எளிய மருத்துவக் குறிப்புகள்...!!!

எளிய மருத்துவக் குறிப்புகள்...!!!

அருகம்புல்லை சுத்தமாகக் கழுவி நன்றாக மென்று பல் வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.

சாதாரண வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் நீர் மோரில் உப்பு, கறிவேப்பிலை கலந்து, திரியும் வரை சுடவைத்து இரண்டு மூன்று முறை அருந்தினால் குணமாகும்.

தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் சிலருக்கு கண் பார்வை மசமசவென்று தெளிவில்லாமல் இருக்கும். இந்தப் பிரச்சனை இருப்பவர்கள், நல்லெண்ணெயை நன்கு பொங்கவிட்டு, அதில் ஐந்தாறு மிளகுகளைத் தட்டிப் போட்டுத் தலைக்குத் தேய்த்துக் கொள்வது நல்லது. இதனால் கண்பார்வை தீட்சண்யம் ஆவதுடன், ஒற்றைத் தலைவலி, நீர்பாரம் முதலிய பிரச்சனைகளும் வராது.

வயிற்றில் இரைச்சல் இருந்தால், கொதிக்கும் நீரில் கொஞ்சம் ஓமம் போட்டு மூடி வையுங்கள். சிறிது நேரம் கழித்து வடிகட்டி பாலையும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிடுங்கள். வயிற்று இரைச்சல் நின்றுவிடும்.

கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு டீஸ்பூன் அளவிற்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க குடற்பூச்சிகள் முழுவதும் அன்றே வெளிவந்துவிடும். இதற்கு கடும் பத்தியம் கிடையாது. குழந்தைகளின் வயதிற்கேற்ப அளவைக் கூட்டியோ, குறைத்தோ கொடுக்கலாம்.
=============================================

மாதவிடாய் வலி...

மஞ்சள் காமாலை, டைஃபாய்டு ஆகியவை வராமல் இருக்க தினமும் 5 துளசி இலைகளை சாப்பிடவும்.

பல் வலிக்கு வலிக்கும் இடத்தில் கிராம்பை வைத்து வரவும்.
மாதவிடாய்க் கால உடல் உபாதைகளை தடுக்க நல்லெண்ணை மற்றும் முட்டையை 3 நாட்களுக்கு சாப்பிட்டு வரவும்.

புதரிலிருந்து விளையும் பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் மாத விடாய் வலிகள் ஏற்படாது.

இஞ்சித் தூள் மற்றும் சீரகப் பொடியை சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
கடுகுப் பசையுடன் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமலிலிருந்து விடுபடலாம்.

துளசி சாறுடன் சரியான அளவு தேன் கலந்து அருந்தி வந்தால் இருமல் குறையும்.

சிறு நீரக நோய்க்கிருமியால் அவதிப்படுகிறீர்களா? சிறிது ஏலக்காய் போட்ட தண்ணீரை ஒரு டம்ளர் குடிக்கவும்.

சிறிது சர்க்கரை மற்றும் சீரகத்தை வாயில் போட்டு மெல்லவும். வயிற்று வலி நீங்கும்.

சளிப் பிடித்திருக்கும்போது எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவும்.

வாயில் துர் நாற்றம் உள்ளதா, தினமும் காலையில் எழுந்தவுடன் 5 தம்ளர்கள் தண்ணீர் குடிக்கவும்.

===================================================

மூக்கிலிருந்து ரத்தம் வருவதை நிறுத்த..!!!

மூக்கிலிருந்து ரத்தம் வருவதை நிறுத்த புளிச் சாற்றை மூக்கினுள் விடவும்.

கடுமையான இருமலா? 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் அமுக்கவும்.

சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில்
துளசி இலைகளை போட்டுக் குளிக்கவும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்து வரவும்.

காரட் மற்றும் தக்காளி ஜூஸ் இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சத்து பெருகும்.

வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.