல் நடிப்பார்கள். அப்போது அந்த மயக்கம் உண்மையில்லை என எப்படித் தெரிந்துகொள்வது?

அவருடைய கண் இமைகளை மேல்நோக்கி இழுங்கள். அவர் உண்மையிலேயே மயக்க நிலையில் இருந்தால், இமைகளை நீங்கள் மேல்நோக்கி இழுக்க முடியும். மயக்கம் அடைந்தது போல் நடிக்கிறார் என்றால், இமைகளை நீங்கள் மேலே இழுக்கும்போது அவர் இமைகளைத் திறக்கவிடமாட்டார்.

உண்மையில் மயக்கம் உள்ளவர்களுக்கு விழிகள் சுழலாது. மயக்கத்தில் உள்ளதுபோல் நடிப்பவர்களுக்கு இமைகளைத் திறந்தால் விழிகள் இங்கும் அங்கும் சுழலும். இவற்றிலிருந்து மயக்கம் உண்மையா, நடிப்பா என்று தெரிந்துகொள்ளலாம்.

தடுப்பது எப்படி?

# முதல்முறையாக மயக்கம் ஏற்பட்ட பிறகு ‘முழு உடல் பரிசோதனை’யை மேற்கொள்வது அவசியம்.

# மயக்கத்துக்கான காரணத்தை அறிந்து சிகிச்சை மேற்கொள்வது, மீண்டும் மயக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

# பயம், பதற்றம் போன்ற உளவியல் காரணமாக மயக்கம் வருபவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் மனபலத்தை உண்டாக்கவும் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது, தியானம் மற்றும் யோகாசனம் பயில்வது உதவும்.

# பள்ளி மாணவர்கள் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

# வெயிலில் அளவுக்கு அதிகமாக விளையாடக் கூடாது.

# அடிக்கடி மயக்கம் ஏற்படுபவர்கள் ‘ஜிம்னாஸ்டிக்', ‘கம்பிப் பயிற்சிகள்’ போன்ற தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.