நாட்டுப்பசுக்களும்- நலம் பயக்கும் நுண்ணுயிரிகளும்!

நாட்டுப்பசுக்களும், நலம் பயக்கும் நுண்ணுயிரிகளும்!

சொந்த மண்ணில் வாழ்ந்து இயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யும் நம் நாட்டு பசுக்களையே ‘நாட்டுப்பசு’ என்கிறோம்.
சிலர் நம் நாட்டுப் பசுவின் மகத்துவம் அறியாமல் வெளி நாட்டு பசு மாடுகளை வளர்க்கிறார்கள்.
ஆனால், பிரேசில் உள்ளிட்ட ஏராளமான வெளி நாடுகளில் வெள்ளைக்காரர்களே நம் நாட்டுப் பசுக்களை இலட்சக்கணக்கில் வளர்க்கிறார்கள்.

“ நாட்டுப்பசுவினை வளர்த்து கெட்டவனுமில்லை, சீமை மாட்டை வளர்த்து வாழ்ந்தவனும் இல்லை”
என்ற பழமொழிக்கு ஏற்ப நாட்டுப்பசுக்களின் சிறப்பு சொல்லி மாளாது.
இதில் நாட்டுப்பசு இன்றைய விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் அவசியம் தேவை.
நாட்டுப்பசுவின் குடலில் அடங்கி உள்ளவைகள் என்னென்ன?
இயற்கை விவசாயிகளும், இயற்கை விவசாயத்திற்கு மாற விரும்பும் விவசாயிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமும் இது.
நாட்டுப்பசுவின் குடலில் தொடர்ந்து நல்ல எதிர்உயிர் முறிகள் (Antibiotic) உருவாகின்றன. இவை நாட்டுப்பசு வெளிப்படுத்தும் பால், சாணி, மூத்திரம், போன்றவைகளுக்கு வலிமை தரும் மிக முக்கிய பொருட்களாகும்.
இந்த நல்ல எதிர் முறி உருவாக்கங்களுக்கு, சில பாக்டீரியா சிற்றினங்கள் பொறுப்பு உடையவைகளாக உள்ளன.
லேக்டோ பேசிலஸ், பயோஃபீடோ பாக்டீரியம், ஸ்டீரெப்டோ காக்கஸ், எண்ட்ரோ காக்கஸ், லியுகான்ஸ்டக், பிடியோகாக்கஸ், ஈஸ்ட், கல்சர்கள், அஸ்பர் ஜின்னஸ் போன்ற பாக்டீரியாக்களாகும்.
நாட்டுப்பசுவின் குடலில் நுண்ணுயிர்கள் சிறப்பான குடல் சூழல் சமநிலையை உருவாகுகின்றன. நிலையான நுண்ணுயிர்கள், நிலையற்ற நுண்ணுயிர்கள், உமிழ்நீர், மிடற்றுச்சுரப்பு, கனையச்சுரப்பு, கல்லீரல், முன் சிறுகுடல் சுரப்புகள், வெளியேறு கரைசல்கள், யூரியா, நிலையான புரதங்கள் போன்றவைகளும் குடல் அமைவில் கலந்துள்ள மீதி எண்ணற்ற பொருட்களும் உள்ளடங்கி உள்ளன.
அது போன்றே நாட்டுப்பசுவின் குடல்களிலும் செயல்பாடுமிக்க நுண் உயிர் குடியிருப்புகள் பல்கி பெருகி உள்ளன. அவைகள் உடலில் நோய் தடுப்பு ஆற்றலை உருவாக்குபவை.
இந்த நுண் உயிர்களில் லாக்டிக் அமில பாக்டீரியாவும்,லேக்டோ அமில பாக்டீரியாவும் மிக முக்கியமானவைகளாகும். எல்லா நுண் உயிர்களும் எதிர்பாற்றல் பொருட்களான, தொல்லை தரும் நொதிகள், அமிலங்கள், கணையசுரப்பு, பித்தசுரப்பு இவற்றில் உயிர் துடிப்புடன் இருக்கும். இவைகள் நம் நாட்டுப் பசுவின் குடலின் இருக்கும் தனித்தன்மையாகும்.
நீங்கள் கேலண்டர்களில் அச்சிட்டு வருகின்ற நாட்டுப் பசுவின் படங்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக காணப்படும்.
உண்மையில் அவர்கள் முப்பத்து முக்கோடி முயற்சி மிக்க நன்மை தரும் நுண்ணுயிர்களாகும்.
நைட்ரஜனை நிலைப்படுத்தும் நுண் உயிர்கள், ரைசோபியம், அசிடோ பேக்டர், அசோஸ் பைரில்லம், பீஜர்யின்கியா போன்ற நைட்ரஜனை நிலைப்படுத்திகள் பலவும், பிஎஸ்பி என்னும் பாஸ்பேட் கரைப்பு பாக்டீரியாக்களும், பொட்டாஸ் கரைக்கும் பேசில்லஸ் கைலிகஸ்சஸ் போன்றவைகளும், சல்பரை கரைக்கும் தைஆக்ஸிடண்டுகள் பலவும், ஃபெரஸ் பாக்டீரியாவும் (எங்கும் கிடைக்காத முயற்சி மிக்க நுண்ணுயிர்) டிஜெக்டர் பெப்டிக் பாக்டீரியா சிற்றின வகைகளும், பூஞ்சான வகைகளும், ஆக்டினோமைசிடாஸ் போன்ற பிற நுண்ணுயிரிகளும் உள்ளன.
நாட்டுப்பசுமாட்டுச் சாணத்தில் ஒரு கிராம் அளவில் 300 – லிருந்து 500 கோடி வரை நன்மை தரும், முயற்சிகள் கொண்ட பாக்டீரியாக்கள் உள்ளன. நாட்டுப்பசு மாட்டின் சாணி நுண் உயிர் வளர்ப்பு ஊக்கியாக உள்ளது.
மேலும் நாட்டுப்பசுமாட்டின் பால், சாணி, மூத்திரம் போன்றவைகள் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
இதில் பஞ்சகவ்யம் எனும் பஞ்ச அமிர்தங்கள் மனிதனில் அனைத்து வகையான உயிர் கொல்லி நோய்களுக்கு தடுப்பு மருந்தாக பயன்பாட்டில் உள்ளது.
இதில் பால் மூலம் பெறப்படும் தயிர், நெய் போன்றவைகள் மற்றும் பால், சாணி, மூத்திரம் என இந்த ஐந்தும் பஞ்சகவ்யம் தயாரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது.
பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை:
-------------------------------------------------
பால் – 7 லிட்டர், தயிர் – 4 லிட்டர், நெய் – 1 லிட்டர், கோஜலம் (பசு மூத்திரம்) – 1 லிட்டர், கோமயம் (சாணம்) – கை கட்டை விரல் அளவு, தர்பைப் புல் ஊற வைக்கப்பட்ட நீர் – 1லிட்டர் கலந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் பிரம்ம கூர்ச்சம் எனப்படும்.
வேத சாஸ்திரங்கள் கூறியுள்ள இந்த பஞ்சகவ்ய முறையை அனைத்து தர மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். பஞ்சகவ்யம் செய்து ஒரு மணி நேரத்தில் குடிக்கப்படவேண்டும், வைத்து சாப்பிட நினைப்பவர்கள் பஞ்சகவ்ய கிருதம் செய்தோ, வாங்கியோ சாப்பிடலாம்.
இந்த பஞ்சகவ்யம் சாத்வீக குண நலன்களை தந்து மனிதனை தெய்வ நிலைக்கு எடுத்துச் செல்ல வல்லது. என்பது சான்றோர் கருத்து.
அதுபோலவே “சாமியில்லையேல் சாணியைப் பார்!” என்ற பழமொழிக்கு ஏற்ப தெய்வப்படங்கள் இல்லாத சூழ் நிலையில் பசு மாட்டுச் சாணியை பிள்ளையார் போன்று பிடித்து வைத்து வழிபாடு செய்த வழக்கம் நம் நாட்டில் உண்டு.
இத்தகைய நாட்டுப் பசு மாட்டின் சாணிக்கே இந்த பெறுமை என்றால் அந்த நாட்டுப் பசுவின் பெறுமையை இனியும் சொல்லித் தெரிய வேண்டுமா?.
ஆனால் இந்த நாட்டுப் பசு மாடு இன்று நம் மக்களிடையே குறைந்து போனதற்கு காரணம், மக்களின் அறியாமைதான் ஆகும்.
இனியும் இதுபோன்ற உண்மைகளை அறியாமல் இருந்தால் நம் நாட்டுப் பசு இனத்தை நாமே முற்றிலும் ஒழித்துவிட்டு, சீமை பசு வின் பாலை குடித்து, குடித்து பல நோய்களை சேர்த்துக் கொண்டு, (டாஸ்மாக் சரக்கு குடிப்பதினால் வரும் நோய்கள் தனி) சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் வெளி நாட்டு மருந்து கம்பெனிகளின் வியாபாரத்தில் போட்டு விட்டு பல மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளில் உயிருக்கு ஊசலாடும் கூட்டத்தினை பார்த்தால் ?
பார்க்க... பார்க்க...
நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைக்கையிலே...