வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

(1)காலை உணவு அனைவருக்கும் முக்கியமான ஒன்று எனினும், நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பது முக்கியமான ஒன்றே. சிலர் காலை உணவை தவிர்ப்பதற்காக சாக்லேட், ஸ்வீட் டிரிங்க்ஸ் போன்றவற்றை உட்கொள்வார்கள். அது தவறான ஒன்று.

பழச்சாறு

காலையில் வெறும் வயிற்றில் பழச்சாறு குடிக்கக்கூடாது ஏனெனில் அதில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். நீங்கள் பழச்சாறு குடிக்க வேண்டுமெனில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு பிறகு பழச்சாறு குடிக்கவும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிக அளவில் மெக்னீசியம் உள்ளதால், உடலில் கால்சியம் மற்றும் மெக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும்.

தயிர்

தயிர் நிறைய நல்ல பாக்டீரியாக்கள் இருந்தாலும் அதை வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இந்த நல்ல பாக்டீரியாக்கள் வயிற்று படலத்துடன் சேர்ந்து வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தி விடும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகளை காலை வேளையில் உட்கொண்டால் அவை வயிற்றில் உள்ள அமிலத்துடன் சேர்ந்து வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

காபி மற்றும் டீ

காலையில் வெறும் வயிற்றில் காபி டீ குடிப்பதற்கு பதிலாக ஒரு தம்ளர் தண்ணீர் குடித்து விட்டு, குடித்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

இதில் உள்ள டானின் மற்றும் பெக்டின் குடல் வாலைத்தூண்டு அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச்செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

பாலுடன் எதை சேர்க்க கூடாது?

பாலுடன் எதை சேர்க்க கூடாது?

கால்சியம் சத்து நிறைந்த பாலுடன் சில உணவுகளை சேர்ந்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.

அதேபோல், பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் சளி அதிகம் தேங்கும்.

தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசெளகரியம் தருவதோடு, வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.

பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்னைகள் ஏற்படும்.d

கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் (Cellulose) அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிகம் நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின் (Tanin), பாலை திரளச்செய்வதால், செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

முகச் சுருக்கமின்றி இளமையை தக்கவைக்க சூப்பரான வழிகள்

முகச் சுருக்கமின்றி இளமையை தக்கவைக்க சூப்பரான வழிகள்!


ஐம்பது வயதிற்கு மேல் ஆனாலும் பெண்களில் சிலர் ஜம் மென்று அழகாக காட்சியளிப்பர்.

அதைப் பார்த்து பலரும் ஏக்கப் பெருமூச்சு விடுவதுண்டு. இளமையை தக்க வைத்துக் கொள்ள என்ன தான் சாப்பிடுகிறாரோ? என்று நினைப்பதும் உண்டு.

அவ்வாறு ஏங்கும் பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது ஆரோக்கியமான தோலை தருகிறது

பால்

காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர (தினமும் அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை) சுருக்கங்கள் மறையும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர்- ஒரு தேக்கரண்டி, தேன்- ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த பேஸ்ட் ஒரு சிறந்த ஆன்டி- ஏஜிங்காக செயல்படுகிறது.

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு முழு தேக்கரண்டி பாதாம் ஆயிலை நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகச்சுருக்கம் உள்ள இடத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்கும்.

பாதாம் ஆயில்

தினமும் குளிப்பதற்கு 20 நிமிடங்கள் முன்பு பாதாம் ஆயிலை முகத்தில் தடவி குழித்து வர, நாளைடைவில் முகம் பொலிவு பெறும்.

சுக்கு கஷாயம் குடித்தால் மூலநோய் குணமாகும்!

சுக்கு கஷாயம் குடித்தால் மூலநோய் குணமாகும்!

சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடும் சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும். சுக்குடன் சிறிது நீர் தெளித்து அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்.

சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, “சுக்கு நீர்” காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மந்த நிலை குணமாகும். சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
சுக்கு , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

தோல் நோயை விரட்ட குப்பைமேனி குளியல்!

தோல் நோயை விரட்ட குப்பைமேனி குளியல்!



இந்த... அரிப்பு, படை, அலர்ஜினு வியாதிங்க வந்துட்டா... உடம்புல அங்கங்க தடிச்சிப் போய், பாக்கறதுக்கு கொடுமையா இருக்கும். அதனால வர்ற அவஸ்தை அதை விட கொடுமையா இருக்கும். இதையெல்லாம் விரட்டியடிக் கறதுக்கு நாட்டுப்புறத்துல ஏகப்பட்ட சங்கதி இருக்கு. அதுல ஒண்ண எடுத்துவிடறேன்... எழுதிக்கோங்க!

பொதுவா, தோல் வியாதிங்க வந்துட்டாலே மனுஷன ஆட்டிப் படைச்சிடும். நாலு இடத்துக்கு பந்தாவா போய் வரக்கூட முடியாத அளவுக்கு கை, கால், முகம்னு வெளியில தெரியற இடத்துலயெல்லாம்கூட பட்டை பட்டையா... சொறி சொறியா... முளைச்சு உயிரை எடுக்கும். இதையெல் லாம் குணப்படுத்தவும் கைவசம் வைத்தியம் இருக்கு.

அருகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மையா அரைக்கணும். அதை தோல் வியாதி இருக்குற இடத்துல பூசி, அரை மணி நேரம் கழிச்சு குளிக்கணும். வாரத்துல மூணு நாள், நாலு நாள்னு நம்ம வசதிக்கு ஏத்தாப்புல இப்படி குளிச்சுட்டு வந்தா... நல்ல குணம் தெரியும்.

குப்பைமேனி இலை (வீட்டு ஓரங்கள் பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிற இலைகளுடன் காணப்படும் செடி) ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு, கல் உப்பு கொஞ்சம் சேர்த்து அரைச்சு, அரிப்பு கண்ட இடத்துல பூசி, அரை மணி நேரம் கழிச்சு குளியல் போடணும். இதைத் தொடர்ந்து செய்துகிட்டு வந்தா... ஊறல், படை எல்லாம் ஓடிப்போயிரும். குணம் தெரிஞ்சுட்டா... மருந்தை கை விட்டுடலாம். பக்கவிளைவுங்கற பேச்சுக்கே இடமில்ல. காலை நேரத்துல உடம்புல பூசி குளிச்சா நல்லது.

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்துக்கோங்க, அதோட மூணு சின்ன வெங்காயம் சேர்த்து அரைச்சி உடம்பு முழுசும் பூசி, அரை மணி நேரம் கழிச்சி வெந்நீர்ல குளிச்சாலும், தோல் சம்பந்தபட்ட வியாதிக்கு குணம் கிடைக்கும்.
நன்னாரி வேர் (நாட்டு மருந்து கடையில் கிடைக் கும்) 20 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணி சேர்த்து நல்லா காய்ச்சணும். 200 மில்லி ஆனதும் இறக்கிறணும். காலையில நூறு மில்லி, சாயங்காலம் நூறு மில்லினு குடிச்சு வந்தா... தோல் நோய், வந்த இடம் தெரியாம ஓடிப்போயிரும்.

கீழாநெல்லி -மஞ்சகாமாலைக்குமட்டுமில்ல... மனநலக் கோளாறுக்கும்

கீழாநெல்லி -மஞ்சகாமாலைக்குமட்டுமில்ல... மனநலக் கோளாறுக்கும்...! --- நாட்டு வைத்தியம்

‪#‎தூக்கமின்மை‬ சரியாக...

சிலபேரு தூக்கமில்லாம தவிச்சிக்கிட்டே இருப்பாங்க. ஜாதிக்காயை பொடி பண்ணி, தினமும் காலையில ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேன்ல கலந்து சாப்பிட்டு வந்தா... சும்மா கும்முனு சொக்கிக்கிட்டுத் தூக்கம் வரும்.

‪#‎மனநலக்‬ கோளாறு விலக...

கீழாநெல்லினதும் மஞ்சகாமாலைக்கு மருந்துனுதான் தோணும். ஆனா, மனநலக் கோளாறை சரி பண்ற சக்தியும் அதுக்கு இருக்குங்கறது ஆச்சர்யமான சேதிதான். கீழாநெல்லி சமூலத்தை (இலை, வேர், பூ, காய் என செடி முழுக்க) கல் உரல்ல போட்டு (ஒரு கைப்பிடி அளவு), தண்ணி விட்டு மை மாதிரி அரைக்கணும். தொடக்க நிலை மனநலக் கோளாறு உள்ளவங்களோட தலையில, காலை நேரத்துல இதைப் பூசணும். ரெண்டரை மணியில இருந்து மூணு மணி நேரம் கழிச்சு, தலைக்குக் குளிக்கணும். இப்படி பதினஞ்சு நாளைக்கு ஒரு தடவை செஞ்சா நல்ல குணம் கிடைக்கும். மொத்தம் ரெண்டு, இல்லனா மூணு தடவை செய்தாலே போதும்.
இதேமாதிரி 'நல்லவேளை இலை'யை கல் உரல்ல போட்டு மையா அரைச்சு தலையில பூசி, ரெண்டரை மணியில இருந்து மூணு மணி நேரம் கழிச்சு தலைக்குக் குளிச்சு வந்தாலும் மனநலக் கோளாறு சரியாகும்.
‪#‎நினைவாற்றல்‬ பெருக...

திரிபலாவை (நெல்லிக்காய், தான் றிக்காய், கடுக்காய்) கால் ஸ்பூன் எடுத்து தேன்ல கலந்து தினமும் சாப்பிட்டு வந்தா நினைவாற்றல் பெருகும்.
இதேமாதிரி கோரைக்கிழங்கை பொடி பண்ணி, அரை ஸ்பூன் எடுத்து, அதோட தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் பெருகும்.
வல்லாரை இலைப்பொடியை கால் ஸ்பூன் அளவு காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் வரும்.
அமுக்கிராங்கிழங்கு சூரணம் ரெண்டு ஸ்பூன், பாதாம் பருப்பு நாலு, காய்ஞ்ச திராட்சை ஒரு ஸ்பூன் எடுத்து, 200 மில்லி பசும்பால்ல போட்டுக் காய்ச்சி, ஆறினதும் காலையிலயும் சாயங்காலமும் சாப்பிட்டு வந்தா... நினைவாற்றல் அதிகரிக்கும்.
வல்லாரைத்தூள் 10 மடங்கு, வசம்புத்தூள் ஒரு மடங்கு சேர்த்து கலந்து வச்சிக்கிடணும். இதுல அரை ஸ்பூன் அளவு தேன்ல கலந்து காலை - மாலைனு சாப்பிட்டு வந்தா... நினைவாற்றல் கூடும்.
இதையெல்லாம் ஒரு மண்டலம் சாப்பிடணும். தேவைப்பட்டா சில நாள் இடைவெளி விட்டுத் தொடரலாம்.

பூரான் கடிச்சா உடனே பனை வெல்லம் கொடுங்க

பூரான் கடிச்சா உடனே பனை வெல்லம் கொடுங்க!இய‌ற்கை வைத்தியம்!!

குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போதோ ஏதாவது பூச்சி கடித்து விடும். கடித்தது எந்த வகை பூச்சி என்பதை குழந்தைகளின் தோலில் ஏற்படும் தடிப்புகளை வைத்தே கண்டறிந்து கொள்ளலாம். பூரான் எனப்படும் நூறுகாலிகள் கடித்த இடத்தில் தோல் தடித்து சிகப்பு நிறத்தில் காணப்படும். குழந்தைகளுக்கு அரிப்பும் எரிச்சலும் இருக்கும் இதை வைத்தே அது பூரான் கடிதான் என்பதை உறுதி செய்ய முடியும்.
ஒரு சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும். தலைவலிப்பது போல இருக்கும். வாந்தி ஏற்படும். பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டும். அதற்கு முன்னதாக சில முதலுதவி சிகிச்சைகள் செய்யலாம்.
பூரான் கடித்த இடத்தில் உடனடியாக ஆன்டிசெப்டிக் சோப் போட்டு நன்றாக கழுவ வேண்டும் இதனால் அரிப்பும் கட்டுப்படும். கடிபட்ட இடத்தில் சூடாக இருக்கும். வலியும் அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் குளிர்ச்சியாகி வலி கட்டுப்படும்.
பனை வெல்லம்
பூரான் கடித்தது என்று தெரிந்ததும் குழந்தைகளுக்கு பனைவெல்லத்தை கரைத்து ஒரு சங்கு கொடுக்கலாம். சாப்பிட தெரிந்த குழந்தையாக இருந்தால் பனைவெல்லாம் தந்து சாப்பிட சொல்லலாம். அதேபோல் அரிக்கும் இடத்தில் ஹைடிரோ கார்டிசோன் கிரீம் தடவ அரிப்பு மறையும். தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக சிறிது மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். அதிக மண்ணெண்ணெயை விட்டால் தோல் பொத்துவிடும் அதனால் கவனத்துடன் செயல் படவேண்டும்..
குப்பைமேனி இலை
வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது.
குப்பைமேனி இலையையும் உப்பையும் சரி அளவாக 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும்.
ஊமத்தம் இலை
பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும். ஊமத்தம் செடியின் நூறு கிராம் எடுத்து நன்றாக இடித்து கால்லிட்டர் நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் நீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

ஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள்

ஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு
வைத்தியங்கள் !!!

lஅனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாக அசிடிட்டி பிரச்சினை யால் அவதியுற் றிருப்போம் என்பது 100% உண்மை. வயிற்றில் அமிலம் சுரக்கும் செயல்பாட்டிற்கும், அதிகளவில் அமிலம் சுரப்பதை தடுக்கும் செயல்பாட்டிற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அறிகுறிகள் தான் அசிடிட்டி ஆகும்.
நாம் உண் ணும் உணவு செரி மானம் அடைவ தற்கு வயிற்றில் அமிலம் சுரக்கிறது. வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் மூலம் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கும் போது, இது வயிற் றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. மோசமான உணவுப்பழக்கம், மனஅழுத்தம், பதற்றம் ஆகியவை அசிடிட்டிக்கான முக்கிய காரணங்களாகும்.
குடும்ப விருந்தின்போது கொஞ்சம் அதிகமாக குலாப் ஜாமுன் சாப்பிட்ட காரணத்தாலோ அல்லது டீ பிரேக்கில் காரமான சமோசா சாப்பிட்ட காரணத்தாலோ நமக்கு அசிடிட்டி ஏற்பட்டிருக்கலாம். காரணம் என்னவாக இருந் தாலும், அசிடிட்டி ஒரு சங்கடமான அனுபவமாகும். இந்த சந்தர்ப்பங்களில் நாம் சாதாரணமாக ஆன்டாஸிட் எடுத்துக் கொள்வது வழக்கம்.
ஆனால் இதைத் தடுக்க வேறு இயற்கை முறைகள் உண்டு என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆகவே இதிலிருந்து மீள்வதற்கான 10 இயற்கை வைத்திய முறைகளை இங்கு பார்க்கலாம்.
1.வாழைப்பழம் :
வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது. அதி களவு, குறைவான அமிலத் தன்மை ஆகிய காரணங்களால் வாழைப்பழம் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும்.
மேலும் இரைப்பையின் அக உறையில் சீதத்தன்மையை ஏற்படுத்தும் கூறுகளும் இதில் அடங்கி யுள்ளன. இந்த சீதத்தன்மை, வயிற்றில் அசிடிட்டி மூலம் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை விரைவுப்படுத்தி அசிடிட்டியைக் குறைக்க உதவும். அசிடிட்டி ஏற்படும் சமயத்தில், அதிகளவு பழுத்த வாழைப் பழத்தை சாப்பிட்டால், விரைவான தீர்வைப் பெறலாம். மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் அடங்கிருப்பதால், அசிடிட்டிக்கு நல்ல பயன் கிடைக்கும்.
2.துளசி :
துளசியில் இருக்கும் கூறுகள் செரிமானத்திற்கு பயனுள்ள வையாகும். இது வயிற்றினுள் சீதத்தன்மையை ஊக்குவிப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது வயிற்று அமிலங்களின் சக்தியைக் குறைத்து அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது. இவை வாயு உருவாக்கத்தையும் குறைக்கும். உடனடி நிவாரணத்திற்கு, உணவு சாப்பிட்ட பின்னர் ஐந்து அல்லது ஆறு துளசி இலைகளை உண்ணுங்கள்.
3.குளிர்ச்சியான பால் :
பாலில் அதிகளவு கால்சியம் அடங்கியிருப்பதால், அமிலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. ஒரு டம்ளர் குளிர்ச்சியான பால், அசிடிட்டி அறிகுறிகளைக் குறைக்கிறது. எப்படியெனில், இதில் உள்ள குளிர்ந்த தன்மை, அசிடிட்டியின் போது ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. அதிலும் குளிர்ந்த பாலை, சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். குறிப்பாக அதில் ஒரு கரண்டி நெய் சேர்த்து குடித்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.
4.சோம்பு :
இது பெருஞ்சீரகம் எனவும் அழைக்கப்படும். இது வாய் ப்ரஷ்னராக பயன்படுத்தப்பட்டாலும், இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு. மலச்சிக்கலைக் நீக்கி, செரி மானத்திற்கு உதவுதல் இதன் ஒரு பண்பாகும். இதில் ப்ளேவோனாய்டுகள், பிளாமிடிக் அமிலம் மற்றும் வேறுபல கூறுகள் இருப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது.
இதைத் தவிர, இது வயிற்றின் உட்பகுதியை குளிராக்குவதால், விரைவாக குணமடைய உதவுகிறது. ஆகவே தான் ரெஸ்ட்ராண்ட்டுகளில் சாப்பிட்ட பிறகு சோம்பு வழங்கப்படுகிறது. ஒரு வேளை உங்களுக்கு திடீரென அசிடிட்டி ஏற்பட்டால், கொஞ்சம் சோம்பை தண்ணிரில் கொதிக்க வைத்து, அதை இரவு முழுவதும் ஊறவிட்டு, அந்த நீரைக் குடித்தால் அசிடிட்டியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
5.சீரகம் :
சீரகத்தில் அதிகப்படியான எச்சிலை உற்பத்தி செய்யும் தன்மை உள்ளது. இது செரிமானத்தை சீராக நடை பெற வைத்து, அதனால் ஏற்படும் பல்வேறு வயிற்று பிரச்சினைகளை சரிசெய்யும். அது மட்டுமின்றி இது வயிற்று நரம்புகளை அமைதிப்படுத்தி, அமிலம் சுரப்பதால் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த உதவும் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது.
அதற்கு இதை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். அதை விட, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடிப்பது சிறந்த முறையாகும்.
6.கிராம்பு :
இது ஒரு இயற்கை யான இரைப்பைக் குடல் வலி நீக்கியாகும். இது குடல் தசை இயக் கத்தை துரித்தப்படுத் துகிறது மற்றும் உமிழ் நீர் சுரப்பதையும் அதிகப்ப டுத்துகிறது.
இதன் ஒரு வகையான கசப்புக் கலந்த காரமான சுவை, அதிகளவு உமிழ்நீர் சுரப்பதைத் தூண்டுவதால், செரிமானத்திற்கு உதவுகிறது. ஆகவே அசிடிட்டியால் அவதியுறும் போது, ஒரு கிராம்பை கடித்து வாயில் வைத்துக் கொள்ளுங்கள், இதிலிருந்து வெளியாகும் திரவம் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தி நிவாரணம் அளிக்கும்.
7.ஏலக்காய் :
சளி, பித்தம், வாதம் ஆகிய மூன்று தோஷங் களையும் சரிசெய்யக் கூடிய ஒரே உணவு ஏலக்காய் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது. இது செரிமானத்தை துரிதப்படுத்தி, வயிற்று வலியைக் குறைக்கும்.
இது இரைப்பையின் உட்பரப்பில் சீத தன்மையை சமப்படுத்தி, வயிற்றில் அதிகளவு அமிலம் சுரப்பத்தால் ஏற்படும் தாக்கத்தை தணிக்கிறது. இதன் இனிப்புச்சுவை மற்றும் குளிராக்கும் தன்மை, அசி டிட்டியின் மூலம் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கொடுக்கும். குறிப்பாக அசிடிட்டியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, கொஞ்சம் ஏலக்காயை பவுடராக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
8.புதினா :
புதினா இலைகள் வாய் நறுமணத்திற்கும் மற்றும் பல்வேறு உணவுகளை நறுமண சுவைïட்டுவதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இலை அசிடிட்டிக்கு நிவாரணம் தரும் ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.
இது வயிற்றில் அமிலத் தைக்குறைத்து, செரி மானத்திற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதன் குளிர்விக்கும் தன்மை அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சலுக்கும் நிவாரணம் தருகிறது. அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டால், சில புதினா இலைகளைக் கசக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர், இந்த நீரை பருகினால் நிவாரணம் கிடைக்கும்.
9.இஞ்சி :
இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் இஞ்சி. இது உணவை உறிஞ்சும் தன்மையை அதிகரித்து, விரைவாக செரிமானம் அடைவதற்கு வழிவகுக் கிறது. உணவிலுள்ள புரதச் சத்துக்களை உடைத்து, அவை உடலில் சேர்வதற்கு உதவுகிறது. இஞ்சி, வயிற்றில் சீதம் சுரக்கும் அளவை அதிகப்படுத்துவதால், அமிலத் தாக்கத்தைக் குறைக்கிறது.
வேண்டுமெனில் சிறிய இஞ்சித் துண்டை மென்று சாப்பிடலாம். இது தடினமாக இருந்தால், நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை குடிக்கலாம். அதேப்போல், இஞ்சியை அரைத்து, கொஞ்சம் வெல்லம் சேர்த்து, வாயில் வைத்து உறிஞ்சுவதால், இது மெதுவாக வயிற்றுப் பகுதிக்குச் சென்று அசிடிட்டிக்கு நிவாணம் அளிக்கும்.
10.நெல்லிக்காய் :
இதில் அதிகளவு வைட்டமின் `சி’ உள்ளது. இதைத் தவிர சளி மற்றும் பித்ததிற்கு சிறந்த மருந்தாகும். இதன் நோய் நீக்கும் சக்தி உணவுக் குழாயுடன் இணைந்த இரைப்பை புண்களைக் குணமாக்க உதவுகிறது. ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பவுடரை, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், அசிடிட்டி பிரச்சனை உருவாகாது.
எனவே உங்களுக்கு அசிடிட்டி தொல்லை ஏற்படும் போது, ஆன்டாஸிட் மாத்திரையை பயன்படுத்துவதற்கு பதிலாக, நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும், மேலே குறிப்பிட்ட வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி நல்ல நிவாரணம் பெறுங்கள்

பொடுகினை அழிக்க

பொடுகினை அழிக்க.....!!!

*தேங்காய் பால் - 1/2 கப்

எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி

வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது

இம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துவந்தால் பொடுகு தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளரும்.

*பசலைக் கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.

* 1 கப் தயிருடன் 2 டீஸ்பூன் வால் மிளகுத்தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை தலையில் நன்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு படிப்படியாக நீங்கிவிடும்.

*ஆலிவ் ஆயிலில் பொடுகை நீக்கும் தன்மை உள்ளது. அதற்கு இரவில் படுக்கும் முன்பு, அந்த ஆயிலை லேசாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் நன்கு மசாஜ் செய்து, பின் தூங்க வேண்டும். பின் அதனை காலையில் எழுந்து, ஷாம்பை போட்டு குளிக்க வேண்டும்.

*பொடுகு பிரச்சனைக்கு பூண்டு, எலுமிச்சை சிறந்த பலனைத் தரும். எலுமிச்சை ஸ்கால்ப்பில் உள்ள தோல் செதில் செதிலாக வருவதை தடுக்கும். பூண்டு ஒரு ஆன்டி-பயாடிக் மற்றும் ஸ்கால்ப்பில் பாக்டீரியா வராமல் தடுக்கும். ஆகவே அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் பூண்டின் பற்களை அரைத்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்த பின் ஷாம்பு சேர்த்து குளிக்க வேண்டும்.

* வெங்காயத்தை அரைத்து, அதனை ஸ்காப்பில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் உள்ள பொடுகு முற்றிலும் போய்விடும்

இத்தனை குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறலாம்.

சளி மருந்து! இய‌ற்கை வைத்தியம்

சளி மருந்து! இய‌ற்கை வைத்தியம்!!

சளி மருந்து

தேவையானவை:
கண்டங்கத்தரி பொடி - 100 கிராம்

தூதுவளை பொடி - 100 கிராம்

துளசி பொடி - 100 கிராம்
செய்முறை:

இந்த மூன்று பொடிகளையும் கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்

இருமல் சளிக்கு தினம் காலை மாலையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 1/2 ஸ்பூன் பொடியில் 1/2 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து சாப்பிடவும்
நாட்டு மருந்து கடைகளில் அல்லது சூப்பர் மார்கெட்டுகளில் கூட இந்த மூன்று பொடிகளும் கிடைக்கிறது..மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே இருமல், சளி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்

மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி!

மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி!

சி ல பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வர்றதுண்டு. மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்க, திடீர்னு விலக்காகிட்ட பொண்ணுங்க ரொம்பவும் டென்ஷன் ஆகிடுவாங்க. அந்தப் பிரச்னையை சரி பண்ணக்கூடிய அருமருந்து ‘சப்ஜா விதை’!

இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிர்ல ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும்.

வ ந்தது நிக்கறதுக்கு மருந்து சொன்னேன். வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு.

எங்க காலத்துல நாள் கிழமை, பண்டிகை சமயத்துல எங்களுக்கு ‘தூரத்துக்கு நாள்’ வந்துட்டா என்ன செய்வோம் தெரியுமா?! இப்போல்லாம் தூரம் தள்ளிப் போக கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கறாங்களே... அந்த ஜோலியே கிடையாது! இந்த சப்ஜா விதை - தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிச்சுட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவோம். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது!

தூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான - ஆரோக்கியமான வழி இருக்கு! காலையில வெறும் வயித்துல கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் காப்பியோ, டீயோ எதுவானாலும் குடிக்கணும். அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்!

சி ல சமயம் ‘சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை’னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு!

கொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம்! எள், வெல்லம் ரெண்டுமே சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும்.

அதே மாதிரி, கொஞ்சம்போல (ஒரு இணுக்கு) கற்பூரத்தை வெத்திலையில வச்சுத் தின்னாலும், சீக்கிரம் தூரமாகிடலாம். அதுவும் இல்லைன்னா, இஞ்சிச் சாறுல நிறைய வெல்லம் கலந்து வெறும் வயித்துல குடிச்சாலும் பலன் கிடைக்கும். 

மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?

மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?
ஊளைச் சதையால் சங்கடப்படுகிறீர்களா?

கவலையை துரத்துங்கள்!


இ ப்பல்லாம் குழந்தை இல்லைனு ஏக்கப்படற தம்பதிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. குழந்தை பாக்கியம் கிடைக்காம போறதுக்கு உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல விஷயங்கள் காரணமா இருக்கு! மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட கருத்தரிக்கறதுல சிக்கல் வரும். மாதவிலக்கு கோளாறுதான் காரணம்னா, அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு என்னால ஒரு வைத்தியம் சொல்ல முடியும்.

அரை லிட்டர் பசும்பால்ல, கால் கிலோ மலைப் பூண்டை உரிச்சுப் போட்டு வேக வையுங்க. கலவை நல்லா சுண்டி அல்வா பதத்துக்கு வந்ததும், தேவையான அளவு கற்கண்டு... இல்லேன்னா, பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்குங்க. மாதவிலக்கான நாள்லருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலை யில வெறும் வயித்துல இதைச் சாப்பிட்டு வந்தா, கண்டிப்பா பலன் கிடைக்கும்.

இன்னொரு வைத்தியமும் இருக்கு! இப்ப பசும் மஞ்சள் கிடைக்கிற சீசன் இல்லையா?! அந்தப் பசும் மஞ்சளை அரைச்சு எடுத்த சாறு, மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய்... இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து கலந்து வெச்சுக்குங்க. இதை சூடு பண்ணத் தேவையில்லை. மாதவிலக்கான முதல் மூணு நாட்கள்ல காலை, சாயந்திரம்னு ரெண்டு வேளையும் தலா ரெண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடணும். எனக்குத் தெரிஞ்சு நிறைய பெண்களுக்கு இந்த மருத்துவத்தை சிபாரிசு பண்ணி, பலன் கிடைச்சிருக்கு.

உடம்புல ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாகறதுல பிரச்னை வரும். தினம் அஞ்சுலருந்து பத்து எண்ணிக்கை வரை சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையா சாப்பிட்டா, கொஞ்ச நாள்லயே ஊளைச் சதை குறைஞ்சு ஆளும் ஸ்லிம்மாகிடுவாங்க. சீக்கிரமே வீட்டுல ‘குவா குவா’ சத்தமும் கேட்கும்

பெண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்சத்து கொடுக்க

பெ ண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்சத்து கொடுக்க....!

பாட்டி வைத்தியம்

பெ ண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்சத்து கொடுக் கிறோமோ, அதுதான் பிற்காலத்துல குழந்தை பிறப்புல ஆரம்பிச்சு மெனோபாஸ் வரை தாக்குப் பிடிப்பதற்கான பலத்தைக் கொடுக்குது. இந்த சமயத்துல முழு உளுந்துல செஞ்ச பலகாரங்களை நிறைய சாப்பிடக் கொடுக்கணும். அவ்வளவும் சக்தி! அதனாலதான் அந்தக் காலத்துல சின்னப் பெண்களுக்கு அப்பப்போ உளுத்தங்களி செஞ்சு கொடுப்பாங்க!

இடுப்பெலும்புக்கு பலம் சேர்க்கற அருமையான உணவு இது. சாப்பிடவும் ருசியா இருக்கும்!
சரி, உளுத்தங்களி எப்படி செய்வோம், தெரியுமா?
ஒரு டம்ளர் முழு உளுந்துக்கு கால் டம்ளர் பச்சரிசி எடுத்துக்கணும். முழு உளுந்தை களைஞ்சு உலர வெச்சு, வெறும் வாணலில வாசனை வர வறுத்து வச்சுக்கணும். அரிசியையும் இதேபோல தனியா வறுத்துக்கணும். ரெண்டையும் சேர்த்து மிஷின்ல கொடுத்து மாவா அரைச்சுக்கணும் (மிக்ஸில அரைச்சா நல்லா சலிச்சு எடுத்துக்குங்க. அந்தக் காலத்துல நாங்க வீட்டிலயே ‘எந்திரத்துல’ பிடிப்பிடியா போட்டு அரைச்சுப்போம்).
அப்புறம், அரைச்ச இந்த உளுந்து மாவுல திட்டமா தண்ணி கலந்து, வாணலில ஊற்றி, கைவிடாம கிளறணும். இன்னொரு பாத்திரத்துல ஒரு டம்ளர் வெல்லம் போட்டு, பாகு காய்ச்சிக்கணும்.

களி வெந்து வர்ற சமயத்துல தாராளமா ஒரு கை நெய் ஊத்தி, கூடவே, பாகையும் சேர்த்துப் போட்டு கிளறணும். கமகமனு களி வாசனை ஊரைக் கூட்டும். இறக்கி வச்சு சாப்பிடறப்ப இன்னும் ரெண்டு ஸ்பூன் நெய் ஊத்திக்கிட்டா, அவ்வளவு ருசியா இருக்கும்.

நெய்யைவிட நல்லெண்ணெய் சேர்த்து செஞ்சா இந்த களிக்கு இன்னும் ஊட்டம் அதிகம். அதேபோல வெல்லத்துக்குப் பதிலா கருப்பட்டி சேர்த்துக்கலாம்.
அரைச்சு வந்த இதே உளுந்து மாவுல வெல்லம் தூளாக்கிப் போட்டு, சூடா நெய் விட்டு உருண்டை பிடிச்சும் சாப்பிடலாம். பெண்குழந்தை வயசுக்கு வந்து ஒரு வருஷம் வரையாவது வாரத்துக்கு மூணு நாள் உளுத்தங்களி சாப்பிட்டா, பின்னால பிரசவ சமயத்துல சிசேரியன் அது இதுங்கற பேச்சே இருக்காது. சுகப்பிரசவம் சுபமா ஆகும்!

பதினாறு வயசாகியும் பொண்ணு வயசுக்கு வராம இருந்தா

பதினாறு வயசாகியும் பொண்ணு வயசுக்கு வராம இருந்தா ?


பெ ரும்பாலும், இந்த காலத்துல பெண்குழந்தைங்க பத்து வயசிலயே ‘பெரியவ’ளாகிடுதுங்க. போஷாக்கான சாப்பாடுனு ஆரம்பிச்சு இதுக்கு பல காரணங்கள் இருக்கு. அதேநேரம், பதினாறு வயசு ஆகியும் ‘பெரியவ’ளாகாம இருக்கறவங்களும் உண்டு.

பதினாறு வயசை தாண்டியும் அந்தப் பொண்ணு வயசுக்கு வரலைன்னா, ஏதோ பிரச்னைனு அர்த்தம். கைவைத்தியமா சில விஷயங்களை முயற்சி பண்ணிப் பார்த்துட்டு, அதுக்கும் பலன் கிடைக்கலேன்னா உடனே மகப்பேறு டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டுப் போறதுதான் உசிதம்.

கைவைத்தியம் என்னனு சொல்றேன், கேட்டுக்குங்க!
பெண்குழந்தை வளர்த்தியில்லாம போய், அதன் காரணமா பருவம் அடையாம இருந்தா, வெந்தய லேகியம் பண்ணிக் கொடுங்க. உடனே கைமேல பலன் கிடைக்கும்.

வெந்தய லேகியம் எப்படி பண்றதுனு கேக்கறீங்களா?

ஒரு பிடி வெந்தயத்தை எடுத்து, ராத்திரி கொஞ்சம் தண்ணில ஊறப் போட்டுடுங்க. மறுநாள் காலைல, ஊறின அந்த வெந்தயத்தை அம்மில (அம்மி இல்லேனா மிக்ஸில அரைச்சுக்கலாம். பாதகமில்லே. ஆனா, கூடுமானவரை மிக்ஸியை தவிர்க்கறது நல்லது. மருந்து இடிக்கற சின்ன சைஸ் கல்லுரலை இப்பல்லாம் வண்டில போட்டுக்கிட்டு வந்து விக்கறாங்களே... அதுல ஒண்ணு வாங்கி வச்சிக்கோங்களேன்) அரைச்சு, விழுதா எடுத்துக்கணும். இந்த விழுது எவ்வளவு இருக்கோ... அதே எடையளவுக்கு வெண்ணெயும், தித்திப்புக்கு தகுந்த மாதிரி கல்கண்டும் சேர்த்துப் போட்டு வாணலில வச்சு கிளறுங்க. இதோட கைப்பிடியளவு காய்ந்த திராட்சையும் சேர்த்துக்கணும்.
வெண்ணெய் உருகி, நெய் வாசனை வர்ற சமயத்துல லேகியத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வையுங்க. லேகியம் கெட்டியாகி கமகமனு மணமா இருக்கும். ஆறினதும் ஒரு பாட்டில்ல போட்டு வச்சிக்கிட்டு தினமும் காலைல ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டையைச் சாப்பிடக் கொடுத்தா, சீக்கிரமே பொண்ணு புஷ்டியாகி பருவத்துக்கு வந்துடும்.
வத்தலும் தொத்தலுமா இருக்கற பெரியவங்ககூட இந்த வெந்தய லேகியத்தை சாப்பிடலாம். உடம்பு பூரிக்கும்! 

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது..!!!

பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
காலையில் முன் எழுந்திரு த்தல்.
எப்போதும் சிரித்த முகம்.
நேரம் பாராது உபசரித்தல்.
மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
அதிகாரம் பணணக் கூடாது.
குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
கணவனை சந்தேகப்படக் கூடாது.
குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலி ருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.
தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்த மான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

=========

க‌ணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது ...!!!

அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
மனது புண்படும்படி பேசக் கூடாது.
கோபப்படக்கூடாது.
சாப்பாட்டில் குறைசொல்லக் கூடாது
பலர் முன் திட்டக்கூடாது.
எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
ஒளிவு மறைவு கூடாது.
மனைவியை நம்ப வேண்டும்.
முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

பெண்கள் புகுந்த வீட்டில் கடைபிடிக்க வேண்டியவைகள் எவை?

திருமணம் ஆன பெண்கள் புகுந்த வீட்டில் கடைபிடிக்க வேண்டியவைகள் எவை?


திருமணம் ஆனவுடன், பெண்கள் பிறந்த வீட்டை விட்டு, தனது கணவனது வீட்டுக்குச் செல்கிறாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்தவீட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். இது தெரியாமல் சில பெண்கள் பிறந்த வீட்டில் இருந்தமாதிரியே இங்கும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் இது மிகப்பெரிய தவறு. புகுந்த வீட்டை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வரை, பொறுமையாக இருக்க வேண்டும். சில மணமகள்கள், திருமணம்ஆன சமயத்திலேயே, புகுந்தவீட்டினருடன் அவரசரமாக ஏதாவது பேசி, பிரச்னையில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால்,தனிக் குடித்தனம் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதை எப்படி தவிர்ப்பது, நல்லமருமகளாக எப்படி நடந்துகொள்வது?

என்ன என்ன செய்ய வேண்டும்:-

* முதலில் புகுந்த வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

* மாமனார், மாமியார் என்றாலே ராட்சசி, குற்றம் கூறுபவர், திமிர் பிடித்தவர் என்ற தப்பான அபிப்ராயங்களை தவிர்க்க வேண்டும். மணமகள், தாய், தந்தையை போல, மாமனார், மாமியாரைப் பார்க்க வேண்டும்.

* வயது ஆக ஆக, பெரியவர்களுக்கு குழந்தை மனமும், பிடிவாத குணமும் அதிகரிக்கும். அதற்கு ஏற்றார்போல் மணமகள், புகுந்த வீட்டில் நடந்து கொள்ள வேண்டும்.

* சமையல் செய்யும் போது, மாமியாரின் உதவியோடு செய்யலாம். அப்போது அந்த வீட்டில் யாருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதை விட்டுவிட்டு, தனதுவிருப்பத்துக்கு ஏற்றவாறுமருமகள் செய்தால் வீட்டில்பிரச்னைகள் எழலாம்.

* ஒருமுறை கூட, கணவரிடம் நயவஞ்சமாக பேசி, தனிக்குடித்தனம் செல்ல முயற்சிக்காதீர்கள். ஏனென்றால் பெரும்பாலான மாமியாருக்கு, மருமகள் மீது வெறுப்பு ஏற்படுவது இந்தகாரணத்தால் தான். சில வீட்டில் மாமனார், மாமியார் அவர்களாகவே மகன் தனிக்குடித்தனம் செல்ல விரும்புவர். அப்போது நீங்கள் சம்மதிக்கலாம்.

* புகுந்த வீட்டில் உள்ளவர்களிடம், சகஜமாக, ஒளிவு மறைவின்றி மனம் விட்டு பேச வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு,மருமகள் மீது நம்பிக்கை வரும்.

* கணவரிடம், அவரது அம்மா, தங்கை இவ்வாறு செய்தார்கள், திட்டினார்கள் என்று குறைசொல்லாதீர்கள். அது கணவனுக்கும் அவரது தாய் தந்தையருக்கும் பகைமை வளரக் காரணமாகிவிடும்.

* புகுந்த வீட்டில், பிறந்த வீட்டு பெருமைகளை, புகழ்ந்துபேசுவதை மணமகள் தவிர்க்க வேண்டும்.

* அதிகாலையில் எழுந்து, வீட்டின் முன் கோலம் இடுவது, சமையல் செய்வது, கணவரை வேலைக்கு அனுப்புவது, மாமனார் மாமியாருக்கு தேவையான உதவிகளை செய்வது என பல வேலைகளையும் மருமகள் விரும்பிச் செய்ய வேண்டும்.

* பிறந்த வீட்டில் எப்படி உறவினர்களுடன் விருப்பு வெறுப்பின்றி பழகினீர்களோ, அதைப்போலவே புகுந்த வீட்டு உறவினர்களுடனும் நடந்து கொள்ளுங்கள்.

* ஆண்டுக்கு ஒருமுறை, புகுந்த வீட்டு குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். அப்போது தவறாமல் மாமனார் மாமியாரையும் அழைத்துச் செல்ல வேண்டும்.

* புகுந்த வீட்டில், கணவனுடைய திருமணமாகாத தம்பி/ தங்கை இருந்தால், அவர்களை நன்குகவனித்துக் கொள்ளுங்கள். இது புகுந்த வீட்டினரிடம், உங்களைப் பற்றிய மதிப்பை அதிகரிக்கும்.

* விட்டுக்கொடுக்கும் மனதுயாரிடம் உள்ளதோ அவர்கள் எந்த சூழலிலும் குடும்பத்தை வெற்றிகரமாக நடத்த முடியும். எனவே கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள். வாழ்க்கை எந்நாளும் சந்தோஷமாக இருக்கும்.

பெண்களுக்கு பிடிச்ச கணவனாக 25 டிப்ஸ்

பெண்களுக்கு பிடிச்ச கணவனாக 25 டிப்ஸ்;!!!

“பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். “அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’

“வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்:

1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.
4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.

5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது

9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்

11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்

12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண் களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.

19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ÷ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக்கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறைவேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் 

ஹேர் ஆயில் தயாரிப்பு

காசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு



‘கூந்தல் வளர்ச்சிக்காக, தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது. ஆண்களும் முடிகொட்டுதல் போன்ற பிரச்னைகளுக்காக மூலிகை எண்ணெய்களைபயன்படுத்துகிறார்கள். பெரிய பிராண்ட் நிறுவனங்கள் போட்டி களத்தில் இருந்தாலும், தரமான மூலிகை எண்ணெய் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார் திருப்பூர் மாவட்டம் உடுமலை பத்மாவதி.

ஹேர்ஆயில் 3 ஆண்டு வரை கெடாது. நீண்ட நாள் ஸ்டாக் வைத்துகூட விற்கலாம். . வீட்டில் இருந்தபடியே பெண்கள் செய்ய ஏற்றதொழில் இது. ஹேர் ஆயிலை மசாஜ் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம் என்பதால் நல்ல வரவேற்பு உள்ளது.

தயாரிப்பது எப்படி?

தலா 50 கிராம் வெந்தயம், சீரகம், கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெட்டி வேர், விளாமிச்சை வேர் ஆகியவற்றை 24 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து எடுத்து கொள்ள

வேண்டும். தலா 50 கிராம் கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லிவேர், கரிசலாங்கண்ணி, நெல்லி சாறு, செம்பருத்தி ஆகியவற்றை சுத்தமாக கழுவி தண்ணீர்

இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும். 50 கிராம் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ள வேண்டும். அனைத்தையும் ஆட்டு உரல் அல்லது கிரைண்டரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து

எடுக்க வேண்டும். உளுந்த மாவு பதத்துக்கு வந்தவுடன் அதை வடை போல் தட்ட வேண்டும்.

இரும்பு சட்டியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் அதில் வடை போல் தட்டியதை போட வேண்டும். அவை எண்ணெயில் வெந்து உதிரும். சாறு முழுவதும்

எண்ணெயில் இறங்கி கலந்து விடும். எண்ணெய் ஈரப்பதம் இல்லாத நிலைக்கு மாறிவுடன் தீயை அணைத்து விட வேண்டும். சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி தகர டின்னில்

ஊற்றினால் ஹேர் ஆயில் தயார். எண்ணெயை தேவையான அளவுள்ள பாட்டில்களில் அடைத்து, லேபிள் ஒட்டி விற்கலாம்.

பக்குவம் முக்கியம்: கொதிக்கும் எண்ணெயில் வடைபோல் போட்டவற்றை முறுகும் வரை வேக வைத்து விட்டால், வடையின் துகள்களே எண்ணெயை உறிஞ்சி கொள்ளும். எண்ணெய்

அளவு குறைந்து விடும். முறுகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சீக்கிரமே தீயை அணைத்து விட்டால் முழுமையான மூலிகை எண்ணெயாக மாறாது. எண்ணெய் முழுவதும் மூலிகை

எண்ணெயாக மாறிவிட்டதை அறிய, வடை வெந்து கொண்டிருக்கும் போது, ஒரு திரியை சட்டியில் உள்ள எண்ணெயில் நனைத்து பற்ற வைக்க வேண்டும். எண்ணெய் ஈரப்பதமாக

இருந்தால் சடசடவென சத்தம் வரும். சரியாக எரியாது. திரி சத்தமில்லாமல் எரிந்தால் மூலிகை எண்ணெய் பக்குவத்திற்கு வந்து விட்டது என்பதை அறிந்து உடனே தீயை அணைத்துவிடலாம். 

அருகம்புல் - தீராத நோய்களை தீர்க்கும்

தீராத நோய்களை தீர்க்கும் அருகம்புல் - இயற்கை மருத்துவம்

பிரபஞ்சத்தில் முதல் முதலில் முளைத்த மூலிகை அருகம்புல். தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். இந்து சமய வழிபாட்டில் வினாயகர் முதற்கடவுள். அவருக்கு அருகம்புல்லை சாற்றி வழிபாடு செய்கிறோம்.

அருகம்புல் திரிதோஷம், கோழை, கண்ணோய், சிரங்கு, சிரஸ்தாபம், ரத்த பித்தம், மருந்துசுடு, வயிற்றுபுண், வெள்ளை இப்படிபட்ட வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.

பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் தாவரம் முழுவதும் காணப்படும். தண்டு குட்டையானது, நேரானது. ஈரப்பாங்கான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மிகுதியாகக் காணப்படும். வெப்பமான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தன்மையை அருகம்புல் கொண்டுள்ளது.

மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

முழுத்தாவரமும் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும். உடல் வெப்பத்தை அகற்றும்; சிறுநீர் பெருக்கும்; உடலைப் பலப்படுத்தும்; குடல் புண்களை ஆற்றும்.

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு சேகரித்துச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை, ஒன்றிரண்டாக நறுக்கி, 4 டம்ளர் தண்ணீரில் இட்டு, சிறிதளவு  மிளகுத்தூள் சேர்த்து, 1 டம்ளராகக் காய்ச்சி, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, இளஞ்சூடாக, தினம் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும். அதனை தொடர்ந்து செய்து வந்தல் வெள்ளைப்படுதல் பிரச்சனை படிப்படியாக தீரும்.

தேவையான அளவு அருகம்புல் சேகரித்துக் கொண்டு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்து வரலாம்.

ஒரு கைப்பிடி அளவு பசுமையான அருகம் புல்லைச் சேகரித்துக் கொண்டு, நீரில் கழுவி, அரைத்து, காலையில் மட்டும் காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து குடிக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை இவ்வாறு செய்யலாம். நரம்புத் தளர்ச்சி கட்டுப்படும்.

அருகம் சாறு 20 மி.லி. அளவு, தண்ணீர் 20 மி.லி., தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.🍁🍃🍂🌾🍁🍂🌾🍁🍃🍂🌾

மூட்டுவலி போக்கும் இயற்கை வைத்தியம்

மூட்டுவலி போக்கும் இயற்கை வைத்தியம் :-

• சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும்.

• கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குறையும்.

• முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.

• வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி மூட்டுவலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும்.

• நொச்சி இலைச் சாறை கட்டியாக எடுத்து மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் மூட்டு வலி குறையும்.

• நொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டுவலி குறையும்.

• கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால் வலி குறையும்.

• அழிஞ்சில் இலைகளைத் துண்டுகளாக நறுக்கி, வதக்கி இளஞ்சூடாக மூட்டு வலி மேல் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

• வில்வ மர இளந்தளிரை வதக்கி இளம் சூட்டோடு மூட்டுகளின் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.

• கடுகு எண்ணெயில் வெங்காய சாற்றை சிறிதளவு கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டுவலி குறையும்.

• பருத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.

• புங்கன் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் மூட்டுவலி ஏற்பட்ட இடத்தைக் கழுவி வந்தால் மூட்டுவலி குறையும்.

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம்

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி இரண்டு
பகுதி இரண்டு

பகுதி இரண்டுக்குள் செல்லுமுன்:
முற்காலத்தில் சித்தர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட இந்த மருத்துவமுறை இடையில் சுணக்கம் கொண்டிருந்தாலும், தற்காலத்தில் மீண்டும் மக்கள் மத்தியிலும், வெளி நாடுகளிலும் பெருமளவில் புகழ் பெற்றுவருகின்றது.
சிறுநீர் மருத்துவம் பற்றிய திருமூலரின் திருமந்திரத்தில் அமுரிதாரணை எனும் தலைப்பில் ஐந்து பாடல்கள் உள்ளன. திருமந்திரத்துக்குள் அமுரி தாரணையைப் பற்றி காண்போமா?
--------------------------
அமுரி தாரணை - சிறுநீர் மருத்துவம்
(அமுரி - வீரியம், தாரணை - தரித்தல், அமுரிதாரணையாவது வீரியத்தை உடம்பில் தரிக்கும்படி செய்தல். குடிநீர், சிவநீர், வானநீர், ஆகாய கங்கை, அமுத நீர், உவரி, தேறல், மது, கள், மலை நீர் என்பன வெல்லாம் அமுரியைக் குறிக்கும் பல சொற்களாம். சந்திரன் தூலத்தில் வீரியமாகவும், சூக்குமத்தில் ஒளியாகவும், பரத்தில் ஆன்மாவின் சாட்சியாகவும் உள்ளது - யோகசிகோ உபநிடதம் நீர்அமுரியைச் சிறுநீர் என்று கல்பநூல் கூறும். பரியங்க யோகத்தின் பின் இப்பகுதி அமைந்திருப்பதால் அப்பொருள் இங்குப் பொருந்துவது காண்க.)
845. உடலிற் கிடந்த உறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற்று ஏற்றம்இட் டால்ஒக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலும் ஆமே.
பொருள் : உடம்பினின்றும் நீங்காமல் உறுதியைப் பயப்பதாகவுள்ள உணர்வு நீரானது கடலின் அருகே சிறு கிணறு தோண்டி ஏற்றமிட்டு இறைத்தலை ஒத்திருக்கும். உடலில் வேறொரு வழியாகக் கீழ்ப்போவதை மேலே செலுத்தினால் உயிர் வருந்தாமல் பாதுகாக்கலாம். உப்பு நீரையுடைய கடலுக்கு அருகே தோண்டி எடுக்கின் நன்னீர் இருப்பது போன்று சிறுநீர் வாயிலுக்கு அருகே அமுரி இருக்கும் என்க.
846. தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனம்ஒன்று இல்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகமது ஆமே.
பொருள் : தெளிந்த இந்தச் சிவநீரைக் கொண்டால் ஓராண்டு சாதனத்தில் ஒளியைக் காணலாம். கெடுதல் இல்லாதது இது காற்றுடன் கலந்து மேலேறும். எட்டு ஆண்டுகளில் மனம் கீழ்நோக்குதலைத் தவிர்த்து மேலே நிற்கும். மகிழ்ச்சியை விளைவித்துக் கொண்டிருக்கும். உடம்பு பொன்போன்று பிரகாசிக்கும். சிவநீர் - அமுரி, அமுதநீர் வளியுறு எட்டின் - பிராணவாயு.
847. நூறும் இளகும் நுகரும் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே.
பொருள் : அவ்வாறு அருந்தும் சிவநீரானது கீழேயுள்ள குறியை நெருக்குவதாலும் பிழிதாலாலும் அதன் தன்னை கெட்டு மேலேறும் உயிரை உடம்பில் நீடிக்கச் செய்ய இதைவிட மேலான மருந்து வேறில்லை. மக்கள் இச் சூட்சுமத்தை உணர்ந்து தெளிந்து சிரசில் பாயச் செய்து கொண்டால் நரைத்த உரோமம் கறுப்பாகும் மாற்றத்தைக் காணலாம். நூறு மிளகு அளவு எனக்கொண்டு ஒருநளைக்கு ஒரு மிளகு விழுக்காடு நூறு நாளைக்கு உண்ணுதல் வேண்டும் எனவும் கூறுவர்.
848. கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனும்அங்கு இல்லையே.
பொருள் : அறிவில்லாத மக்கள் சிறுநீர்க் குழாய் அருகில் உள்ள சுக்கிலத்தைக் கழிக்க வேண்டும் என்பர். சத்தற்ற முதல் நிலையையும் முதிர்ந்த நிலையையும் அகற்றி அருந்த வல்லார்க்கு உரோமம் நரைத்தலும் தோல் சுருங்குதலும் மாறும். அவ்வாறு நீரை உடம்பில் அமைக்க வல்லார்க்கு எமபயம் இல்லையாம். (கானல் உவரி - உப்பங்கழி நீர். வரைதல் - நீக்குதல்)
849. அளக நன்னுத லாய்ஓர் அதிசயம்
களவு காயம் கலந்த இந்நீரில்
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளும் கபாலமே.
பொருள் : அழகிய கூந்தலையுடைய பெண்ணே ! ஒரு வியப்பு. உடம்பில் மறைமுகமாகச் சென்று (உணர்வாகிய) இந்நீர் சிரசை அடையுங்காலத்து, மிளகு, நெல்லிப் பருப்பு, கஸ்தூரிமஞ்சள், வேப்பம் பருப்பு ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து முழுகி வருவீராயின் உடம்பு மேன்மையாவதோடு உரோமம் கருமையாகும். இத்துடன் கடுக்காய்த் தூளும் சேர்த்தால்பஞ்ச கல்பம் என்பர்.
850. வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென்று அறிவார் அகலிடம்
சேதி மருந்திது சொல்லஒண் ணாதே.
பொருள் : வீரியத்தால் உண்டானபடியால் வீர மருந்தென்றும், ஆகாய வெளியில் சோதியாக அமைவதால் தேவர்கள் மருந்தென்றும் பெண்ணால் அடையப்படுவதால் நாரிமருந்தென்றும் என் குருநாதன் அருளிச் செய்தான். இதனைத் தொன்மையான மருந்தென்று யோகியர் அறிவர். இது விரிந்த சோதி மயமானது. இதனைச் சாமானியருக்குச் சொல்லலாகாது
======================================================
பகுதி மூன்று
அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் பற்றிய செய்திப் பகிர்வுகளின் மூன்றாம் பகுதியாக சுவாமி பூமானந்தா அவர்கள் எழுதிய 'சர்வ ரோக நிவாரணி' எனும் நூலில் இருந்து சில பகுதிகளை இங்கே காணலாம்.
முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி மூன்று
சிறுநீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்
(இது நமது வாசகர் முரளிதரன்.கே நமக்கு அனுப்பி வைத்த பதிவு.. வாசகர்கள் பதிவில் கூறப்பட்டுள்ளவையை மருத்துவ ஆலோசனையின்றி நடைமுறைப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)
சமீபத்தில் சர்வரோக நிவாரணி என்ற புத்தகம் படிக்க நேர்ந்தது. அதை மூன்றாம் கோண வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்புத்தகத்தை தொகுத்தவர் சுவாமி பூமானந்தா அவர்கள்.
காட்டுபூனையின் மலமே வாசனைமிக்க புனுகு ஆவது போல், நம் சிறுநீரே நம் நோய்க்கு அருமருந்தாகிறது என்று தன் புத்தகத்தில் வலியுருத்திருக்கிறார். தினமும் 3 வேளை நாம் வெளியிடும் சிறுநீரை அருந்துவதால் ஆரோக்கியமாக வாழலாம் என்று கூறுகிறார்.
ருத்ரயாமளடாமர தந்திரம் என்ற புத்தகத்தில் ‘சிவாம்பு கல்பம்’ என்ற அத்தியாயத்தில் சிவபெருமான் உமாதேவிக்கு சிவாம்பு என்னும் சிறுநீரின் மகிமையை உபதேசித்துள்ளார், ஆரோக்கியமான உடலிலிருந்து வரும் சிறுநீரில் உடலுக்குத் தேவையான போஷாக்குத் தாதுக்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியிலிருந்து தெரிய வந்திருக்கிறது. ஆரோக்கியமானவனுடைய சிறுநீரில் பத்தொன்பது போஷாக்குத் தாதுக்கள் அடங்கிருப்பதாக கண்டுபிடுத்திருக்கிறார்கள். மனித உடலுக்கு மிகவும் போஷாக்குத் தரக்கூடிய, நன்மை தரக்கூடிய யூரியா அதிக அளவில் அதாவது 3400 மில்லி கிராம் சிறுநீரில் 1459 மில்லி கிராம் யூரியா இருப்பதாக கணடுபிடித்திருக்கிறார்கள். சிறுநீரை எதில் வேண்டுமானாலும் பிடித்து அருந்தலாம், மண்பாத்திரம் அல்லது தமிரப் பாத்திரத்தில் அருந்துவது மிகவும் நன்று. முத்ல், கடைசி தாரைகளை விட்டுவிட்டு நடு தாரையைப் பிடித்துப் பருக வேண்டும் என்பது உத்தமமான விதியாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜைன மதத்தின் ஆச்சாரியரான பத்ரபாகு தன் மதத்தை ஏற்றுக்கொள்பவருக்கு, சிறுநீரை உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்திருக்கிறார். ஜைனர்கள் உபவாச காலங்களில் சிறுநீரை உபயோகிப்பது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. சிறுநீரை உபயோகிப்பதால் நல்ல தேகாரோக்கியமுள்ளவராகவும், வியாதி இல்லாதவர்களாகவும் மட்டும் அல்லாமல், இந்திரியங்களைக் கட்டுப்படுத்தவும், மனதை ஒரு நிலையில் நிறுத்தவும் உதவுகிறது. யோக சாதனையில் எந்தவிதமான தடையும் இருக்காது என்றும் அவர் நூலில் எழுதியுள்ளார்.
உடலில் உள் பாகம், வெளிபாகத்தில் எல்லாவித வியாதிகளுக்கும் காலையில் தொடர்ந்து 9 தினங்களுக்கு சிறுநீர் குடித்தால் குஷ்டரோகங்களையும் போக்கி, உடலை ஆரோக்கியமடையச் செய்கிறது, சிறுநீரை லேசாக சூடு செய்து காதைக் கழுவினால் காதுவலி, இரைச்சல், செவிட்டுத் தன்மை நீங்கும் என்றும், கண்களைக் சிறுநீரினால் கழுவினால் கண்வலி, கண்சிவத்தல், கண்வீக்கம் முதலியன அகன்று விடும் என்றும், ஜலதோஷம், பீனிசம் ஆகிய நோய்களும் சிறுநீர் அருந்துவதால் குணமடையும் என்று குறிப்பிட்டுள்ளார். சிறுநீரை உடலில் தேய்த்தால் அனைத்து விதமான தோல் வியாதிகள் குணமடையும் என்றும், சிறுநீர் கொண்டு கழுவுவதால், மூலவியாதி, வலி, எரிச்சல், நமைச்சல் குணமடையும் என்றும், சிறுநீரினால் உடலை மாலீஷ் செய்தால் தோல் சுத்தமாகவும், வழவழப்பாகவும் ஆகிவிடுகிறது.
சிறுநீரின் உபயோகம்:
இங்கிலாந்தில் ரசாயன நிபுணர்கள் சிறுநீரின் உப்பிலிருந்து சிறந்த குளிக்கும் சோப்புகள், விலையுயர்ந்த கிரீம் மற்றும் லோஷன் தயாரிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
சிவாம்பு என்ற சிறுநீர் சிகிச்சையின் போது நோயாளி வேறு எந்தவிதமான மருந்தையும் பயன்படுத்தக் கூடாது. பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம், மாமிசம், மீன், முட்டை ஆகியவற்றை நீக்குதல் வேண்டும். சைவ உணவே சிறந்தது. பழம், பால், கீரை, காய்கறி வகைகள், அரிசி, கோதுமை, ராகி போன்ற சாத்வீக உணவே உட்கொள்ள வேணடும். சிறுநீருடன் சுத்தமான தண்ணீரை மட்டும் குடித்து அன்ன ஆகாரமின்றி அவருடைய உடல் நிலைக்குத் தக்கபடி 3 அல்லது 5 நாட்கள் வரை உபவாசமிருக்கவேண்டும். நோயாளியின் இரத்த ஓட்டத்தில் அழுத்தம் குறைந்திருந்தால் (Low Blood Pressure) இருதயம் பலவீனமாக இருந்தாலும் உபவாசம் இருக்கக் கூடாது என்றும், சிறுநீர் குடித்து, மாலீஷ் செய்து லேசான சைவ உணவை உட்கொள்ள வேண்டும். இருதய நோய் இல்லாதவர்கள், உபவாசத்தின் போது நாள் முழுவதும் எந்த ஆகாரமும் இன்றி, தான் கழிக்கும் சிறுநீரை மட்டும் அருந்த வேண்டும். மிகவும் முக்கியமான மந்திரம் என்னவென்றால், சிறுநீர் சிகிச்சை ஆரம்பிக்கும் முன் மனதைரியத்துடனும், மனத் துய்மையுடனும், பொறுமையுடனும் இந்தப் பிரயோகத்தை ஆரம்பிக்கவேண்டும். என்னுடைய சிறுநீர் என் நோய்களைப் போக்கி என்னை வளர்க்கக் கூடியது என்ற நினைவும், பக்தி சிரத்தையும், நம்பிக்கையும் இதனால் எந்த தீங்கும் இல்லை என்றும், நன்மையே என்ற எண்ணம் உண்டாக வேண்டும்.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் சிறுநீர் குடிப்பது புதிய கண்டுபிடிப்பு அல்ல, பலயுகங்களாக ஞானிகளாலும், சித்தர்களாலும் கையாளபட்டு வந்திருக்கிறது. சிறுநீர் குடிப்பதால் நோய்களைக் குணப்படுத்தி தேக ஆரோக்கியத்தைப் பெறுவதுடன் அதை நிலையாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.
http://moonramkonam.com/urune-treatment-unrine-therapy-tam…/
வீடியோ இணைப்புக்கு:
https://www.youtube.com/watch?v=GlA1l_OvYq4
==================================================================================================
பகுதி நான்கு
வாழி நலம் சூழ வலைப் பூவின் வாசகர்களுக்கு வணக்கம்.
கடந்த மூன்று பகுதிகளில் நாம் முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுத தாரணை என்றெல்லாம் அழைக்கப்படும் சிறுநீர் மருத்துவம் பற்றி பல செய்திகளைப் படித்தோம். உலகளாவிய அளவில் சிறுநீர் மருத்துவம் பற்றிய ஆய்வுகள் நடை பெற்றுக் கொண்டு வருகின்றன. சிறுநீரில் இருக்கும் பொருட்களின் துணை கொண்டு அலோபதி மருந்துகள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இணைய வெளியில் Google தேடலில் Auto Urine Therapy (AUT) என தட்டச்சிட்டு தேடினால் சிறுநீரின் பயன்கள் பற்றிய லட்சக்கணக்கான பக்கங்கள் உலகளாவிய அளவில் காணக் கிடைக்கின்றன. அழகுச் சாதனப் பொருட்களில் சிறுநீரின் மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக றிகிறோம்.
தமிழ்நாட்டில் பலர் இந்த காசு செலவில்லாத, எளிய மருத்துவ முறையைப் பயன்படுத்தி சொரியாசிஸ் (Psoriasis), கான்சர் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு போன்ற அலோபதியினால் நெடுங்காலமாக தீர்க்கமுடியாத நலக்கேடுகளுக்கு ஆரோக்கியத் தீர்வுகளைப் பெற்று வருகிறார்கள்.
இந்த வகையில் சென்னையில் வசிக்கும் ஒரு பெரியவரைப் பற்றி இங்கே அறிமுகம் செய்வதில் வாழி நலம் சூழ வலைப்பூ பெருமிதம் கொள்கிறது.
மின்பொறியாளர் திரு.அ.மெய்யப்பன், B.E., M.B.A., PGDip(Yoga) அவர்கள் சிறுநீர் சிகிச்சையில் வல்லுநர். யோகா ஆசிரியராகவும், இயற்கை நலவாழ்வியல் அறிஞராகவும் திகழும் அவர் இயற்கை நலவாழ்வியல் குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார்.
திரு அ.மெய்யப்பன் எழுதிய நூல்கள்:
மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம்
உயிர் காக்கும் உணவு மருத்துவம்.

இன்றளவிலும் சேவைகளில் முன்னோடியாகத் திகழும் மதுரை காந்தி சங்கத்தின் தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கம், ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம், ஆடுதுறை இயற்கை மருத்துவ அறக்கட்டளை போன்ற தமிழகத்தின் முன்னணி இயற்கை நல இயக்கங்களின் நிறுவன காலத்தில் இருந்தே உறுப்பினராகவும், அந்த அமைப்புக்களின் பலவேறு பதவிகளில் இருந்து கொண்டும் தளராத சேவை செய்து வருபவர். தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் Post Graduate Diploma in Yoga பட்டயம் பெற்றவர். புனேவில் உள்ள இயற்கை மருத்துவக் கழகத்தின் இயற்கை மருத்துவக் கல்வி பயிற்சி பெற்றவர்,
இயற்கை நலவாழ்வு குறித்த புத்தகங்களை எழுதிய தமிழகத்தின் நலவாழ்வியல் முன்னோடி (சரஸ்வதி சங்கம் நிறுவனர்) தவத்திரு.பிக்ஷு சுவாமிகளின் அடிப்பொடி என தன்னை அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்பவர். தமிழகத்தின் முன்னோடி இயற்கை நல வாழ்வியல் அறிஞர்களான, திரு.ம.கி.பாண்டுரங்கனார், சிவசைலம் மு.இராமகிருஷ்ணன் போன்றோரின் வழித் தோன்றல்களான
மு.ஆ.அப்பன் (குலசேகரப்பட்டினம்), திரு இர.இராமலிங்கம் (ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம்), திரு. ஸ்ரீராமுலு (காந்தி இயற்கை மருத்துவமனை, மதுராந்தகம்), யோகாகுரு திரு.தி.ஆ.கிருஷ்ணன் (திருமூலர் இயற்கை மருத்துவ அறக்கட்டளை) போன்றோருடன் இணைந்து செயல்படுபவர். தமிழகமெங்கும் இயற்கை நலவாழ்வியல் முகாம்களை நடத்திக் கொண்டு வருபவர்,
இயற்கை நலவாழ்வியல் துறையில் நீண்ட அனுபவம் பெற்றவரும், எழுபதுகளைத் தாண்டி சீரான ஆரோக்கியத்தை கொண்டிருப்பவருமான திரு அ. மெய்யப்பன் சிறுநீர் மருத்துவம் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
தமிழ்நாட்டில் உள்ள ராசிபுரத்தில் அமைந்துள்ள சுவாமி சிவானந்தரின் தெய்வீக வாழ்க்கைச் சங்கம், அமைப்பின் தலைவர் சுவாமி குரு பிரகாசானந்தா அவர்களை சந்தித்து சுவாமி பூமானந்தா அவர்கள் எழுதிய சர்வரோக நிவாரணி நூல் வாங்கச் சென்ற போது ராசிபுரத்தில் சுவாமி குரு பிரகாசானந்தா அவர்கள் சிவாம்பு சிகிச்சை பற்றி சொன்ன நாளில் இருந்து சிவாம்பு அருந்தத் தொடங்கி விட்டேன். நான் 25 ஆண்டுகளாக தொடர்ந்து சிவாம்பு அருந்தி வருகிறேன். இயற்கை மருத்துவத்தையும் கடைப்பிடித்து வருகிறேன். ஆனால் இந்த ஆண்டு பல நூல்களைப் படித்த பிறகு ஓரளவு தெளிவு பெற்றேன். பெங்களூர் புரானி அவர்கள் சிறுநீர் நாற்றமடிக்காமலும் வெளிர் மஞ்சள் நிறமாகவும் இருப்பதற்கு யோசனை சொல்லியுள்ளார். இளநீர், நீர்மோர், தர்பூசணி, வெண்பூசணி, வெள்ளரிக்காய் பார்லித்தண்ணீர் இவற்றை அருந்த வேண்டும். நாள் முழுவதும் 3லிட்டருக்கு மேல் தண்ணீர் அருந்த வேண்டும். தனக்குத் தானே வைத்தியம் செய்வதற்கும் செலவில்லாத வைத்தியம் செய்வதற்கும் தீராத நோய்களிலிருந்து விடுதலை பெறவும் உதவுவது சிவாம்பு மருத்துவம். எளிய வைத்தியம். விருப்பு வெறுப்பு இல்லாமல் திறந்த மனத்தோடு சிவாம்புச் சிகிச்சையை முதலில் மஜாஜ் செய்வதில் தொடங்கிப் பிறகு அருந்தத் தொடங்கலாம். பலர் பயனடைந்துள்ள போது அதை நாம் ஏன் செய்து பார்க்கக்கூடாது? டாக்டருக்கும் பீஸில்லை. மருந்துக்கும் காசில்லை.
என்கிறார் திரு.அ. மெய்யப்பன் அவர்கள்.
சிவாம்புச் சிகிச்சை என்று அழைக்கப்படும் சிறுநீர் மருத்துவம் பற்றிய ஐயங்களுக்கு தீர்வுகளையும், நோய்களுக்கான ஆலோசனைகளையும் நீங்கள் விரும்பினால் இவரிடம் இருந்து பெறலாம் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறார்.
சென்னையில் வசிக்கும் திரு.அ.மெய்யப்பன் அவர்களது அழைபேசி எண்:9841667695 / 9444323730
இந்தத் துறையில் பலர் புத்தகங்களை பல மொழிகளில் எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவைகளில் சில புத்தகங்கள், குறிப்புக்கள், காணொளிகள், மின்னூல்கள் போன்ற வடிவில் உள்ளவை பற்றி அடுத்து வெளியாக விருக்கும் இத் தொடரின் இறுதிப் பகுதியில் காணவிருக்கிறோம்.
=====================================================================================================================
பகுதி ஐந்து இறுதி பகுதி.
வாழி நலம் சூழ...
சிறுநீர் மருத்துவம் பற்றிய நூல்களைப் பற்றிய குறிப்புக்களை கீழே காணலாம்;
சிறுநீரின் மருத்துவ குணங்களைப் பற்றி அறிய மேலும் சில விவரங்களை இங்கே தருகிறோம். இந்தத் துறையில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றைப் பற்றிய செய்திகள் இதோ.
1. சர்வரோக நிவாரணி, ஆசிரியர் சுவாமி பூமானந்தா, நூல் வெளியீடு: இராசிபுரம் தெய்வீக வாழ்க்கைச் சங்கம்.
2. கேரளாவில் இந்த சிவாம்பு சிகிச்சை முறை திரு.நாராயணன் மாஸ்டர் அவர்களால் வெகு திறம்பட சொல்லித் தரப்படுகிறது. அவரது மொபைல் எண்: 8547146191 தொலைபேசி எண்: 04962446191
3. சிறுநீர் சிகிச்சையின் இயற்கை நன்மைகள் எனும் தமிழ் நூல்
விலை ரூ. 220.00
இந்நூலை NOTIONPRESS.COM எனும் வலைத் தளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். புத்தகத்தின் ஆசிரியர் திரு.ஜகதீஷ் ஆர்.புராணி (AUTHOR MR JAGATHESE R PURANI) அவரை தொடர்பு கொள்ள மொபைல் எண்: 093428 72578
திரு புராணி அவர்களின் வலைத்தளம் www.urinetherapy.in
அவரது மின்னஞ்சல் : jbhurani@gmail.com
திரு.புராணி அவர்களின் வலைத் தளத்தில் சிவாம்பு முறையால் சிகிச்சை பெற்று பயனடைந்தோரின் மருத்துவ அறிக்கைகளின் ஸ்கேன் ரிப்போர்டுகளுடன் காணலாம். சிவாம்பு சிகிச்சை முறையை எவ்வாறு பின்பற்றுவது என்ற விவரங்களையும் காணலாம். சிறுநீரை எவ்வாறு நாற்றமற்ற வகையிலும், நிறமற்ற வகையிலும் பெறுவது என்பதற்கான முறைகளை திரு புராணி இந்த வலைதளத்தில் விவரமாக தந்துள்ளார்.
4. Wonders of Uropathy by Dr.G.K.Thakkar
WONDERS OF UROPATHY எனும் இப்புத்தகத்தை B.JAIN PUBLISHERS (P)LTD. வெளியிட்டு உள்ளனர். இப்புத்தகத்தை பெற விரும்புவோர் www.bjainbooks.com எனும் வலைத்தளம் மூலமாக பெறலாம். புத்தகத்தின் விலை ரூ. 39.00. இப் புத்தகத்தின் ஆசிரியர் Dr.ஜி.கெ.தக்கர் (DR G K THAKKAR) இந்த சிகிச்சை முறையை தமது WATER OF LIFE FOUNDATION (INDIA) எனும் அமைப்பின் மூலம் மும்பையில் (MUMBAI) இருந்து பரப்பி வருகிறார்.
5. Miracles of Urine Therapy.
MIRACLES OF URINE THERAPY BY DR C P MITHAL MBBS MD
விலை ரூ. 285 INCLUDING TRANSPORT CHARGES. AMAZON.IN வலைத் தளம் மூலமாக இந்தப் புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம். சிறுநீர் மருத்துவத்தை வாழ்நாள் முழுவதும் பின் பற்றி வந்த முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் அவர்களின் அணிந்துரை இந்த நூலில் உள்ளது.
6. MANAV MOOTRA BY RAOJIBHAI MANIBHAI PATEL .. இந்த மின்னூலை இணையவெளியில் இருந்து இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். பயனடைந்தோரின் விவரங்களுடன் சிவாம்புச் சிகிச்சைகளைப் பற்றி சிறப்பான முறையில் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
.
7. சிறுநீர் சிகிச்சை பற்றிய மேலும் ஒரு சிறப்பான நூலை இந்த வலைத் தளத்தில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். http://www.whale.to/a/The-Golden-Fountain-Coen-van-der-kroo…
8. பீகார் ஸ்கூல் ஆஃப் யோகா எனும் அமைப்பின் நிறுவனரான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்களின் “A systematic course in the ancient tantric techniques of Shivambu by Swami Satyananda Saraswati, Bihar School of Yoga” நூலில் சிவாம்பு சிகிச்சை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
.
9. சிறுநீரை மேற்பூச்சாக வெளி உபயோகம் செய்வது எப்படி எனும் விளக்கத்தை காணொளி மூலம் காண விரும்புவோர். இந்த youtube தளத்தை நாடலாம். Urine Therapy: External use of Shivambu or Urine Therapy
https://www.youtube.com/watch?v=FRX58Ut-q4o
திரு அ.மெய்யப்பன் அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு சிகிச்சை விவரங்களையோ அல்லது புத்தகங்களையோ பெற விரும்பினால் அவரது முகவரி மற்றும் அலைபேசி/தொலைத் தொடர்பு எண்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மின் பொறியாளர் திரு.அ.மெய்யப்பன், B.E., MBA, PG Dip in Yoga
இல்ல முகவர்: புதிய எண்:15, முதல் தளம்,
திரு.வி.க. மூன்றாவது தெரு,
கேசரி உயர்நிலைப் பள்ளி அருகில்,
மைலாப்பூர், சென்னை 600004
அலைபேசி: 9444323730
தரை இணைப்பு: (044)24990565
to change your lifestyle.practice yoga and adopt nature cure and eat more fruits and vegetable salads.
சிறுநீர் மருத்துவம் பற்றிய ஐந்து பகுதிகளை பொறுமையாகப் படித்த வலைப்பூ வாசகர்களுக்கு நன்றி. இந்த முறையிலான மருத்துவம் மிகச் சிறந்த மருத்துவம். பொருட் செலவோ, பக்க விளைவுகள் அற்ற மருந்துகளை சாப்பிட வேண்டிய அவசியமற்ற சிகிச்சை முறை. மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதனை இந்த சிகிச்சையின் மூலம் பயன் பெற்றவர்களை கொண்டு அறியலாம். இத்துடன் இந்த தொடர் நிறைவடைகிறது.

சிறுநீர் மருத்துவம்

சிறுநீர் மருத்துவம்

சித்தர்கள் அருளிய ஆரோக்கிய வாழ்வியல்-1
முதல் படி: சிறுநீர் மருத்துவம் – ஒரு அறிமுகம்
சிறுநீர் சிகிச்சையை முதன்மைப்படுத்தும் ஒரு அறிவியல் வலைப்பூ. சித்தர்கள் முதல் நிறைய சான்றோர்கள் ஆதரித்த முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம் அல்லது சிறுநீர் மருத்துவத்தின் மேன்மைகளைப் பரப்ப இவ்வலைப்பூ முயலும். கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் மாநாட்டிற்காக உருவாக்கப்பட்ட கட்டுரை:

சித்தர்கள் அருளிய ஆரோக்கிய வாழ்வியல்
ஆரோக்கியத்திற்கான அடிப்படை:
இன்றைய உலகில் மனித சமுதாயம் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனாக வசதியான வாழ்க்கை பெற முடிகிறது. ஆனால் மனத்தளவில் நிறைவோ, அமைதியோ அல்லது உடலளவில் ஆரோக்கியமோ இருக்கிறதா என்பது கேள்விக்குரியது. நவீன மருத்துவம் வளர்ந்துள்ள இந்நாளில் ஏன் நோய்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது; மருத்துவமனைகளின் எண்ணிக்கையும், மருந்துக் கடைகளின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே போகிறது.
மேலும் இன்று நாட்பட்ட நோய்களை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியாதோ என்ற நிலை உள்ளது. இதை நவீன மருத்துவமும் மறுப்பதாக இல்லை. நவீன மருந்துகளின் பக்க விளைவுகளையும், பின் விளைவுகளையும் யாரும் மறுப்பதற்கில்லை. இதில் கொடுமை என்னவென்றால் நோய்களைக் குணப்படுத்த வேண்டிய மருந்துகள், புதிய தீராத நோய்களுக்கு வழிகோலுவதுதான். அடுத்து நோய்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் நம் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து கொண்டே போவதுதான். மனதைச் செம்மையாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வழிகாட்ட பலவேறு யோகா மற்றும் ஆன்மிகப் பயிற்சிகள் தோன்றிக் கொண்டே இருந்த போதும், பெரிதாக பலன் கிட்டியிருப்பது போல் தோன்றவில்லை.
எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தபோதும், மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் இல்லையெனில் மகிழ்ச்சியான வாழ்க்கை எப்படி அமையும்? அப்படியெனில் இதற்கு வேறு வழியே இல்லையா?
இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகாண இக்கட்டுரை முயல்கிறது.
நமது ஆய்வை பரிணாமத்திலிருந்து துவக்குவோம். பரிணாமத்தைப் பொறுத்தவரை அறிவியலாருக்கும், ஆன்மிகத்தாருக்கும் ஒரு சில விஷயங்களில் ஒற்றுமை இருப்பதைப் பார்க்கலாம்.
உயிர் என்பது சிற்றுயிர்களிலிருந்து பேருயிர்களாகப் பரிணமிக்கின்றது. விலங்கினங்கள் எளிய, சிக்கலற்ற, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றன. ஆனால் மனித இனம் மட்டும் துன்பங்கள், துயரங்கள், கவலைகள் என்று அதிருப்தியான வாழ்க்கை வாழ்கின்றது. இது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மனித இனம் ஆறாம் அறிவைப் பெற்ற ஒரே உயிரினம் என்று பெருமை பேசுகிறோம்; பரிணாமத்தில் உச்சத்தில் இருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறோம். அப்படியிருக்க ஏன் இந்த துன்பமான, துயரமான வாழ்க்கை?
விலங்கினங்கள் நம்மை விட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கின்றன. அவை இயற்கையான வாழ்க்கை வாழ்கின்றன. இயற்கையில் எப்படிக் கிடைக்கிறதோ அப்படியே உணவை உட்கொள்கின்றன. உணவை அவை மாற்றவோ, சீர்திருத்தவோ, ருசி கூட்டவோ முயல்வதில்லை. ஆனால் மனிதனோ தனது பரிணாம வளர்ச்சி பெற்ற புலன்களால் இயற்கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் தனது தேவைக்காகவோ, ருசிக்காகவோ மாற்ற விரும்புகின்றான். சுருங்கச்சொன்னால் இயற்கையை வெல்ல மனிதன் விரும்புகின்றான். மனிதன் மாறுதல்களை விரும்புகின்றான். இவ்வாறாக, மனிதனது வாழ்க்கை முற்றிலும் செயற்கையாக மாறிக் கொண்டிருக்கிறது. உணவை எடுத்துக் கொண்டால், உணவை வேறு பொருட்களுடன் சேர்த்து, சமைத்து, நிலைமாற்றி தனது ருசிக்கேற்ப அல்லது தேவைக்கேற்ப உண்ண விரும்புகின்றான். இதனால் உணவுப் பொருட்களின் குணாதிசயங்கள் சமயத்தில் முற்றிலுமாக மாறிவிடுகின்றன. மூலப் பொருட்களில் இருந்த குணங்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. இதுதான் மனிதனின் துன்பத்திற்கு மூல காரணமா?
பரிணாமத்தில் எல்லா உயிர்களுக்குமே புலன்கள், உள்ளுணர்வுகள், தேவைக்கேற்பவும், சுற்றுச் சூழலுக்கேற்பவும், காலத்திற்கேற்பவும் தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றை இயல்பாகவே பெற்றுள்ளன.
விலங்கினங்கள் இயல்பான, இயற்கையான வாழ்க்கை வாழ்கின்றன. வாழ்வை உள்ளபடி அவை எதிர்கொள்கின்றன. உணவைப் பொறுத்தவரை கிடைத்தவற்றை, எதையும் மாற்ற முயலாமல் அப்படியே உண்கின்றன. அவைகளுக்கு வியாதி என்பது சாதாரணமாக உண்டாவதில்லை. அப்படியே நோய்நொடி உண்டானாலும் தன்னை எப்படி குணப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவைகளுக்குத் தெரிந்திருக்கின்றது. அவை மருத்துவர்களையோ அல்லது வெளி உதவியையோ, பிறரது ஆலோசனையையோ நாடிச் செல்வதில்லை.
உலகின் பல்வேறு இடங்களிலும், பல்வேறு காலங்களிலும் வாழ்ந்த சான்றோரும், தத்துவ ஞானிகளும், மதத் தலைவர்களும் மனித வாழ்க்கைக்கு நிச்சயமான குறிக்கோள் இருக்கின்றது என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளனர். “உன்னையே நீ அறிவாய்” என்று அறிவுறுத்தியுள்ளனர். இந்த இலக்கை அடைய, மனிதனுக்கு ஆறாம் அறிவு தேவைப்பட்டது; அதனாலேயே பரிணாமம் நமக்கு ஆறாம் அறிவை வழங்கியுள்ளது. இந்த ஆறாம் அறிவால் உந்தப்பட்டு, மனிதன் எல்லாவற்றிலும் காரண காரியத்தைத் தேடுகிறான். இப்பேரண்டத்தில் ஒவ்வொரு விளைவிற்கும் ஒரு காரணம் கண்டிப்பாக உண்டு என்று உணர்கிறான். மனிதனுக்கு பரிணாமம் செயலாற்றும் வல்லமை கொண்ட இரு கரங்களைத் தந்துள்ளது. தனது அறிவையும், கரங்களையும் கொண்டு மனிதன் நுட்பமான கருவிகள், உபகரணங்கள், எந்திரங்கள் ஆகியவற்றை உருவாக்கியுள்ளான். இவற்றைக் கொண்டு தனது தேவைக்கான பல புதிய புதிய பொருட்களை உருவாக்கவும் செய்கிறான். இது அவனது ஆறாம் அறிவால் கிடைத்த பேறு அல்லது சிறப்பு. எனவே அவன் எல்லாவற்றையும் வெவ்வேறு வகையாக மாற்றிப் பார்த்தால் என்ன என்ற எண்ணத்துடன் செயல்படுகிறான்.
இந்நிலையில் நோய்நொடிகள் தவிர்க்க இயலாதவை. விலங்கினத்தைப் பொறுத்தவரையில் துன்பம் விளைவிப்பவை, தீங்கு விளைவிப்பவை ஆகியவற்றை தவிர்க்க அவைகளின் உள்ளுணர்வு வழிகாட்டுகின்றது. ஆனால் மனிதனுக்கு அவனது உள்ளுணர்வு வழிகாட்ட, எச்சரிக்க தவறிவிட்டதோ என்று தோன்றுகிறது. இதை இன்னும் விரிவாகப் பார்க்கலாம்:

1. ஆடுகள் ஊமத்தை, எருக்கு போன்றவற்றை தின்றாலும் அவைகளுக்கு ஊறு நேர்வதில்லை.

2. சில பூச்சிகளின் வாழ்க்கையில் லார்வா என்றொரு பருவம் வருகிறது. இப்பருவத்தில் அவைகளுக்கு பார்க்கும் சக்தி இருப்பதில்லை. எனினும் அவை தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்து, வேண்டிய இலை தழைகளை மட்டும் உண்டு உயிர் வாழ்கின்றன.

3. சாதாரணமாக சமையலுப்பு, வெங்காயம், புளி, இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு, மிளகாய் போன்றவற்றை மனிதன் அப்படியே உண்பதில்லை. ஆனால் அவற்றை வேறுவேறு அளவில், வேண்டிய இடங்களில் தேவைக்கேற்ப உணவுடன் சேர்த்து உண்கின்றன. அவ்வாறு செய்யும் போது சுவை கூடி, ஏற்புடையதாக உணவு மாறுகின்றது.

4. இன்றைய நவீன யுகத்தில், நம் வாழ்வில் நாம் பல இரசாயனப் பொருட்களையும், தாதுக்களையும், உலோகங்களையும் கையாள நேர்கிறது. இவற்றில் பல நம் உடலினுள் சென்று, அவற்றின் தன்மைக்கேற்ப விளைவுகளை உண்டாக்குகின்றன. கிட்டத்தட்ட நாம் உட்கொள்ளும் அனைத்துப் பொருட்களுமே நம் உடலிலும், மனிதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்பதை அனுபவரீதியாகப் பார்க்கிறோம். இத் தாக்கங்கள் அனைவருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லை; மாறுபடுகின்றன. மரபுக் கூறுகள், உடலமைப்பு, உணவின் தன்மை, குணங்கள், எண்ணங்கள், சுற்றுச்சூழல், காலம், செயல், எந்தக் கட்டத்தில் மனிதன் வாழ்கிறான், அவனது பழக்க வழக்கங்கள், தனித் தன்மைகள் போன்றவற்றால் மாறுபடுகின்றன.
ஹோமியோபதி மருத்துவத்தின் பதார்த்த குண சிந்தாமணி (Materia Medica) யைப் படித்தால் பொருட்களின் தாக்கங்கள் மனிதனுக்கு மனிதன் மாறுபடலாம் என்ற உண்மை எளிதில் விளங்கும். இத்தாக்கங்களின் தன்மையும், அளவும் மாறுபடுகின்றது. எனவே காரண காரிய விளக்கம் என்பது சிக்கலாகிறது. மேலும் பல சமயங்களில் இத் தாக்கங்கள் எளிதில் காணக் கூடியவையாகவோ அல்லது உணரக் கூடியவையாகவோ இருப்பதில்லை.
இப்போது நமக்கு இரண்டு வினாக்கள் எழுகின்றன: மனித இனத்திற்கு துன்பம் என்பது தவிர்க்க முடியாததா? நம் பரிணாமத்தில் ஏதாவது கோளாறு இருக்கிறதா?
வல்லுனர்கள் இப்பேரண்டத்தில் நுட்பம், வரைமுறை, ஒன்றுக்கொன்று தொடர்பு (Pattern, Precision, Regularity) போன்றவற்றை எல்லாவற்றிலும் காண்கின்றனர். இது பரிணாமம் எவ்வளவு சரியாக, நேர்த்தியாகச் செல்கிறது; அதில் விபத்து என்றோ எதிர்பாராதது என்று எதையும் கூறுவதற்கில்லை என்ற பேருண்மையை உணர்த்துகிறது. இதை சிற்றுயிர்களிலும் விலங்கினத்திலும் கண்ணுறலாம். எனவே இது மனித இனத்திற்கும் பொருந்தாமலிருக்க காரணம் இல்லை. மேற்கண்ட இரண்டு வினாக்களுக்கும் பதில் “இல்லை” என்பதே.
மனிதனின் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் பரிணாமத்தைக் குறைகூறுவது என்பது சரியில்லை, முறையில்லை என்பது தெளிவாகிறது.
நோய்நொடிகளை எதிர்கொள்ளும் ஆற்றலை, அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலை பரிணாமம் வழங்காதிருக்க முடியாது. இந்த நோய் எதிர்ப்பாற்றலை மீறி நோய் வாய்ப்படும் போது எளிய முறையில் சீர் செய்துகொள்ள வழிமுறைகளையும், மருந்துகளையும் இயற்கை வழங்காதிருக்க முடியாது.
விலங்குகள் தங்கள் நோய்நொடிகளுக்கு மருந்துதேடி யாரிடமும் செல்வதில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். மனிதனுக்கும் இது பொருந்த வேண்டும். அப்படியானால், அப்படி மருந்தைத் தேட, ஏதாவது வழி தெரிகிறதா? எங்கே மருந்தைத் தேடுவது?
மனம், புத்தி, புலன்கள், உடற்கட்டு, திறமைகள் எப்படி எல்லாவற்றிலுமே மனிதன் விலங்குகளிடமிருந்து மாறுபடுகிறான். மனிதனின் துன்பத்திற்கான காரணங்களும், நிவர்த்திகளும் அவனது புலன்களிலேயே இருக்க வேண்டும். முரண்பாட்டுத் தத்துவத்தின்படி நோயின் காரணங்களும், அவற்றை குணப்படுத்தும் வழிகளும் - இரண்டுமே – ஐம்புலன்கள் அறிந்ததாக இருக்கவேண்டும். தன்னையறிதலிலும் ஐம்புலன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.
ஒவ்வொரு உடல் உறுப்பும் இயற்கையின் பல சோதனைகளுக்குப் பின்னரே தேவை, நோக்கம், சுற்றுச்சூழல் போன்ற பலவற்றையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. எந்த உறுப்பும் அனாவசியம் என்றோ, தேவையில்லை என்றோ கூறமுடியாது. இங்கே சில உதாரணங்களைப் பார்ப்போம்: மரங்கொத்திப் பறவைக்கு அதன் இரை தேடும் தேவைக்கேற்ப நீண்ட அலகு அமைந்துள்ளது. மீன்கொத்திப் பறவை தன் இரையைத் தேடிக்கொள்ள ஆற்றல் மிக்க கண்களையும், செங்குத்தாகக் கீழே இறங்கி, இரையைப் பற்றி, செங்குத்தாக மேலெழும்பும் ஆற்றலையும் (Vertical Landing and Vertical Take-off) பெற்றுள்ளது. மீன்களுக்கு நீந்த ஏதுவான உடலமைப்பு உள்ளது. தவளைகள் நிலத்திலும், நீரிலும் வாழ்வன; அதற்கேற்ற உடலமைப்பை அவை பெற்றுள்ளன.
பெண் கங்காரு தன் குட்டியைச் சுமந்து செல்ல ஏற்றவாறு வயிற்றில் ஒரு பை போன்ற வடிவமைப்பைப் பெற்றுள்ளது. இதை இன்னும் சற்று ஆழமாகப் பார்ப்போம். கங்காரு ஒரு மம்மல் (Mammal) – அதாவது குட்டி போட்டு பால் கொடுக்கும் இனத்தைச் சேர்ந்தது. அது மூன்றடி உயரம் வரை வளரும். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தாவித்தாவி வேகமாக குதித்துச் செல்லும். எனவே, குட்டிக்கு பாதுகாப்பு சிறப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில், வயிற்றில் சுமக்கும் கரு சிதைந்துவிடும்; அல்லது தூக்கிச் செல்லும் குட்டிக்கு ஆபத்து நேரிடலாம். கங்காருக்குட்டி தனது முதல் ஆறு மாதங்களை தன் தாயின் வயிற்றிலுள்ள பையிலேயே கழிக்கிறது. பால் சுரக்கும் உறுப்பும் அந்தப் பையிலேயே அமைந்துள்ளது. எனவே வெளியே வராமலேயே தாயின் வெளிப் பக்கத்திலுள்ள அந்தப் பையிலிருந்தே குட்டி பால் குடிக்க முடியும். இயற்கை எவ்வளவு நேர்த்தியாக, பிரமிக்கும்படியாக செயல்பட்டுள்ளது என்பதை இது உணர்த்துகிறது.
அடுத்து யானையை எடுத்துக் கொள்வோம். அதுவும் ஒரு மம்மல்தான். அதன் வடிவமைப்பும் வித்தியாசமாக, சிறப்பாக இருப்பதைப் பார்க்கலாம். உயரமான, மிகக் கனத்த, மிகப் பெரிய உடலமைப்பு. நினைத்துப் பாருங்களேன்: எளிதில், நீட்ட, சுருக்க, மடிக்க, உறிஞ்சி வைத்துக் கொள்ள, ஏதுவான துதிக்கை மட்டும் இல்லையெனில் அது நீர் பருக எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும்! இயற்கை யானையின் வடிவையும், தேவைகளுக்கும் ஏற்ப வேண்டிய உறுப்புகளை படைத்துள்ளது.
இப்போது மனிதனை எடுத்துக் கொள்வோம். நான்கு கால் பிராணிகளிடமிருந்து பரிணமித்தவன் மனிதன். படுக்கைவாட்டிலிருந்து, செங்குத்தாக நிமிர நிமிர, முன்னங்கால்கள் இரண்டும் முன்னங்கைகளாகின. இந்த மாற்றத்தில் மனிதனின் கரங்கள் இரண்டும் எளிதாக அவனது பிறப்புறுப்பை அடையமுடியும். தன் உள்ளங்கையை ஒரு கோப்பையைப் போல் ஆக்கிக்கொண்டு திரவப் பொருட்களை கையிலேந்த முடியும். இதன் நோக்கம் என்ன?
தற்போது நாம் வேறு சில உயிரினங்களைப் பார்க்கலாம். சிங்கம், புலி, வரிக்குதிரை, குரங்கு, ஆடு, மாடு, ஓணான் போன்றவை தன் சிறுநீரைத் தானே பருகுகின்றன. மனிதனுக்கு உள்ளதுபோல் கோப்பை போன்ற உள்ளங்கை அமைப்பு இல்லாததால் அவை சிறுநீரை நேரடியாகவே சுவைக்கின்றன. குட்டி போட்டபின் குட்டியைச் சுற்றியுள்ள ஜவ்வை நாவினால் நக்கிச் சுவைக்கின்றன. குட்டி வெளிப்படுத்தும் சிறுநீரை அவை அருந்துகின்றன. தனது சிறுநீரை தானே நேரடியாக சுவைக்க இயலாத சில பிராணிகள் தனது இனத்தைச் சேர்ந்த மற்றவற்றின் சிறுநீரைச் சுவைக்கின்றன. நமக்கு இது விநோதமாகவோ, வித்தியாசமாகவோ படலாம். ஆனால் அவை இதை இயல்பாகச் செய்கின்றன. அவை தனது பிறப்பு உறுப்பையோ அல்லது தன் இனத்தின் மற்றையவற்றின் பிறப்புறுப்பையோ நுகர்கின்றன, சுவைக்கின்றன. நாய், ஆடு மாடு போன்றவற்றைக் கவனித்தால் இவ்வுண்மை புரியும். இது ஏன்?
எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவை மூன்று: உயிர் வாழவும், வளரவும் தேவையான உணவு; வசிக்க உறைவிடம்; மற்றும் இனப்பெருக்கம். ஆனால் விலங்குகளைப் போல் மனிதன் சிறுநீரைப் பருகுவதில்லை. மனிதனின் உடலமைப்பு தன் சிறுநீரைத் தானே நேரே பருக ஏற்றதாக இல்லை. அவனது உள்ளுணர்வும் சிறுநீரைப் பருக உந்துவதில்லை. மேலும், சிறுநீரை ஒரு கழிவாக மனிதன் கருதுவதாலும், அதன் மேல் ஒரு அருவருப்பு உண்டாகிவிட்டது.
தன் சிறுநீரைத் தானே பருகும் விலங்குகள் மனிதன் போல் நிறைய நோய் நொடிக்கு ஆளாவதில்லை. அப்படியெனில், சிறுநீரைப் பருகுவதற்கும், ஆரோக்கியத்திற்கும் தொடர்புள்ளதா?
உடல்நிலை சரியில்லாதபோதோ, காயடிப்பட்டபோதோ எருது தன் சிறுநீரை அடிக்கடி பருகுகிறது. சில தினங்களில் அவை உடல் மெலிய ஆரம்பித்து விடும். இதைத் தவிர்க்க, அதன் கழுத்தில் ஒரு உலோக அல்லது மரக்கட்டை வளையத்தை பொருத்துகின்றனர். இது அது தன் சிறுநீரை பருக முடியாமல் தடுக்கும். இன்றைக்கும் கிராமங்களில் இதைக் காணலாம். ஏன் அது தன் சிறுநீரை பருகுகிறது என்ற கேள்வி எழுகிறது. வலி, காயடிக்கப்பட்டதாலான அதிர்ச்சி அல்லது மற்ற உபாதைகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவுமே இதைச் செய்கிறது. எனவே சிறுநீர் நோய் நொடிகளைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும்.
மற்ற விலங்குகளோடு சண்டையிடும் போது ஏற்பட்ட காயங்களையும், மற்ற உபாதைகளையும் தன் சிறுநீர் மூலம் சிற்றுயிர்கள் போக்கிக் கொள்வது அவற்றின் உள்ளுணர்வால். தன் குட்டிக்குத் தான் எப்படி உள்ளுணர்வால் பாலூட்டுகிறதோ அதைப் போல். எனவே மனிதனுக்கும் காயங்களையோ, உடல் உபாதைகளையோ, மற்ற நோய் நொடிகளையோ போக்கிக் கொள்ள ஒரு வழி இருக்கவேண்டும்.
இக்கருத்தை மறுப்பவர்கள் கூறுவது, சிற்றுயிர்கள் உள்ளுணர்வை மட்டுமே நம்பியுள்ளன; எனவே அவற்றிற்கு இது பொருந்தலாம். ஆனால் ஆறறிவு படைத்த, முன்னேற்றமடைந்த மனிதனுக்கு இது பொருந்தாது.
எவ்வுயிராயினும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆரோக்கியம் அடிப்படையான தேவை. மனிதனைத் தவிர அனைத்துயிர்களும் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்ளவும், நோய் வாய்ப்படும்போது குணப்படுத்திக் கொள்ளவும் தாமே வழி தேடிக் கொள்கின்றன. மனிதர்கள் நோயுறும்போது மற்றவரின் உதவியை நாடுகின்றனர். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தன் நோயை தானே போக்கிக் கொள்ள முடியும்.
உள்ளுணர்வால் உந்தப்பட்டு, கன்றுக்குட்டி தாயின் மாடு தேடி பால் குடிக்கிறது. ஆனால், மனித இனத்தில் தாய்தான் சேயின் குறிப்பறிந்து பாலூட்ட வேண்டும். குழந்தைக்கு அழ மட்டுமே தெரியும். தன் உணவைத் தானே தேடிக் கொள்ளும் உள்ளுணர்வு குழந்தையிடம் இல்லை. தாயுமே உள்ளுணர்வால் குழந்தைக்கு அமுதூட்டுவதில்லை. பட்டறிவினாலும், கற்றறிவினாலும் மட்டுமே அவள் செயல்படுகிறாள்.அதேபோல், நோய்நோடிக்கு மருந்து காண உள்ளுணர்வு உதவுவதில்லை.
விலங்குகள் (யானையைத் தவிர) நீரை நேரடியாகவே பருகுகின்றன. மனிதர்கள் நீர் பருக ஏதாவது ஒரு பாத்திரத்தை – டம்ளரை – பயன்படுத்துகின்றனர். ஆனால், தேவை வைக்கும்போது அவர்கள் தங்கள் கையினால் நீரையள்ளிப் பருக முடியும். சாதாரண நிலையில், கைகள் பிறப்புறுப்பின் அருகே நிலை பெறுகின்றன. எனவே சிறுநீரை கையில் எடுத்துப் பருகுவது என்பது எளிமையானது. அடிக்கடி நோய்நொடிக்கு ஆளாகும் விலங்குகளுக்கு அடிக்கடி சிறுநீர் பருகும் தேவை இருப்பதால் இவ்வாறு அமைந்திருக்கலாம்.
சிறுநீர் கழிவல்ல!
சற்று சிந்திப்போம். சிறுநீரை கழிவு என்பது சரிதானா? எந்த உயிரினமும் தன் கழிவைத் தானே உண்பதில்லை. விலங்குகள் தங்கள் சிறுநீரை பருகுகின்றன. எனவே அவை கழிவாக இருக்க முடியாது.
அறிவியலார் சிறுநீரை பகுத்து ஆராய்ந்து அதிலுள்ள நுண் பொருட்கள் பற்றிய விளக்கங்களைத் தந்துள்ளனர். அதன்படி சிறுநீரில் மனிதனுக்குத் தேவையான பத்தொன்பது தாதுஉப்புக்கள் உள்ளன. மனித ரத்தத்தின் ஒரு பகுதி தாய்ப்பாலாக மாறுகின்றதோ, அது போல் ரத்தத்தின் ஒரு பகுதியே சிறுநீர். பால் எவ்வாறு நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட உணவோ, அதுபோல் சிறுநீரும்.
பிறக்குமுன்னரே சிறுநீர் சிகிச்சை!
தாயின் கருவறையில் – பனிக்குடத்தில் – தாயின் வயிற்றில் வளரும் சிசு தன் சிறுநீரைக் கழிக்கிறது. அதில் ஒரு பகுதியைப் பருகுகிறது. இச்சுழற்சி சிசு வளர உதவுகிறது. இதை நவீன மருத்துவம் ஏற்றுக்கொள்கிறது. எனவே பிறக்கு முன்னரே நாம் சிறுநீர் சிகிச்சையை மேற்கொள்கிறோம் என்பது தெளிவு.
சிறுநீரில் நோய் உண்டாக்கும் கிருமிகள்
சிறுநீரில் நோய் உண்டாக்கும் கிருமிகள் உள்ளதால், அது நோய்நொடிகளைத் தோற்றுவிக்கும் என்று நிறையப்பேர் கருதுகின்றனர். இது தவறான கருத்து என்பதை சுய சிறு நீர் சிகிச்சை (Auto Urine Therapy) எனும் ஆங்கில நூலில் கூறப்பட்டுள்ள விளக்கம் தெளிவாக்குகிறது. (குறிப்பு 4). “தொண்ணூறு சதவிகிதத்தினரின் சிறுநீரில் எந்த விதக் கிருமியும் இருப்பதில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு.” மருத்துவர்களும் இதை ஏற்றுக் கொள்கின்றனர். மீதியுள்ள பத்து சதவிகிதத்தினரின் சிறுநீரில் நுண்ணுயிர்கள் இருக்கிறது. அத்தகைய சிறுநீரைப் பருகினாலும் கெடுதல் நேராது. சொல்லப்போனால், நமது சுற்றுச் சூழலில், நாம் சுவாசிக்கும் காற்றில், நாம் உண்ணும் உணவில், நாம் பருகும் நீரில் நிறைய நுண்ணுயிர்கள் உள்ளன. நமது உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலால் இவற்றால் எந்தக் கெடுதலும் நேர்வதில்லை.
மேலும் நுண்ணுயிர்களால் நோய்கள் ஏற்படுகின்றன என்பதே சர்ச்சைக்குரிய ஒன்று. நோய் உண்டாக்குவதாகக் கூறப்படும் நுண்ணுயிர்கள் நம்மைச் சுற்றியும், நமது எச்சிலிலும், நமது உடலின் பல பகுதிகளிலும் எப்போதுமே இருக்கின்றன.
ஆனால் அவற்றால் நாம் அனைவரும் நோய் வாய்ப்படுவதில்லை. எதிருயிர்களைப் பயன்படுத்தாத ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் யூனானி மருந்துகள் நோய்களைக் குணப்படுத்துகின்றன.
அதேபோல் இயற்கை மருத்துவம், அக்குப்ரஷர், அக்குப்பஞ்சர், காந்த சிகிச்சை போன்றவற்றில் மொத்தமாகக் கிருமிகளை அழித்து நோயைக் குணப்படுத்துதல் என்ற கோட்பாடே கிடையாது. இருப்பினும், அவை பல நோய்களைக் குணப்படுத்துகின்றன.