உடல் நலக் குறிப்புகள் !!!

உடல் நலக் குறிப்புகள் !!!
ரத்த அழுத்த்தம் உள்ளவர்கள் மட்டுமல்லாது, உடல் சோர்வு, தலைவலி, தலைச் சுற்றல் ஆகியவை உள்ளவர்கள் ஒரு கிளாஸ் நீரில் ஒரு தேக்கரண்டி ஜீரகத்தைப் போட்டு அதனை கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி சாப்பிடவேண்டும். இதனை தினம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.
வாய் துர் நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் இந்த எளிய வழியை பின்பற்றி அந்தத் தொல்லையிலிருந்து விடுபடலாம். எலுமிச்சை சாற்றில் சுடுநீரைக் கலந்து உப்புப் போட்டு குடித்தால் போதும்.
தினசரி உணவுப் பழக்கத்தில் பூண்டு, வெங்காயம், மிளகு, இஞ்சி, பெருங்காயம், ஜீரகம் ஆகியவற்றைச் சேர்த்து வந்தால் ஜீரணப்பிரச்சனை, வாயுத்தொல்லை வராது.
மருத்துவ டிப்ஸ்
கை-கால் வீக்கம்: ஆவாரம்பட்டை, சுக்கு, ஆகியவற்றை சம அளவு எடுத்து 400மி. தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து தினமும் 3 வேளை பருகி வர கை, கால் வீக்கம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
வெந்தயம், சீரகம், வெங்காயம், வில்வப்பழத்து உள்தோல் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக சேர்த்து இளம் வறுப்பாக வறுத்து அரை லிட்டர் தண்ணிரில் போட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் கைகால் வீக்கம், உடல் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.
பொன்மேனி தரும் குப்பைமேனி: குப்பை மேனி இலையையும், உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்து வர குணமாகும்.
தேள்கடியை விரட்டும் குடியோட்டிப்பூண்டு: பிரம்ம தண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும். வயிற்றுவலி போக்கும் நறுவி நறுவிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப்பால் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
காற்று சுத்திகரிப்பான் சர்க்கரை: சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக் காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
தலைபாரம் நீக்கும் கிராம்பு: கிராம்பை நீர்விட்டு மை போல் அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம், நீரேற்றம் குணமாகும்.
காயத்துக்கு காட்டாமணக்கு: காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமணக்கு பாலைப்பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
உப்பலுக்கு உப்பிலாங்கொடி: மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணப்பட்டால், உப்பிலாங்கொடியை அரைஞானில் கட்டத் தீரும்.
மயக்கத்துக்கு ஏலம்: ஏலக்காய் 1 பங்கு, யக்கம் நீங்கும். பனைவெல்லம் 1/2 பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
படர் தாமரைக்கு: அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச நோய் தீரும்.
பல் ஈறு, வீக்கம் வக்கு: கிராம்பு, கற்பூரம், ஒமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து கிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
மலச்சிக்கலுக்கு: பிஞ்சுகடுக்காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், எடுத்து தட்டி 1 டம்ளர் நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும் பொழுது குடித்துவிட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.
==========================================================
உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்!

நமது வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு உடல் பருமனை சுலபமாக கட்டுக்குள் கொண்டுவரும் முறைகளை பற்றி பார்போமா..
உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட இதோ சில முக்கியமான குறிப்புகள்...
1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.
தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.
காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.
தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.